தமிழகம் என்றழைக்கப்படும் முக்கோண
வடிவிலான நம் நாட்டைச் சூழ்ந்துள்ள முக்கடலை ஆய்வு செய்தால் தமிழனின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்யலாம் உலக வரலாற்றில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனித சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளில்
முக்கியமான ஒன்று என்றால் அது வணிகப் பரிமாற்றங்களே. மாற்றங்கள்,
முன்னேற்றங்கள் என்று வணிகம் புதிய பரிமாணங்களை அடையும்போது,
அத்தகைய வணிகப் பரிமாற்றங்கள் உள் நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு
பகுதிகளிலும் வெகு இயல்பாக நிகழ்ந்தன. தமிழகத்தில் அன்று மரக்கலங்களின்
உரிமையாளர்களும், மரக்கலங்களின் தலைவர்களும், பெரும் வணிகர்களும் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
பழங்குடிகளாக வாழ்ந்திருந்த தமிழர்கள் தங்களுடைய திரைகடலோடித் திரவியம்
தேடும் நோக்கத்திற்காக நிலவழி நீர்வழி கடல்வழி என இணைப்புப் பாதையில் பயணித்த வரலாறு
பொ.ச.மு. 3000ஆம்
ஆண்டுக்கும் முற்பட்டது என்று வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகிறார்.
நாகரீகங்கள் வளர்ச்சியடைந்த
தருணத்தில் கற்கால மனிதனின் வாழ்வில் ஏற்பட்ட புரட்சி சமூக மாற்றங்களின் வளர்ச்சி ஆனது. இத்தகைய ஆக்கபூர்வமான மாற்றங்கள் நடக்கத் தொடங்கியது
தோராயமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கான
ஆதாரங்கள் நம்மிடம், சுவரோவியங்கள், சுடுமண்
பானை ஓடுகள், பெருங்கற்படை சின்னங்கள் போன்ற பலவற்றை குறிப்பிடமுடியும்.
வெண்கலக் காலத்தின், ஐரோப்பா, ஆசிய ஐரோப்பா (ஐரேசியா) மற்றும்
ஆசியாவின் வணிக வளர்ச்சியும் அதன் மேலாண்மையும், பாதுகாப்பும்
பெருமளவில் ஆவணப்படுத்தப்பட்டன.
இந்த வணிகப் பரிமாற்றங்கள்
பொருளாதார முன்னேற்றங்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையாகவே பல்வேறு சமூக அமைப்புகளின் உறவுகளுக்கு
இடையிலான இயக்கவியல்களை மேலும் எளிதாக்கின என்பதே நிதர்சனம். மிக வித்தியாசமான பல்வேறு கலாச்சார பண்புக்கூறுகளுக்கு இடையே ஊடாடும் வணிகச்
செயல்முறைகள் ஆக்கபூர்வமான கருத்துகள், தொழில்நுட்ப அறிவுகள்
போன்ற அனைத்தையும் சேர்த்தே பரிமாறிக் கொள்ள முடிந்திருக்கிறது. அந்த வகையில் இதன் மூலம் பெருமளவிலான சமூகப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படைகளில்
பல்வேறு பிராந்தியங்கள் இயல்பாகவே ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகவும், கூட்டமைப்பாகவும் இணைந்துள்ளன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு
இடத்திற்குச் செல்வதற்குரிய போக்குவரத்து சாதனங்கள், கடல் பயணங்களுக்குரிய
கட்டமைப்புகள், அதற்கான கால நிர்ணயம் போன்ற அனைத்தையும் வகைப்படுத்தும்
வல்லமையையும் வளர்த்துக்கொண்டனர். இயற்கையின் கூற்றுகளுக்கு ஏற்ப
மாறும் பருவக் காலங்களின் விழிப்புணர்வும் பெற்றார்கள். காலப்போக்கில் வணிகப் பிணைப்புகளின் ஊடாக மண்டலங்களுக்குள்ளான பாதைகளின் அடர்த்தியான வலைப்பின்னல்களுடன் பல்வேறு
பகுதிகளை உள்ளடக்கிய இது, மேலும் பரவலாகிக் கொண்டுவந்து பெருவழிப் பாதைகளாக உருவாக ஆரம்பித்தன.
ஆதித்தமிழர்களின்
வரலாறு என்பது தமிழர்களின் நுண்ணறிவும், சிறப்பான செயல் திறனும், மனித நேயமும் இணைந்த
காலகட்டம். அகண்ட தமிழகமாக விரிந்திருந்த பொற்காலம். அகண்ட தமிழகம் என்பது சிந்துவெளி முதல், இலங்கை வரை நீண்ட
நிலப்பரப்பு.
கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். பொ.ச.மு. 300 முதல் பொ.ச.மு. 100 வரையான சங்ககாலம் குறித்து அறிய, சங்க இலக்கியங்கள், மொழியியல், அகழாய்வுத் தரவுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், மெகத்தனிசு, சாணக்கியன்
போன்றவர்களின் குறிப்புகள் என பல சான்றுகள் உள்ளன.
பண்டைய கால வரலாற்றைப்
பொருத்தவரை அக்கால இலக்கியங்கள் மற்றும் ஏனைய படைப்புகளிலிருந்து ஒரு விழுக்காடுதான்
அதன் வரலாறு குறித்து அறிய முடியும் எனவும், 99 விழுக்காடு வரலாற்றை அகழாய்வுகள் கொண்டுதான் நிரப்ப முடியும் எனவும் வரலாற்று
அறிஞர்கள் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின்
மேற்கு பகுதியில் இயற்கை அமைத்த அரணான மேற்குத் தொடர்ச்சி மலையை முறையாக ஆய்வு செய்வதன்
மூலம் தமிழர்களின் மறக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதுமான வரலாற்றை
நம்மால் மீளுருவாக்கம் செய்ய இயலும் என்பதும் நிதர்சனம்.
கொங்கு வணிகர்கள் சந்தைப்படுத்திய பொருட்களில் எது கொங்கு நாட்டை
மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகளை இணைத்தது என்று ஆய்வு மூலம் அலசியதில் தாண்டிக்குடியிலும்
கொடுமணலிலும் அகழ்வாய்வில் கிடைத்த சூதுபவளம் பல நாடுகளைக் கொங்கு வணிகத்துடன் இணைக்கும்
என்ற கருதுகோள் எங்களுக்குத் தோன்றியது. கருதுகோளின் அடிப்படையில் சில அனுமானங்களை
முன்வைத்து எண்ணிம ஆவணங்கள் அடிப்படையிலானத் தரவுகள் மூலம் ஒரு கோட்பாட்டை எளிதில்
நிறுவ இயலும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த வகையில் கழுகுப் பார்வையில்,
பரந்து விரிந்த முழுக் காட்சியையும் பூனைப் பார்வையில் ஒவ்வொரு நாட்டையும்
தனித்தனியேப் பார்க்கும் பார்வையையும் உருவாக்குவது என்பது எங்கள் சிறிய முயற்சி. அந்த வகையில் இந்தப் பகுதியில் மலேசிய
வணிக வரலாறு குறித்துக் காணலாம்.
தமிழகத்தில் குறிப்பாகக்
கொங்குநாட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் பொ.ச.மு. 300 இல் இருந்து பொ.ச. 200 வரையில் வரையறுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமாக
உள்ளதற்கான காரணம் கொங்கு நாட்டில் அதிகமாகக் கிடைக்கப்பெறும் தரவுகளே. மனிதவியல் என்ற புலத்தின் அடிப்படையில் கொங்கு நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கான
தரவுகள் ஏராளம்.
தொல்லியல் தொல்பொருள் தொடர்பான ஆசியத் தகவல்களை பல நாடுகளிலிருந்து
வெளியான ஆவணங்களின் மூலம் தொகுத்தும் பகுத்தும் உற்று நோக்கியதில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் கொங்கு நாட்டுக்கும் கிழக்கில் எகிப்து, சுமேரியா, மெசபடோமியா, சிரியா,
கிரேக்கம் மற்றும் உரோமுடன் வணிக உறவு இருந்தது தெளிவாகிறது. இந்தியாவில் இந்து சமவெளி ஹாரப்பாவுடன்
கொங்கு வணிகத் தொடர்பில் இருந்ததும் அறிய முடிகின்றது. அதுபோன்றே கிழக்காசியாவில் இலங்கை
தொடங்கிச் சீனம் வரை பல கிழக்காசிய நாடுகளுடன் கொங்கு நாட்டிற்கு வணிக உறவு இருந்ததையும்
அனுமானிக்க இயலும். இதன்
அடிப்படையில் பன்னாட்டு வணிகமே கிழக்கிலும் மேற்கிலும் பல நாடுகளைக் கொங்கு நாட்டுடன்
இணைக்கும் உறவுப் பாலமாக இருந்ததையும் நிறுவ முடிகிறது. கொங்கு
நாட்டின் பாலக்காட்டு கணவாய் பல இனம் பல சமயங்கள் எளிதில் உள் நுழைய வழிவகுத்தது போன்றே
பாலக்காட்டு கணவாய் வழியே ஆழ்கடல் வழியாகப் படகிலும் சிறு நாவாய்களிலும் பயணித்துப்
பன்னாட்டு வணிகம் மேற்கொள்ளவும் பாலக்காட்டு கணவாய் வழிவகுத்தது எனலாம்.
