Posts

Showing posts from 2012

மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!

Image
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!! வல்லமைக்கு நன்றி நேர்காணல் – பவள சங்கரி புகழ் கண்டு மயங்காதே புகழ் தேடிச் செல்லாதே புகழாரம் பாடாதே. இன்னல் கண்டு கலங்காதே இகழ்ச்சி கண்டு பதராதே இகழ்ந்துரைக்க எண்ணாதே தியானம் என்றால் என்ன? “எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.” “தியானம் மூலம் தம் குருதேவர் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உ

வள்ளியம்மை

பவள சங்கரி கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி , காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து , இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன் , ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர் , இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர் , குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் மத்தியில் தம்முடைய மனைவி வள்ளியம்மை நாச்சியார் என்கிற வள்ளியும் அமர்ந்திருப்பதைக் கணவன் முத்துமணி. உற்று நோக்கியவாறு காத்திருந்தான்.
Image
அன்பு நண்பர்களே, பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொகுப்பை பெருமைமிகு, ‘ கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய நான்கு புத்தகங்களை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள் என்பதை மன  நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நண்பர்கள் முடிந்தவர்கள் வாங்கிப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைக் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதோ முதலாவதாக ‘விடியலின் வேர்கள்’ . வரலாற்றுப் புதின ஆசிரியர் திரு திவாகர் அவர்களின் சிறப்பானதொரு அணிந்துரையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

வாழ்வே தவமாய்!

    “வீணையடி நீ எனக்கு,     மேவும் விரல் நானுனக்கு     பூணும் வடம் நீ எனக்கு,     புது வயிரம் நானுனக்கு”  பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் பொழிவது உறுதி என்று பிரபல இசை விமர்சக வித்தகர் சுப்புடுவிடமே தம் இளம் வயதிலேயே விருது பெற்ற பெருமையுடையவள். இன்று காதோரம் சில நரை முடிகள் எட்டிப் பார்க்கும பருவத்திலும், குரலிலும், மீட்டும் இசையிலும் சற்றும் தொய்வில்லாத அதே வளம் கண்டு வணங்காதவர் இலர்.  

நம்பிக்கை ஒளி! (10)

நம்பிக்கை ஒளி! (9) ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்..  இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா...  எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வ

தாமிர சபை

Image
பவள சங்கரி காந்திமதியம்மன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம் மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை தல விருட்சம்    :     மூங்கில் தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன் சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம். திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்

நம்பிக்கை ஒளி! (9)

பவள சங்கரி நம்பிக்கைஒளி (8) சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில் , ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும் , படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது. " மாலு , மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா ?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த , உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை உணர்ந்து , “ நல்ல காய்ச்சல் இருக்கும் போல இருக்கு மாலு. வாங்க டாக்டர்கிட்ட போய் வரலாம். நானும் வேண்டுமானால் இன்று ஆபீசிற்கு லீவ் போட்டுவிடுகிறேன் ” என்றாள். “ அதெல்லாம் வேண்டாம் ஆர்த்தி , ’ மெட்டாசின் ’ மாத்திரை இருக்கு போட்டுகிட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும். நீங்க அனாவசியமா லீவ் எல்லாம் போட வேண்டாம். கிளம்புங்க ஆர்த்தி , ... இவ்வளவு அக்கறையா சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ் ”

மீண்டுமொரு சரித்திரம்

Image
காத்திருக்கிறாள் கன்னியவள் கனிவான மணமகனுக்காக... கண்ணில் ஓர் காதலுடன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபமதில்...

Sand and Foam - Khalil Gibran (5)

  ( வாலிகையும்) மணலும் , நுரையும்! ( 5) பவள சங்கரி புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம். சோகத்தில் சோர்ந்த இதயமது , இன்பமான இதயத்துடன் , இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு. எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ , அல்லது மேதைகளை , சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ , அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ , அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து , எழுப்பி , காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.

நம்பிக்கை ஒளி! (8)

பவள சங்கரி நம்பிக்கை ஒளி!(7) சுப்ரஜா , வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் , கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. ’ பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ’ என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர் , கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும் , கேட்டதும் உடனே கிடைக்கும் வரமும் பெற்றவள். ஆயினும் தான் வளர , வளர கூடவே   சேர்ந்து தம் செல்வச் செருக்கின் காரணமான   குறும்புகளும் அதிகமாகிக் கொண்டிருந்தது ஒரு நிலையில் அது தந்தைக்கு வேதனை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏழ்மையின் துயர் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவள் , அதன் பிடியில் சிக்கித் தவிப்பவர்களின் வேதனையை உணர முடியாமல் , மேலும் ரணப்படுத்தக் கூடியவள். தாயின் அதிகப்படியான செல்லத்தினால் எதையுமே தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருப்பவள். மகளின் திருமண வயது வந்தபோதுதான் தந்தைக்கு அவள் எதி

SAND AND FOAM (Khalil Gibran) - மணலும், நுரையும்! (4)

பவள சங்கரி செவியொன்றைத் தாரும் எமக்கு , குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு. நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு ; நம் இருதயமோ ஓர் சிற்றாறு. நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ ? நீவிர் , பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும் , உண்மையில் , பின்னரும் , வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான உம் சுயம் நோக்கியும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறீர் நீவிர்.

