Sunday, June 22, 2014

கவிக்குயில் சரோஜினி நாயுடு - உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

பவள சங்கரி



புவியெங்கும்  நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர்,
கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ
இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள்.

ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு,
சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ
 உன் விடிவெள்ளியின்  பொன் மாங்குயில்  காட்சியன்றோ!


எங்கனம் காப்பேன் யான் புவியின் விருப்பையும், செருக்கையும் 
எவர் அறிவார் ஒளிர்ந்து சறுக்குமந்த வெள்ளிச் சிறகுகளையும் ,
மாலைநேரம் கூட்டில்  அடையும் அந்த மாடப்புறாக்களையும்?

எங்கனம் காப்பேன்  உரத்தக் களைப்பிலிருந்து உலகை யான்,
அந்திக் களஞ்சியத்தில் கனவு காண்பவனை ஆசீர்வதிக்கலாமே
கனிந்த அமைதியின் மென்மையான அரிக்கட்டுகளால்?

மந்தமானதைக் கட்டியங்கூறும் விதியைக் கவனம்கொளலாமா ,
அன்றி வதந்திகளான  தனிமையையும், சோர்வையும் 
கல்லறையின் நிசப்தம் மற்றும் தொன்ம பயங்கரமதையும் 
விரட்டியடிக்கலாமா சொல்?

மகிழ்ந்த என்  இதயம்  பருகியதில் நனைந்துக் கிடக்கிறது உன்னோடு
ஓ பரவசமான வாழ்வின் உள்ளார்ந்த தென்றலே!
ஓ நித்தியத்தின் நெருங்கிய சாரமே!


In Salutation to the Eternal Peace

Men say the world is full of fear and hate,
And all life's ripening harvest-fields await
The restless sickle of relentless fate.

But I, sweet Soul, rejoice that I was born,
When from the climbing terraces of corn
I watch the golden orioles of Thy morn.

What care I for the world's desire and pride,
Who know the silver wings that gleam and glide,
The homing pigeons of Thine eventide?

What care I for the world's loud weariness,
Who dream in twilight granaries Thou dost bless
With delicate sheaves of mellow silences?

Say, shall I heed dull presages of doom,
Or dread the rumoured loneliness and gloom,
The mute and mythic terror of the tomb?

For my glad heart is drunk and drenched with Thee,
O inmost wind of living ecstasy!
O intimate essence of eternity! 

Sarojini Naidu

நன்றி : திண்ணை வெளியீடு

1 comment:

  1. மென்மையான அரிக்கட்டுகளால்......

    பாராட்டுக்கள்...

    ReplyDelete