சிந்து சமவெளியில் கிடைக்கப்பெற்ற பட எழுத்துகள், அசைவெழுத்துகள் முதல் தமிழி எழுத்துருக்கள்,
வட்டெழுத்துகள், இன்றைய தமிழ் எழுத்துருக்கள் வரை
தமிழ் எழுத்து நீண்ட நெடிய வரலாறும் தொடர்பும் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற கற்கோடாரியில் சிந்து சமவெளியின் எழுத்துகள்
காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய நிலப்பரப்பு
முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளதோடு அகண்ட தமிழகமாக இருந்ததற்கு பல்வேறு சான்றுகள்
வரலாற்றில் உள்ளன. குமரி முதல் இமயம் வரை தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களால்
உறுதி செய்ய முடிகின்றது. சிந்து சமவெளி முதல் வடநாட்டில்,
தென்னாட்டில் என பெரும்பாலான ஊர்ப் பெயர்கள் வரை தமிழில் இருப்பதே முக்கிய
சான்றாகிறது. ஊர் என்னும் தமிழ்ச் சொல் சுமேரிய நாகரிகத்திலும்
காணப்படுவதும், இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஊர் என்று முடியும்
பல நகரங்களைக் காணமுடிவதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் வாழ்வியலுக்காகச்
சென்ற இடமெல்லாம் தம்முடைய பண்பாடு, கலாச்சாரம், மெய்யியல், மொழி, என அனைத்தையும்
விட்டுச் சென்றுள்ளார்கள். இந்திய துணைக் கண்டம் முழுவதும் விரவிக்
கிடக்கும் அவைகளே தமிழர்கள் சிந்து சமவெளி, வடநாடு, தென்னாடு என எங்கும் பரவி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
மலாயாவின் வரலாறை
எடுத்துக்கொண்டால் அது 20,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. மலேசியாவின்
பேராக் மாநிலத்தின் லெங்கோங் எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டில் ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்து அதற்கு
பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தனர்.
பேராக் மனிதனின்
எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மலாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும்தான்
மிகமிகப் பழமையானவை.
அதே போன்று ஈப்போ மாநகருக்கு மிக அருகாமையில் உள்ள
பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் ஊர் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த
குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு
முன்னால் வரையப்பட்ட பழமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
இந்தோனேசியா, மேலனேசியா, ஆசுதிரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம், மலாயாவை தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன்படுத்தி உள்ளனர் என்பது தொல்பொருள்
ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
மலாயாவில் முதன்முதலில்
குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள்
உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர்.
கற்களால் ஆயுதங்களைச்
செய்தனர். இவர்கள் பொ.ச.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கற்காலத்தில் தென் மேற்குச்
சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள்.
வளர்ப்புப் பிராணிகளும் இவர்களிடம் இருந்துள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து
விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள்
திறமைகளைக் காட்டியுள்ளனர்.
பொ.ச.மு. 200 ஆம் ஆண்டிற்குப் பிந்தய இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப்படுகின்றன.
இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாச்சாரம் என்றும் அழைக்கின்றனர்.
வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றியதாகக்
கூறப்படும் இஃது இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில்
இருந்தும் வந்ததாகவும் கூறப்படுகிறது.
பொ.ச. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில்
வந்த இரும்பு காலத்தில் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் உரோமாபுரியில்
இருந்து கொண்டுவரப்பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப்பட்டன. அந்த
காலக்கட்டங்களில் உரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்துள்ளனர்.
பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். கோத்தா
திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப்பட்டு
வருகின்றன. இந்தியர்களின் ஆதிக்கம் படைத்த புத்த மத அரசாங்கம்
அங்கே காணப்படுகிறது.
மான்-கெமர் பழங்குடியினரின் மொழிகள், இந்தியாவில் உள்ள முண்டா மற்றும் காசி பழங்குடியினர் மற்றும் மலாயா தீபகற்பத்தின்
செமங் மற்றும் சாகை போன்ற ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
பொ.ச.மு.1ஆம் நூற்றாண்டு முதல் பொ.ச.மூன்றாம்
நூற்றாண்டு வரை, தென்மேற்கு ஆசியாவில் மரம் உற்பத்தியின் மூலம்
வணிகம் அதிகரித்தது. மலேசியத் தீவு, சுமத்ரா,
மற்றும் இலங்கை ஆகியவற்றிலிருந்து
தெற்கு சீனாவிற்கு அகில் அல்லது காழ்வை மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. லோ-யூ போன்ற நாடுகள் வன உற்பத்திக்கான சேகரிப்பு மையங்களாக இருந்தன,
மலேசிய தீபகற்பத்தின் தொன்-சூன், ஐரேசிய உலக அமைப்பின் மேற்குப் பகுதியிலிருந்து தெற்கு சீனாவிற்கு ஏற்றுமதி
செய்யப்பட்டு, தென் சீனாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்,
இந்தியாவிற்கும் மத்தியதரைக் கடல் பகுதிக்கும் அனுப்பப்படுகின்றன..