நம்பிக்கை ஒளி! (7)

பவள சங்கரி நம்பிக்கை ஒளி! (6) நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள் , தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. ‘ தான் ’ என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ ? எது எப்படியோ , மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை , சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது சரி என்ற முடிவிற்கு வர தீர யோசித்துத்தான் செயல்படுகிறாள். ஆனாலும் அனுபவம் இல்லாத சில விசயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமே மிஞ்சுகிறது. உற்ற தோழமையோ , தக்க ஆலோசனை வழங்கக்கூடிய உறவோ இல்லாத வேதனை அப்போதுதான் வெளிச்சம் கொண்டது. தாயையும் , தமக்கையையும் நினைத்து மனம் வேதனையடைந்ததுதான் கண்ட பலன்.

பாதையும் பயணமும்! - வெற்றி நடை தீபாவளி மலரில்!

Image
பாதையும் பயணமும்! விரிநத பாதைகள் இரண்டும் தெளிவாகத்தான் இருந்தது தோற்றத்தில். ஒரே நேரத்தில் இரு பயணம் சாத்தியமில்லை. உற்று உற்று நோக்கி விலக்கியது கீழான கணக்கில். அடுத்தொன்று சிறந்ததுதானா? நடையைக் கட்டினேன் சந்தேகத்துடனே. சென்ற தொலைவும் அதிகமில்லை. உள்ளிருந்து உறுத்திய சந்தேகமுள் தேர்ந்தெடுத்ததைத் தவறென்று குத்தியது. விலக்கிய அடுத்தொன்றை ஏற்கத் துடித்த மனம் கடந்து போன காலத்தைக் காட்டி அச்சமூட்டியது. தத்தித்தத்தி குழந்தையாய் நடைபயின்று தளர்வுடன் வாடி நிற்கும் நேரம் சாலை இரண்டும் இணையும் முகட்டில் பூத்துக் குலுங்கும் பூவின் மணம் அலைபாய்ந்த மனமும் கடந்து வந்த பாதையை விலக்கி மற்றொன்றை நோக்கி நகர்ந்தது. தொலைத்த காலத்தினூடே வழியே வழியை உணர்த்த மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. போதியாய் புரிய வைத்தது... தவற விட்டது பாதையை அல்லவென்று! நன்றி : வெற்றி நடை இதழ்

சொர்க்க வாசல்! - இன் & அவுட் சென்னை இதழில்

Image
சுவர்க்க வாசல்! அகக் கண்கள் திறந்து காட்சிகள் விரிகின்றன. அழகான நீர் நிலையைக் காண்கிறேன்! இரு புறமும் கொத்துக் கொத்தாக மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள். நீலமேகக் கூரையில் வெண்பஞ்சுப் பொதிகள் வெளிர்நீல மலைக் குன்றுகளில் பனிபடர்ந்த மரக் கன்றுகள்! அந்தி மயங்கும் நேரம் கூட்டில் அடையப் போகும் புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம் மனம் அமைதியில் திளைத்த இன்பம் அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு சின்ன அறையில் நிறைமனதுடன் நான்! குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து பசுமையான வயல் வெளி நாணம். கொண்ட பயிர்களின் மோனம் கரையோரத்து மலர்களின் நறுமணம் குடில்........அழகான குடில் எளிமையான மனிதரும் அழகான புள்ளினங்களும் பகிர்ந்து வாழும் அழகிய குடில் குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை என் சாதி இல்லை - என் மதம் இல்லை என் இனம் கூட இல்லை  பெயர் மட்டுமே அடையாளமாக  அன்பு மட்டுமே ஆதாரமாக இயற்கையின் இனிமையைக் கொண்டாடும் இனமாக அந்த அழகைப் பகிர்ந்து பருகும் இனமாக திறந்த இதயத்துடன், பரந்த மனதுடன் வாழும் இனம் அங்கு என் அமைதியான ஆனந்தமான வாழ்க்கை! நன்றி - இன் & அவுட் சென்னை இதழுக்கு.

துர்காபாய் தேஷ்முக்

துர்காபாய் ஒரு பெண்ணல்ல் அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி) (சரோஜினி நாயுடு) ”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி. அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை  இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ப

’தங்க மங்கை’ தீபாவளி சிறப்பிதழில் என் சிறுகதை!

