இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் முடிந்து ஆட்சி அமைப்பதற்கு, அதாவது ஆளுங்கட்சியாக பொறுப்பேற்பதற்கு சில விதிமுறைகளை இயற்றியுள்ளனர். ஒரு சட்டத்தை இயற்றி அதை அமல்படுத்துவதற்கும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு கட்சி பாதி இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாலும் சட்டத்தை அவர்களே இயற்றி அதை நிறைவேற்றிவிட முடியாது. மாநிலங்களின் அவையிலும் இதே நிலைதான் .. அதே போல மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரு சட்டத்தை இயற்றினாலும் அது செல்லும் என்று கூற முடியாது. அந்த சட்டத்தை இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டசபையில் வைத்து அங்கீகரித்தால் மட்டுமே அந்தச் சட்டம் அதற்குரிய முழு அங்கீகாரம் பெறும். அது போலவே எதிர்கட்சித் தலைவர் பொறுப்பிற்கும் சில வரைமுறைகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி எதிர்கட்சித் தலைவர் பொறுப்பிற்கு இத்தனை உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று எந்தவிதமான சட்டங்களும் கிடையாது. அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணக்கையில் 10% உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதாவது எண்ணிக்கையின்படி 54 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்கட்சியாகவும், அதனுடைய தலைவர் எதிர்கட்சித் தலைவர் உரிமை பெறவும் தடை கிடையாது. எதிர் கட்சிகளில் அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தங்களுடைய தலைவருக்கு எதிர்கட்சித் தலைவர் பொறுப்பினைக் கோரினால் அதைத் தடை செய்ய முடியாது. சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
நம்முடைய அரசியல் அமைப்பானது இங்கிலாந்து பாராளுமன்ற அமைப்பின் சட்டத்தை ஒட்டியே உள்ளது என்ற வகையில், பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைப்படி அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படுகிறார். அந்தப் பொறுப்பிற்குரிய சம்பளம், இதர சலுகைகள் பெறூவதற்கும் உரிமை உடையவராக ஆகிறார். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் பிரதமர் சில காரணங்களால் பிரதமர் பதவிக்குரிய பொறுப்பை நிறைவேற்ற முடியாது போனல் எதிர் கட்சித் தலைவருக்கும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முழு உரிமை உண்டு. எனவே எதிர் கட்சித் தலைவரே நிழல் பிரதமர் என்றும் கூறப்படுகிறது (shadow P.M.)
எதிர் கட்சிகளில் ஒரே எண்ணிக்கை கொண்ட 3, 4 கட்சிகள் இருந்தால் அதில் ஏதோ ஒரு கட்சியை எதிர் கட்சியாகவும், அதன் தலைவரை எதிர் கட்சித் தலைவராகவும் சபாநாயகர் அங்கீகரிக்கலாம். 1950 களின் சட்டம் இப்படியிருக்க 10 சதவிகிதத்திற்கும் குறைவான உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளை வெறும் குழுக்கள் என்றே கூறி வந்துள்ளனர். எதிர் கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியானது தங்கள் தலைவரை எதிர் கட்சித் தலைவராக அங்கீகரிக்கக் கோரினால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது சபாநாயகரின் கடமையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment