Posts

Showing posts from July 20, 2014

கால காலேசுவரர் சன்னதி

Image
பவள சங்கரி


நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர்நொடிக்குள் நீக்கிஎன்னை ஒண்போரூர் ஐயாஉன்  சீர்அடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.                                        - ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்

பூமாதேவி செய்த தவம்

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

Image
பவள சங்கரிமூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை
தல விருட்சம்  : வேம்பு மரம்
தீர்த்தம்     : வெல்லகுளம்
பழமை   : 500 ஆண்டுகள்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர்                              : புன்னைநல்லூர்
மாவட்டம்                 : தஞ்சாவூர்
மாநிலம்                    : தமிழ்நாடு


தல சிறப்பு  : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார். 
தல வரலாறு  :  நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.

ஆடி ரதம்

Image
பவள சங்கரிஆடிரதமேறி ஆனந்தமாய் வலம்வரும் அன்னையே பாடியுனை பதம்பரவி போற்றுவேன் உன்பிள்ளையே நாடியுனை வாழும் வரமருளும் மாமகாசக்தியே வாடியயெனை மீளும் வழிகாட்டி தாங்குவாயே!!

டாப் டக்கர்

பவள சங்கரி

மச்சி,  எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா..  ஷாப்பிங் போகனும்னு சொன்னேனில்ல..  
எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி...”
“இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் உன்னோடது மாதிரி ஒரு நோக்கியா போன் வாங்கலாம்னு பாக்குறேன்”
நோக்கியா வேண்டாம்டா. மைக்ரோசாஃட்காரன் நோக்கியாவை வாங்குனதிலிருந்து இன்னும் சரியா செட்டாகலடா...  எல்லோரும் இப்ப அதைவிட்டு சேம்சங்க் போயிட்டிருக்காங்க. அதான் இப்ப மார்கெட்ல டாப் டக்கரா போகுது. நான் இப்ப சாம்சங்க் கம்பெனிக்கு அடுத்த ஸ்டாப்புலதான் பஸ்ஸீக்கு நிக்கறேன். நீ கிளம்பி வந்துடு. நான் அப்படியே பொடி நடையா அதுக்குள்ள வந்து சேந்துக்கறேன்.. சரியா”
“ம்ம்.. அப்படியா சொல்ற..  ஓகேடா மச்சி.       இதோ இப்ப உடனே கிளம்பறேன். வந்து நம்ம உடுப்பி கிருஷ்ணா பவன்ல சூப்பர் நெய் ரோஸ்ட் வாங்கித் தறேன்”
“…