Image
அன்பு நண்பர்களே, ’தங்க மங்கை’ தீபாவளி மலரில் ‘கருணையினால் அல்ல’ என்ற என்னுடைய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. வாசித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். ‘ கருணையினால் அல்ல’ கதையின் சுட்டி இதோ: நன்றி, அன்புடன் பவள சங்கரி

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! ( 3) ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம் , முதல் முறையாக அவளை , சாதுவான மங்கையாகக் கண்டாலும்    அவள உச்சத்தை எட்டக்கூடும் இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன். மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

தீபாவளிப் பரிசு!

  அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! அன்புடன் பவள சங்கரி சிறுகதை தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ , பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம். “ எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம் ” என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது குழந்தைகளுக்கு துணி எடுப்பீர்கள் என்று சண்டை போட்ட மகராசியா இவள் என்று ஆச்சரியமாக இருந்தது. பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலையில் இருந்த காலம் அது. போனஸ் வருவதற்குள் எப்போது வரும் என்று கேட்டு தொணப்பி எடுத்துவிடுவாள்.  

நம்பிக்கை ஒளி! (6)

                                பவள சங்கரி நம்பிக்கை ஒளி! (5) காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் வழியே இல்லாமல் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துவிடுகிறது. நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் மட்டும் கண்டெடுத்துக் கொண்டால் அதிலிருந்து எப்படியும் மீண்டு தப்பித்து வந்துவிடலாம். சுழட்டியடித்த சுனாமியும் ஒரு நேரம் அடங்கித்தானே ஆகவேண்டும்.... ஆசிரியர்களுக்கான ஓய்வறையினுள் நீண்ட மேசையின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் , முன் நெற்றி வழுக்கையாக , நெற்றி நிறைய திருநீறு பட்டையாகப் போட்டுக் கொண்டு இடையில் அழகாக குங்குமப் பொட்டும் வைத்துக்

Sand and foam - Khalil Gibran மணலும், நுரையும் (2)

பவள சங்கரி                                                    Sand and foam - Khalil Gibran (2) மணலும் , நுரையும் ( 2) வெகு நேரம் , அந்த , பருவ மாற்றங்களும்   அறியாமல் , அமைதியாக , எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான். பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால் , யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும் , நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன். மேலும் தற்போது அந்த பகலவனோ , தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

நம்பிக்கை ஒளி ! (5)

  நம்பிக்கை ஒளி! ( 4 ) பவள சங்கரி பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும் , வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை , ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி , நான் முந்தி என்று ஒரே கூத்துதான். சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு , காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும் , பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும் , நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும் , துருதுருவென்ற கண்களும் , பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத

மணலும், நுரையும் - கலீல் ஜிப்ரான்

Image
SAND AND FOAM - KHALIL GIBRAN (1926)     "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you." மணலும், நுரையும் அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே, நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான் உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும், மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும். ஆயினும் அந்தக் கடலும், கரையும் என்றும் நிரந்தரமாய் இருக்கும்.

நம்பிக்கை ஒளி! (4)

பவள சங்கரி நம்பிக்கை ஒளி (3) உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும் , மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது.... அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள் , கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை நினைவில் கொண்டுவந்தாள். பளிச்சென்ற ஒரு ஒளியுடன் ஒரு முகம் நினைவில் தோன்றியது. அது தன் தாயின் முகமோ அல்லது அக்காவின் முகமோ என்று தெரியாதவாறு இரண்டும் கலந்த ஒரு தோற்றமாகக் காட்சியளித்தது. தெய்வமாக இருந்து தன்னை எப்படியும் வழிநடத்துவாள் என்ற நம்பிக்கையும் தெம்பைக் கொடுத்தது. மறக்க நினைப்பதைவிட மனக்கோவிலில் தெய்வமாக்கி பூஜிப்பது எளிதாகவே இருந்தது! வாழ்ந்தாக வேண்டுமே... அதற்கு ஒரு பிடிமானமும் தேவையாக இருக்கிறதே... சின்னம்மா மாலுவின் விடுமுறைக்கான காரணத்தை நேரில் சென்று அவள் வேலை பார்க்கும் பள்ளியில் சொல்லிவ

