Saturday, May 17, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (5)







நீ சிந்தும் சோகக் கண்ணீர் முத்துக்களே,  கெக்கலித்தல்  மற்றும் உரத்த பரிகாசச் சிரிப்பைக் காட்டிலும் இனிமையானவை!

வைராக்கியம் என்பது ஓர் எரிமலை. அதன் உச்சியில் உறுதியின்மை என்ற பசும்புல் முளைக்காது!

’கையளவு கடற்கரை மணல்’ - கலீல் ஜிப்ரான்

Thursday, May 15, 2014

ஆத்ம இராகம்! (இலக்கியப் பூக்கள் -10 அகில உலக வானொலி)


பவள சங்கரி



மெல்லத் திறந்ததென் அகக் கண்கள்!
பசுமையாய் விரிந்த காட்சிகள் .
அம் மெல் அல்லி பூத்த தாமரைத் தடாகம்!

 கொத்துக் கொத்தாய் பூத்துக்குலுங்கும்
 சூல்கொண்ட குறுஞ்செடிகளின் சூழ்தல்
நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்….