மணி வணிகர்கள்
பாலக்காட்டுக் கணவாய் வழியே மேற்குக் கரைக்குள் நுழைந்து தென் முனையைக் கடந்து பால்க்
நீர்வழி மூலம் இலங்கையின் வடப்பகுதியை அடைவது அவர்களின் கடல் வணிகப் பாதையின் முதல்
கட்டமாகும்.
இலங்கையின் வடக்குப்
பகுதியே கிழக்காசிய கடல் பயணத்துக்கான தொடக்கமாக விளங்கியது. தமிழகத்தின்
மேற்குக் கரைத் துறைமுகங்களில் இருந்து படகுகள் மூலம் பால்க் நீரிணைக்கு வரும் சரக்குகளும்,
கிழக்குக் கரையில் கங்கை முகத்துவாரம் தொடங்கி அமைந்துள்ள துறைமுகங்களில்
இருந்தும் வரும் சரக்குகள் இங்கே பெரிய சரக்குக் கப்பல்களில் ஏற்றப்படும். தமிழர்கள் கப்பல்களுக்கு உரிமையாக
விளங்கி சிறந்த கடலோடிகளான கலிங்க மாலுமிகளைப் பணியமர்த்தி கடல்வணிகம் செய்தனர். இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல்களின்
அடுத்த நிறுத்தம் அந்தமான் தீவுக் கூட்டமாகும். இந்த இடம் மாலுமிகள் ஓய்வெடுக்கும்
இடம் என்ற குறிப்பும் உள்ளது. அந்தமான் பகுதியில் மூன்று இடங்களில் கப்பல்கள் நிறுத்தப்படும். அவை முறையே அந்தமான் நிக்கோபார் மற்றும்
கார் நிக்கோபார் தீவுகளாகும். அடுத்த கடல்பாதை மூன்று பிரிவுகளாக அமைந்து கப்பல் தன் பாதையை இங்கே தீர்மானிக்கப்படும். ஒரு பாதை கார் நிக்கோபாரில் இருந்து
சுந்தா நீரிணை வழியாக பாலித் தீவுக்குச் செல்லும். இரண்டாவது பாதை சுமத்திரா தீவின்
வடக்கு முனைக்குச் சென்று பின் அங்கிருந்து மலாக்கா நீரிணை வழியாக சாவாத் தீவுக்கு
கப்பலை இயக்கிச் செல்லும். மூன்றாவது பாதை மலாயாவின் மேற்குக் கரைக்கும், தாய்லாந்து
வழியாக கம்போடியா செல்லும். பின்னர் இந்த மூன்று பாதைகளுமே மூன்று தடங்களில் தென் சீனக் கடலுக்குள் நுழைந்து
சீனாவுக்கும் கொரியாவுக்கும் பயணப்படும். ஆதாரங்களின் அடிப்படையில்
உற்று நோக்கினால் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மலாயா தீபகற்பத்தில் இந்தியாவிலிருந்தும்
சீனத்தில் இருந்தும் வரும் கப்பல்கள் சந்திப்பதை விளக்கும்.
மேற்குக் கடற்கரைக்கும்
கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நிலப்பகுதி வழியாக சரக்குகள் மடை மாற்றம் செய்யப்பட்டு
இரு நாட்டினரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவர்.
1940 ஆம் ஆண்டில்
ராயல் ஆசியாடிக் சொசைட்டி மலேயா ஆய்விதழில் வெளியான அகழாய்வு தொடர்பான கட்டுரை மலாயாவில்
குடியேறியவர்களின் வாழ்வு முறை, தமிழர்களின் வாழ்வு முறையுடன்
ஒத்துப் போவதைக் குறிப்பிட்டுள்ளனர்.
பொ.ச.மு.1ஆம் நூற்றாண்டுகளிலேயே நன்கு நெறிப்படுத்தப்பட்ட
வணிகக்குழு கட்டமைப்புகள் தோன்றிவிட்டன. கீழை நாட்டு மெலுக்காவில் விளையும் கிராம்பு
, எஜினியா அரோமேடிகா என்பதன் மொட்டுக்கள் முதலியன புகாருக்குக்
கொண்டுவரப்பட்டு, பின் முசிறிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலை
நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. ஆதிச்சநல்லூர், கொடுமணல் பகுதிகளில் கிடைக்கும் வெண்கலப் பொருட்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதியாகின.
