பவள சங்கரி
ஆடிரதமேறி ஆனந்தமாய் வலம்வரும் அன்னையே
பாடியுனை பதம்பரவி போற்றுவேன் உன்பிள்ளையே
நாடியுனை வாழும் வரமருளும் மாமகாசக்தியே
திருவடிச் சதங்கை ஜல் ஜல்லென்று சிணுங்க
அருள்வடிவான அன்னை ஆடிவரும் வேளை
கருவறையில் கற்பகமாய் காட்சியளித்து
அருமறைகள் தானருளி வேதப்பொருளானாளே!!!
தித்திக்கும் முருகன் பெயரை உச்சரித்தால்
எத்திக்கும் தூய்மையே மணக்கும்.
எட்டுத்திக்கும் எய்தாமல் காக்கும் வேலே
முட்டித்தாவும் மனமதையும் முனைந்து காக்கும் மாலே
பட்டுத்தெளியும் சிந்தையதையும் பரிவுடன் காத்து
தயவுடன் தரணியெல்லாம் நிறைபவனே.
கற்சிலையாய் நின்றாலும் கருணைமழையாய்
பொற்பதம் காட்டி வாழ்விப்போனே வண்ணமயில்வாகனனே!!
ஆகா....! அற்புதமான படங்கள்...!
ReplyDelete