பவள சங்கரி
புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர்,
கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ
இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள்.
ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு,
சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ
உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில் காட்சியன்றோ!