தாய்லாந்தில் ‘பெரும்பதன்கல்’ என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் கூடிய
உரைகல் ஒன்றும், சங்ககாலச் சோழர் செப்புக்காசு ஒன்றும் கிடைத்துள்ளன.
பண்டைய தமிழகத்தின் தயாரிப்பான அரிய கல்மணிகளும், சூதுபவள ஆபரணங்களும், கண்ணாடி மணிகளும் தாய்லாந்திலும்,
வியட்நாமிலும், தென் சீனத்திலும் கிடைக்கின்றன.
அகழாய்வுகள் மூலம் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட சூதுபவள மணிகள் அருங்காட்சியகங்களில்
இன்றளவிலும் சான்றாக நிமிர்ந்து நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசியாவிலும்
சீனாவிலும் உரோமானிய மற்றும் இந்திய கப்பல்கள் கிழக்கு நோக்கிச் சென்றது போல், தென்கிழக்கு
ஆசியாவிலிருந்து கப்பல்கள் மேற்கு, மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கடலோரப் பகுதிகளை நோக்கிப்
பயணிக்கின்றன. கடல்வழி வணிக வழித்தடங்கள் தெளிவாக இருந்தபோதிலும், சீனா, தென்கிழக்கு
ஆசியா, இந்தியா மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் ஆகிய நாடுகளிலிருந்து விரிவடையும் தரைவழிப் பாதைகளும் ஆசிய ஐரோப்பிய உலகப் பொருளாதாரத்தின்
வணிகப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டன.
ஆசிய ஐரோப்பிய
உலக அமைப்பின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் தொடர்ந்துள்ளன.
மேலும் மெசப்பொத்தேமியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் இருந்ததை அறிய முடிந்தாலும், கிளோவரின்
(1996) கருத்தின்படி பொ.ச.மு.
390-360 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலேயே, தென்கிழக்கு
ஆசியா மற்றும் இந்தியாவின் இடையேயான வணிகப் பரிமாற்றங்கள் இருந்துள்ளதையும் அறியமுடிகின்றது.
இந்தியாவுடனான சீனாவின் வணிகம் பொ.ச.மு. முதல் நூற்றாண்டிலும், தென்கிழக்கு ஆசியாவில் பொ.ச.மு. நான்காம் மற்றும் இரண்டாம்
நூற்றாண்டுகளிலும் தென்கிழக்கு ஆசியா (தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, மலாயா போன்றவை)
மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான வணிகப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆசியாவில்,
இந்தோனேசியா மற்றும் மலாய் தீபகற்பத்தில்,
உள்ளூர் தொடர்புகள் மூலமான வணிகப் பரிமாற்றங்கள் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல்
இருந்தன என்பதையும் அறியமுடிகின்றது. ஆனால் தென்கிழக்கு ஆசிய
வியாபாரிகள் மற்றும் வணிகச் சமூகங்கள் ஏற்கனவே பொ.ச.மு.1000 காலகட்டங்களிலேயே வணிகத்தில் பங்கேற்றுள்ளனர்.
பொ.ச.மு. முதல் நூற்றாண்டு, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் வணிகப் பரிமாற்றங்கள் தொடர்ந்துள்ளன.
பொ.ச.மு. 500 ஆம் ஆண்டளவில் தொல்லியல் துறை இருந்தபோதிலும், மலாய் தீபகற்பத்தில் உள்ள
அரசியல் அமைப்புகள் ஏற்கனவே மண்டல வணிகத் தொடர்புகளில் பங்கு பெற்றுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில், சீன வணிகத்தின் சான்றுகள் மலாய் தீபகற்பத்தின்
தெற்கு தாய்லாந்தில், சமீபத்திய அகழாய்வின் மூலம் வெளிவந்தன.
பல்வேறு நேரங்களைக்
குறிப்பிடும்போதிலும், பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
உலகின் மேற்கு மற்றும் கிழக்கிற்கும் இடையிலான வணிகம் செழித்தோங்கியிருந்தது என்பது
தெளிவாகிறது முதலாம் நூற்றாண்டில், மலாய்/இந்தோனேசிய மாலுமிகள் கிழக்கு ஆப்பிரிக்க
கடற்கரையோரங்களில் குடியேறியதாக அறியப்பட்டனர்.
