பாவலர்கள்
நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக்
கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள்
மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன்
யான்” என்றார்.
இரண்டாம் பாவலரோ
தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக்
கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை சிறைப்பிடித்து
வைத்திருப்பதைப் போன்று அந்த மெல்லிசை எம் இருதயத்தைக் கட்டி வைத்துள்ளது” என்றார்.