Saturday, September 22, 2012

பாவலர்கள் - கலீல் ஜிப்ரான்



பாவலர்கள்

நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்என்றார்.
  இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் போன்று அந்த மெல்லிசை எம் இருதயத்தைக் கட்டி வைத்துள்ளதுஎன்றார்.
  மூன்றாம் கவிஞரோ, தம் கண்களை மூடிக்கொண்டு தம் கரங்களை மேல் நோக்கி உயர்த்தி, “அவைகளை எம் கரங்களால் தொடுகிறேன். நித்திரைத் தேவதையின் மூச்சு எம் விரல்களின் மீது உராய்ந்துச் செல்வதைப் போன்று அவைகளின் சிறகுகளை உணர்கிறேன்என்றார்.
  பின்னர் அந்த நான்காம் கவிஞரோ எழுந்து அந்தக் கோப்பையை உயரத் தூக்கி, “அந்தோ,, நண்பர்களே! யான் பார்வையிலும், செவியுறுதலிலும், தொடு உணர்விலும் மிகவும் மந்தமாகவே இருக்கிறேன். எம்மால் இம்மதுவின் மணத்தைக் காணவோ, அன்றி அதன் இசையைக் கேட்கவோ, அன்றி அந்தச் சிறகுகளின் படபடப்பையோ உணரவில்லை. ஆனால் நான் மதுவையே உணர்கிறேன். ஆகையால் தற்போது யான் அதைப் பருகியேத்தீர வேண்டும், அப்போதுதான் அது எம் உணர்வுகளைக் கூர்மையாக்கி, எம்மை தங்களுடைய பேரின்ப எல்லைகள் வரை உயர்த்தக்கூடும்என்றார்.
  மேலும் அந்தக் கோப்பையைத் தம்முடைய உதடுகளில் வைத்து அதிலிருந்த மதுவின் இறுதிச் சொட்டு வரை முழுவதுமாக பருகிவிட்டார். மற்ற மூன்று பாவலர்களும், திகைப்பினால் திறந்த வாயுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பார்வையில் தீராத தாகமும், வெறுப்புணர்ச்சியும் இருந்தது.
 


POETS

      Four poets were sitting around a bowl of punch that stood on a table.
      Said the first poet, "Methinks I see with my third eye the fragrance of this wine hovering in space like a cloud of birds in an enchanted forest."
      The second poet raised his head and said, "With my inner ear I can hear those mist-birds singing. And the melody holds my heart as the white rose imprisons the bee within her petals."
      The third poet closed his eyes and stretched his arm upwards, and said, "I touch them with my hand. I feel their wings, like the breath of a sleeping fairy, brushing against my fingers."
      Then the fourth poet rose and lifted up the bowl, and he said, "Alas, friends! I am too dull of sight and of hearing and of touch. I cannot see the fragrance of this wine, nor hear its song, nor feel the beating of its wings. I perceive but the wine itself. Now therefore must I drink it, that it may sharpen my senses and raise me to your blissful heights."
      And putting the bowl to his lips, he drank the punch to the very last drop.
      The three poets, with their mouths open, looked at him aghast, and there was a thirsty yet unlyrical hatred in their eyes.

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...