Wednesday, November 7, 2012

Sand and foam - Khalil Gibran மணலும், நுரையும் (2)



பவள சங்கரி


                                                   Sand and foam - Khalil Gibran (2)

மணலும், நுரையும் (2)

வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான்.
பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன்.
மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

Tuesday, November 6, 2012

நம்பிக்கை ஒளி ! (5)



பவள சங்கரி

பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.

சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும், பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும், நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும், துருதுருவென்ற கண்களும், பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத்திக் கொண்டு அதைத் திரும்பி, திரும்பி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தாவணி கலருக்கு மேட்ச்சாக வளையலும், காது தோடும், கழுத்து மணியும் போட்டுக்கொண்டு , பொட்டும் கூட அதே கலரில் வைத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்க்க ஆச்சரியமாக் இருந்தது.