தென்கிழக்கு ஆசியா
மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு கடல்கள் மற்றும் நீரிணைகள், ஐரேசிய உலகப் பொருளாதாரத்தின் கிழக்கு மண்டலத்தில்
நடத்தப்பட்ட வணிக இணைப்புகளை சுற்றியுள்ளன. கிழக்குப் பகுதி மேற்கு வங்காளம், வங்காள
விரிகுடா, அந்தமான் கடல், மலாக்கா, சாவா கடல், மாகசார் நீரிணை, மோலுக்கா கடல், செலிபெசு
கடல், தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல், மஞ்சள் கடல் மற்றும் சப்பானின் கடல் ஆகியவை
மேற்கு மற்றும் கிழக்கை இணைக்கும் கடல் பாதைகளாக மாறின. கிழக்கு மற்றும் மேற்கிற்கு
இடையிலான இந்த கடல் பாதைகளுக்கான முக்கிய இரண்டு கடல்கள், இந்தியப் பெருங்கடல் மற்றும்
தென்சீனக் கடல் என்பதில் ஐயமில்லை.
உலக வணிகம் நிறுவப்பட்ட
தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் முக்கிய நிலப்பரப்புகளை எல்லைகளாகக் கொண்ட மண்டலமாக,
மலேசியா மற்றும் தென்சீனக் கடல் ஆகியவற்றின் நீரிணைகள் குறிப்பிடும் வகையில் முக்கியத்துவம்
வாய்ந்தவை. உள்ளூர், மண்டல வணிகத் துறைமுகங்கள், மற்றும் மையங்களின் இணைப்புகள்
பொ.ச.மு. 200 முதல்
அதற்கு முன்னரே இருந்தன. உள்ளூர் மற்றும் மண்டல வலையமைப்புகளின்
மூலம் வணிகம், கிழக்கு சீனக் கடல் வழியிலிருந்து மத்தியதரைக்
கடல் வரையிலான ஐரேசிய கடல் வழிகளோடு இணைக்கப்பட்டுள்ளன.
உரோமானிய மத்திய
தரைக்கடல் வழியாக இந்தியாவுக்குச் சென்றதால், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா
மற்றும் அந்தமான் கடல் ஆகியவற்றிலிருந்து மேற்கூறிய கப்பல் வழித்தடங்களைப் பயன்படுத்தி
வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவில் ஏராளமான விநியோகங்களைக் கொண்டிருந்தன. தலைகீழான வேறு
சில விசயங்களும் நடந்தன. பருவ மழைக்காற்றின் சக்தியால் பயணத்தின் திசைகளைப் பொருத்து,
இக்காற்று கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இந்தியாவிற்கும் அதற்கு அப்பாலும் இட்டுச்செல்கின்றன.
கிழக்கு நோக்கிய கடல் பயணத்தில், கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து, தென்சீன துறைமுகங்களான
குவாட்ச்சோ போன்றவற்றைச் சென்றடைவதோடு, தெற்கு சீனாவின் முக்கியத்
துறைமுகங்கள் மற்றும் கிழக்கு மலேய தீபகற்பத்தையும் அடைந்துவிடும்.
கிழக்கு நோக்கி
பயணிக்கும் கப்பல்களில், மிளகு, வாசனைப்பொருட்கள், கிராம்புகள், பல்வேறு உணவுப் பொருட்கள், கடல் பொருட்கள்,
கவர்ந்திழுக்கும் வடிவுடைய அழகிய இறகுகள் மற்றும் முத்துகள் போன்றவைகளும் இருந்தன.
பொதுவாக இந்தியா
மற்றும் இலங்கையிலிருந்தும் கப்பல் போக்குவரத்துக்காக, மலாய் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள
கிரா வின் இசுதுமாசு துறைமுகமாக இருக்கும். இதன் மூலம் சரக்குகள் பின்னர் இசுதுமாசின்
கிழக்கு மலாய் தீபகற்ப துறைமுகங்களுக்கும், மேகாங் டெல்டாவின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள
ஃபுனான் போன்ற இராச்சியங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. ஃபுனானில்
இருந்து, வியட்நாம், ஹெப்பூ மற்றும் குவென் டன்கிங்கின் வளைகுடாவில்
அமைந்துள்ள இசுதுமசின் கிரா, லினாய் மற்றும் சியோ-சிஹ் ஆகியவற்றின் கிழக்குப் பகுதிகளில்
அமைந்துள்ள பான் பான் போன்ற இடங்களுக்கு கப்பல்கள் வரவழைக்கப்படும். அவை பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு முதல்
மலாக்காவின் நீரிணைகள் வழியாகப் பாய்ந்து, நிலத்தடித் தளத்தைத் தவிர்த்து, கிராவின்
