Tuesday, November 27, 2012

Sand and Foam - Khalil Gibran (5)



 (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

பவள சங்கரி

புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம்.

சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு.

எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.


நடந்து செல்லும் அனைவருடனும்  நடப்பேன் யானும். கடந்து செல்லும் ஊர்வலங்களைக் காணபதற்காக அசையாது நிற்க மாட்டேன் யான்.

உமக்குச் சேவகம் செய்பவருக்கு, பொன்னைக் காட்டிலும் உயர்வாக கடமைப்பட்டிருப்பாயாக. அவருக்கு உம் நல்லிதயத்தோடு அளியும் அல்லது சேவை செய்யும்.

இல்லை, நாம் வாளாமையற்றதோர் வாழ்ச்சியினை வாழவில்லை. நம் எலும்புகளினால் கோட்டைகள் எழுப்பவில்லையா அவர்கள்?

நாம் குறிப்பிட்ட மற்றும் பகுக்கப்பட்ட நிலையிலோ இல்லாமலிருக்கலாமே. அந்தக் கவிவாணனின் மனமும் மற்றுமந்த தேளின் கொடுக்கும்கூட, அதே அம்புவியின் அற்புதத்திலேயே மலருகின்றது.

பறக்கும் நாகம் ஒவ்வொன்றும், தம்மைக் கொல்லும் ஒரு செயிண்ட ஜார்ஜுக்குப் பிறப்பளித்துக் கொண்டுதானிருக்கிறது.

வானப்பிரியைகளென்பது, நிச்சலை, (பூமி) வானகத்தின் மீது எழுதும் கவிதைகளாகும். நாம் அவைகளைக் கவிழ்த்துப் போட்டு, நம் வெறுமைகளைப் பதிவிடும் வெற்றுக் காகிதங்களாக மாற்றி விடுகிறோம்.

நீவிர் எழுதுவதில் அக்கறை செலுத்த வேண்டும். (நீவிர் ஏன் எழுத வேண்டும் என்பதை சாதுக்கள் மட்டுமே அறிவர்) பேரறிவும், கலையுணர்வும் மற்றும் மந்திர சாலமும் உமக்குத் தேவை - சொல்லிசையின் ஞானம், பேதமையுடனிருக்கும் கலையுணர்வு மற்றும் உம்முடைய வாசகர்களிடம் அன்பு செலுத்தும் மந்திர வித்தையும் உமக்குத் தேவை.

அவர்கள் தங்கள் எழுத்தாணிகளை நம் இதயத்தினுள் முக்கித் தங்களை ஊக்குவித்துக் கொள்ளுவதாக எண்ணுகிறார்கள்.

மரமொன்று தம் சுயசரிதையை வரைய நேர்ந்தால் அது ஓரினத்தின் வரலாறை ஒத்திராமல் இருப்பதில்லை.

கவிதைப் புனையும் வல்லமைக்கும் மற்றும் புனையாத கவிதையின் பேரானந்தத்திற்கும் இடையிலானதை தேர்ந்தெடுக்க வேண்டிவந்தால், பேரானந்தத்தையே தெரிவு செய்வேன் யான். அதுவே நல்லதொரு கவிதை. ஆயினும் நீவிரும் மற்றும் எம் அனைத்து அண்டை அயலாரும், யாம் எஞ்ஞான்றும் தீயதொன்றையே  தெரிவு செய்வதாகவே ஒப்புக்கொள்கின்றனர்.

கவிதையென்பது கருத்தாடலன்று. அது குறுதி வடியும் காயத்திலிருந்தோ அல்லது புன்னகைத் தவழும் வாயிலிருந்தோ மலருமோர்  கீதம்..

வார்த்தைகள் காலவரையற்றவைகள். நீவிர் அதன் காலவரையற்ற தன்மையுடனான அறிவுடனேயே அதனைச் சொல்லவோ அன்றி எழுதவோ வேண்டும்.

ஒரு பாவலன் என்பவன் தம் அரண்மனைச் சாம்பலினூடே அமர்ந்து கொண்டு, அந்தச் சாமபலிலிருந்து ஒரு படிமத்தை நாகரீகமாக்க முயலுமொரு முடியிழந்த அரசன்

கவிதை என்பது அகராதியின் கடுமையான மோதல்களுடான மகிழ்ச்சி, வேதனை மற்றும் அதிசயம் ஆகியவற்றின் மொத்த உருவம்.

வாளாமையில் ஓர் பாவலன் தம் இதயத்தின் கீதங்களின் தாயைத் தேடுபவன்.

ஒருமுறை ஓர் பாவலனிடம், “நீர் இறக்கும் வரை உமது மதிப்பை அறியப்போவதில்லை நாங்கள்என்றேன்.

மேலும் அவன், “ஆம் நிமிலனம் (இறப்பு) மட்டுமே என்றும் உண்மை விளம்பி. மேலும் உண்மையிலேயே நீவிர் எம் மகிமையை உணர்ந்திருப்பீராயின், யாம் அதனை எம் நாவைக் காட்டிலும் எம் இதயத்திலேயே அதிகமாகக் கொள்வேன், மற்றும் எம் கரங்களைவிட என் இச்சையிலேயே அதிகம் கொள்வேன்என்று பதிலிறுத்தான்.

 பாலையாய்ப்போன இருதயத்தினூடே தனிமையில் இருப்பினும் நீவிர் சௌந்தரியத்தைப் பாடுவீராயின் அதனை இரசிப்போர் கூட்டமும் உமக்குக் கிடைப்பர்.