நவராத்திரி கொழுக்கட்டை

Image
அன்பு நட்புக்களே, நவராத்திரி எல்லோரும் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள்.. ஆயுத பூஜைக்கு நம் ஊரில் பொறி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவுள், நாட்டுச் சக்கரை என அனைத்தும் போட்டு கலந்து வைத்து படையல் போட்டு அதை அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். எப்படியும் நிறைய மீந்து போகும். இனிப்பு இருப்பதால் அதனை வறுத்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்த முடியாது. விரைவில் நமத்தும் போய்விடும். இந்த முறை என் சிறு மூளையைக் கசக்கி ஒரு திட்டம் போட்டேன்.. ஒரு புது ரெசிப்பி ரெடி. அதான் நவராத்திரி கொழுக்கட்டை. செய்வதும் மிகவும் எளிது. பொறி, அவுள், பொட்டுக்கடலை, நிலக்கடலை, நாட்டுச்சக்கரை அனைத்தும் கலந்த கலவையை மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு போதவில்லையென்றால் மேலும் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். இந்தக் கலவையுடன் ,தேங்காய் பல்லு, பல்லாக நறுக்கி அதனை சிறிது நெய்விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் அதனை பொறி கலவையில் கொட்டி நன்கு பிசையவும். தேவையானால் கொஞ்சம் தேங்காய் தண்ணீர் அல்லது தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இட்லி பாத்தி

நீதானா அந்த பொன்வண்டு ?

சிலந்தி பின்னிய வலையாய் சிக்குண்டுக் கிடந்த  பொன்வண்டு; கட்டழகாய் காலநேரமில்லாமல் மின்னும் அழகு காட்டியபடி! ஆசை வண்டின் கானமும் மினுமினுப்பும் கரிசனமாய் அரவணைக்கும்! மென்சிறகின் தழுவல் இங்கிதமாய் சிறைப்பிடிக்க சங்கீதமாய் மனம் மயங்கும்! மெய்சிலிர்க்கும் ஆனந்தம் அளப்பரிய குதூகலம் சுவாசமெல்லாம் சுகந்தம்! எனக்கான பொன்வண்டு எனக்காக ரீங்காரமிட்டு கனவிலும் கட்டித்தழுவுகிறது! வண்டு தரும் உறவால் கொண்டு வரும் புத்துணர்வால் இரவும், பகலும் தொலைகிறது! சிறகுவிரித்து சுற்றிவரும்வேளை இதழ்விரித்து கிறங்கிக்கிடக்கும் தேன்நிறைந்த மலரும் நானே! தூர இருந்து துடிக்கச்செய்து, தூக்கம் கவர்ந்து துவளச்செய்து, மணம் கவரும் மாயமான நீதானா அந்த பொன்வண்டு?!? நன்றி : மணியோசை இதழ் வெளியீடு http://www.maniyosai.com/cms/literature/poem/neethaana-antha-ponvandu

நித்திலம் - கலீல் ஜிப்ரான்

Image
நித்திலம் சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது.. மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன். அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு ஒன்று தம்முள் ஏதுமிருந்தும் இல்லாததனால் சுகமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாகக் கூறிய அச்சிப்பியை நோக்கி, “ ஆம், நீவிர் சுகமாகவும், நிறைவாகவும் இருப்பினும் உம் அண்மையிலிருப்பவர் சுமப்பதோ சுகமான சுமையானதொரு பேரழகான நித்திலமன்றோ  “ என்றது. ஆம், வலியையும் வேதனையையும் சுமந்தாலும், சுமப்பது முத்தல்லவோ ? 2 காதல் கீதம் . ஒரு முறை கவிஞனொருவன் காதல் கவியொன்று புனைந்து வைத்தான். அதிரம்மியமாக அமைந்துவிட்ட, கீதமதனைப் பிரதிகள் பலவாக உருவாக்கியவன்,  ஆடவர், மகளிர் என இரு பாலரான நண்பர்க

சோகத்தின் சுகம் !

பவள சங்கரி The Madman - when my sorrow was born - Khalil gibran எம் துக்கம் செனித்தபோது (சோகத்தின் சுகம்)   எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும்  பாசத்தோடு பராமரித்தேனதை.     மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது   நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான ஞாலத்தையும் நேசித்தோம். இந்தத் துக்கமும் மெல்லிதயம் கொண்டிருந்தாலும், எம்முடையதும் துக்கத்தின்மீது கருணையுடனே இருந்தது.    எம் துக்கமும், யானும் , அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தத் துக்கம் சொற்திறம் கொண்ட இனிய நாவைக் கொண்டிருந்ததாலும், , எம்முடையதும் துக்கத்துடன் அதே சொல்லாற்றலை வெளிப்படுத்தி இருந்ததாலும், எமதருமை ஞான்றுக்கும் சிறகு முளைத்திருந்தது, மற்றும் எங்கள் சுரசனிகளும் சுவனங்களால் கட்டுண்டுக் கிடந்தது.  எம் துக்கமும் யானுமென நாங்களிருவரும் இணைந்து இசை  பாடிக்கொண்டிருந்தபோது, எங்களின் அண்டை அயலார் தத்தம் சாளரங்களின் அருகமர்ந்து, அம்பரத்தினும் ஆழமானதும் மற்றும் விசித்திரம