இசுதுமாசு முழுவதும் நீர்வழியிடை நிலவழி சரக்குகளின் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
மலேய தீபகற்பத்தின்
தென்மேற்குப் பகுதிகளில் இந்தோனேசியத் தீவுகள் உள்ளன. அங்குதான் தென்கிழக்கு ஆசிய வணிகத்தின் குறியீடாக
உள்ள நறுமணக் காடுகளையும் மசாலாப் பொருட்களையும் மண்டல வலையமைப்புகளின் ஏற்றுமதி மையங்களாக
உருவாகியுள்ளன. சுந்தா நீரிணைகள் மற்றும் சாவா கடல் ஆகியவை சுமத்ரா,
சாவா, போர்னியோ மற்றும் செலிபெசு போன்ற இடங்களிலிருந்து பொருட்கள் தென் சுமத்ராவில்
அமைந்துள்ள கோயிங் போன்ற மண்டல மையங்களில் சேகரிக்கப்பட்டு, கோயிங் மற்றும் ஃபுனானில்
இருந்து தென்கிழக்கு ஆசியாவின் முக்கியக் கப்பல் பாதைகளைச் சேகரிக்கின்றன. தென்கிழக்கு
ஆசியா மற்றும் தீபகற்பம் மற்றும் தென்கிழக்கு ஆசியத் தீவு ஆகியவற்றின் முக்கியப் பகுதிகள்
பல்வேறு துறைகளிலும் துறைமுகங்களிலும் உள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நிலப்பகுதியில்
அமைந்துள்ள ஃபுனான், ஐரேசியாவின் கடலோரப் பாதைகளுக்கு மட்டுமல்லாமல் தீவு தென்கிழக்கு
ஆசியாவிலிருந்து ஓரளவு பரவலான வணிகத்திற்கான சேகரிப்புப் புள்ளியாகவும் இருந்தது. சீன
ஆதாரங்களின்படி, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டுகளில்
பொருளாதாரம் மற்றும் அரசியலில் வளர்ச்சியடைந்தது.
அவைகளின் வளர்ச்சிக் கட்டத்தில், தாய்லாந்து மற்றும்
கிழக்கு மலாயாவில் உள்ள பகுதியில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவருவதற்காக ஒரு கடற்படையும்
அனுப்பப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் உற்பத்திகள், மலாய் தீபகற்பத்தின் கிழக்குக்
கரையோரத்தில் கோயிங் மற்றும் பிற சீனா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள மற்ற சேகரிப்பு
மையங்களை தெற்கு சீனாவின் துறைமுகங்களுக்கு நேரிடையாகக் கொண்டு செல்லப்பட்டதால் 5ஆம் நூற்றாண்டில் மாற்றம் ஏற்பட்டது.
அதன் சரிவிற்கு
முன்பு தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வணிக மையம் என்ற வகையில் ஃபுனான் கப்பல் கட்டும்
வசதிகளுடன் ஒரு நகர்ப்புற மையமாக வளர்ந்தது.
சீன ஆதாரங்களின்படி, பொ.ச.மு..முதல் நூற்றாண்டில், ஃபுனான் வெளிநாட்டு வணிகர்களை
சந்திப்பதற்காக, நகரங்கள், அரண்மனைகள், களஞ்சியங்கள், துறைமுக
வசதிகள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை உருவாக்கியது.
அதன் தலைநகர், ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள அகழியால்
சூழப்பட்டிருந்தது. விவசாய, பொருளாதாரக் கட்டமைப்புகளும் இருந்தன. தென்கிழக்கு ஆசியாவின்
மண்டல வணிகம் மற்றும் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வருபவர்களுக்கு தெற்கு
சீனாவின் வணிகத் துறைமுகங்களுக்குச் செல்லும் வழியில் ஃபுனானை கடந்து செல்ல ஆரம்பித்தபோது
பிந்தையது மேலும் வளர்ச்சியுற்றது.
தாய்லாந்து மற்றும்
மலாயா ஆகியவற்றில் ஏராளமான ஈயம் தொட்டிகள்
இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இருந்தாலும் ஈயத்தின் பற்றாக்குறையும் இருந்தது. இந்திய பொருளாதாரம் விரிவடைந்ததால், அதன் எழுச்சிக்கு ஒரு தேவையாக பொன் எழுந்தது. தாதுக்கள் ஏற்றுமதி, அதிக ஈயம் செறிவு
கொண்ட வெண்கலக் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா-இந்தியா பரிமாற்றத்தின் வணிகப் பொருட்களின்
பட்டியல் பகுதியாகும். முதன்முதலாக பொ.ச.மு. முதல் நூற்றாண்டு அல்லது முந்தைய காலங்களில் வணிக
நடவடிக்கைகளை வழங்கிய மலாய் தீபகற்பம் தீவிர சமூக பொருளாதார மாற்றங்களையும் மேற்கொண்டது.