கவிதை என்பது மனோவசியத்திற்கான ஞானம்
ஞானம் என்பதோ மனதினூடே இசைக்கும் கவிதை.
நம்மால் ஒரு மனிதனின் மனதை வசியப்படுத்த முடியுமானால், மேலும் அதே நேரம் அவன் மனதில் நாம் இனிய கீதமிசைக்கவும் முடியும்.
பின்னர் மெய்ம்மையில் அவன் இறை நிழலில் வாழக்கூடும்.
அகத்தூண்டுதல் எஞ்ஞான்றும் இசைக்கும்; உத்வேகம் எப்பொழுதும் விளக்கமளிக்காது.

நாமே நித்திரை கொள்ளும் வகையிலேயே பெரும்பாலும் நம் குழந்தைகளுக்காக நாம் பாடும் அந்தத் தாலாட்டு உள்ளது..

நம்முடைய அனைத்து வார்த்தைகளும் , அந்த மன விருந்திலிருந்து வீழுகின்ற துகள்களே.

எண்ணலென்பது என்றும் கவிதைக்குத் தடைக்கல்.

எவரொருவர் நம் அமைதிக்காகப் பாடுகிறாரோ அவரேயோர் மீப்பெரும் பாடகர்.

 உணவினால் உமது வாய் நிறைந்து கிடந்தால் உம்மால் எங்கனம் இசைபாட இயலும்?

உமது கரங்கள் பொன்னால் நிறைந்து கிடந்தால் எங்கனம் அவைகளை உயர்த்தி வாழ்த்தக்கூடும் உம்மால்?

பாடும் பறவையது தம் காதல் கீதத்தை இசைக்கும் அவ்வினிய தருணமதில் முள் கொண்டு தம் மார்பைத் துளைத்துக் கொள்கிறதென்கிறார்கள் அவர்கள்.
அங்கனமே நாமும் செய்வோமே. வேறு எவ்வாறு நாம் இசைக்கப் போகிறோம்?


Sand and Foam - Khalil Gibran (5)


A woman may veil her face with a smile.

How noble is the sad heart who would sing a joyous song with joyous hearts.

He who would understand a woman, or dissect genius, or solve the mystery of silence is the very man who would wake from a beautiful dream to sit at a breakfast table.

I would walk with all those who walk. I would not stand still to watch the procession passing by.

You owe more than gold to him who serves you. Give him of your heart or serve him.

Nay, we have not lived in vain. Have they not built towers of our bones?

Let us not be particular and sectional. The poet's mind and the scorpion's tail rise in glory from the same earth.

Every dragon gives birth to a St. George who slays it.

Trees are poems that the earth writes upon the sky. We fell them down and turn them into paper that we may record our emptiness.

Should you care to write (and only the saints know why you should) you must needs have knowledge and art and music -- the knowledge of the music of words, the art of being artless, and the magic of loving your readers.

They dip their pens in our hearts and think they are inspired.

Should a tree write its autobiography it would not be unlike the history of a race.

If I were to choose between the power of writing a poem and the ecstasy of a poem unwritten, I would choose the ecstasy. It is better poetry.
But you and all my neighbors agree that I always choose badly.

Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.

Words are timeless. You should utter them or write them with a knowledge of their timelessness.

A POET IS a dethroned king sitting among the ashes of his palace trying to fashion an image out of the ashes.

Poetry is a deal of joy and pain and wonder, with a dash of the dictionary.

In vain shall a poet seek the mother of the songs of his heart.

Once I said to a poet, "We shall not know your worth until you die."
And he answered saying, "Yes, death is always the revealer. And if indeed you would know my worth it is that I have more in my heart than upon my tongue, and more in my desire than in my hand."

If you sing of beauty though alone in the heart of the desert you will have an audience.

Poetry is wisdom that enchants the heart.
Wisdom is poetry that sings in the mind.
If we could enchant man's heart and at the same time sing in his mind,
Then in truth he would live in the shadow of God.

Inspiration will always sing; inspiration will never explain.

We often sing lullabies to our children that we ourselves may sleep.

All our words are but crumbs that fall down from the feast of the mind.

Thinking is always the stumbling stone to poetry.

A great singer is he who sings our silences.

How can you sing if your mouth be filled with food?
How shall your hand be raised in blessing if it is filled with gold?

They say the nightingale pierces his bosom with a thorn when he sings his love song.
So do we all. How else should we sing?

To be contd:

நன்றி : திண்ணை

1 comment:

  1. நிறைய புதுச் சொற்கள்.

    //வானப்பிரியைகளென்பது, நிச்சலை, ...

    பூமி வானில் தீட்டிய சித்திரம் மரங்கள்.
    அவற்றை வீழ்த்திக் காகிதத்தில் நம் வெறுமையைத் தீட்டுகிறோம்.

    எனக்கென்னவோ இங்கே காகிதமாக மாற்றுவதை விட, வெறுமையைத் தீட்டுவதே வரிகளின் வலியாகத் தோன்றுகிறது. ஒரு கலைஞனின் கலையைப் புரட்டிப் போட்டு வெறுமையைத் தீட்டுவது எத்தனை கொடிய வலி!

    சில வரிகளைப் படிக்கையில் உங்கள் மொழியாக்க முயற்சிக்கும் மீறி.. இது தமிழுக்கு ஒத்துவராத ஆங்கிலப் படைப்போ என்று தோன்றுகிறது.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...