"இன்றியமையாதனவாகவும்,
இறுதியானதாகவும் கருதக்கூடிய மண்டலங்களின் மணிகள் குறித்த ஆதாரங்கள்
கூரிய மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. எங்கள் பகுப்பாய்வின்
ஆரம்பத்தில் தென்கிழக்கு ஆசியாவின் அனைத்துப் பகுதிகளும் இறுதிக் கட்டத்தில் இருந்த
அதே நேரத்தில் இந்தியாவும் சீனாவும் முக்கியப் பகுதிகளாக இருந்தன. காலப்போக்கில், முக்கியப்
பகுதிகளாக உருவான தென்கிழக்கு ஆசியா, ஃபுனான், மலேசிய தீபகற்பம், சிறீவிசயா, சாவா போன்ற
பகுதிகள் தயாரிப்பாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றன. மணிகள், மிக முக்கியமான
வணிகப் பொருட்களாக இருந்தபோதும், அவை உற்பத்திப் பொருட்களாக வளர்ந்துவரும் வகையில்
மணிகள் மையப் பகுதிகள் அல்லது மாநிலங்களின் குறிப்பான்கள் என்று கருதப்படுகின்றன.
"
முந்தைய வரலாற்று
காலத்தை உருவாக்கிய உலகமயமாக்கல் உலகப் பொருளாதாரம், மேற்கிலிருந்து கிழக்கு வரை பரந்து
விரிந்து, தொடர்ந்து
வரும் நாகரிகங்களை, பேரரசுகள் மற்றும் பல்வேறு மாக்கடல்களையும், கடல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. மத்திய தரைக்கடல், செங்கடல், பாரசீக
வளைகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்சீனக் கடல் முழுவதும் வணிகப் பரிமாற்றங்களில்
பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து உலகளாவிய ஒரு தொழிலாளர் பிரிவு இருந்தது. காலப்போக்கில் வெடித்துள்ள மோதல்கள், போர்கள் என அனைத்தையும்
கடந்து, அது கடல் மற்றும் உலகின் கடலோரப் பகுதிகளான பல்வேறு நிலங்களை
இணைத்து, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மற்றும் கலப்பினங்களின் விளைவாக
இருந்தது. முடிவற்ற உலகப் பொருளாதாரத்தை விரிவாக்குவது என்பது, நீண்ட கால வரலாற்று
காலங்களில், சமூக பொருளாதார சரிவுகளின் பாதிப்புகள் என அனைத்தும் இருந்திருப்பதே இயல்பாகும்.
ஏற்ற இறக்கங்கள் சில இருந்தாலும், ஐரேசிய உலகப் பொருளாதாரம்
இன்றைய உலகமயமாக்கல் பாதையில் தொடர்ந்தவாறுதான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்க்டிக்
பெருங்கடல் தவிர, ஒவ்வொரு கடலும் இணைக்கப்பட்டுள்ள இக்காலத்தில், கடல்சார் உலகம்
என்பது உலகளவில் இயல்பானதாக இருக்கக்கூடியதாகிறது. தென்கிழக்கு
ஆசிய மண்டலம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல் நிறைந்த
ஒரு நிலைமையை உருவாக்கியதையும் அறிய முடிகின்றது. விநியோக மையங்களை
/ நிறுவனங்களை உருவாக்கும் ஒரு செழுமையான இடமாக
நாம் எளிதாக அதை வகைப்படுத்த முடியவில்லை. ஐரேசிய உலகப் பொருளாதாரத்தின் மேற்கு மற்றும்
கிழக்குப் பகுதிகளோடு வணிகத்தின் அளவை தெளிவாக்குகிறது, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் ஒரு கணிசமான அளவை எட்டியுள்ளது என்பதையும்
உணர முடிகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இயற்கை வளங்கள்,
தாதுக்கள், தாவரங்கள் மற்றும் உணவுப் பயிர்கள் ஆகியவற்றை மட்டுமல்லாமல், மணிகள், மட்பாண்டங்கள்,
வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், நகை, ஆபரணங்கள், சிலைகள்
முதலியன, மற்றும் ஐரேசிய உலக அமைப்பில் மற்ற முக்கிய மையங்களுடன் அரசியல் உறவுகளை மேற்கொள்வது,
ஐரேசிய உலகப் பொருளாதாரத்தின் பிற பகுதிகளுடன் தென்கிழக்கு ஆசியப் பிணைப்புகளின்
இணைப்புகளுடன், தென்கிழக்கு ஆசிய சமூக பொருளாதார வளர்ச்சி பற்றிய மறுபரிசீலனை செய்யப்படும்
வகையில் உலக வரலாற்றில் இதன் முக்கியமானப் பங்கை மேலும் தெளிவாக உணரலாம் என்பதில் ஐயமில்லை.
தங்கள் மேலான கருத்துகளையும் திறனாய்வு முடிவுகளையும் பொதுவெளியில்
வெளியிட்டு ஒரு சீரிய கலந்தாய்வு கருத்து முன்னேற்றத்துக்கு வழிகோல உதவுமாறு வேண்டுகிறோம்.