பவள சங்கரி
அனைவருக்கும் விஜய ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
கனிகரம் - சிறுகதை
அனைவருக்கும் விஜய ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
கனிகரம் - சிறுகதை
”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை
வருசம் ஆவுதும்மா...?
“அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ
காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே... நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு
போயிட்டாரே..”
“நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு
என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா... “
‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு
எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல கடனும் வக்காம,
சொத்துல வில்லங்கமும் பண்ணாம போனதால நம்ம
பொழைப்பும் பிரச்சனை இல்லாம போவுது. இருக்குற சொச்ச காலமும் இங்கியே இப்புடியே
கிடந்துட்டுப் போயுடலாம்னு தோணுது. தறிப்பட்டறையை லீசுக்கு உட்டுப்போடலாம்னு
இருக்கேன்..”
“அம்மா அதெல்லாம் வாணாம். எல்லாத்தையும்
வித்துப்புட்டு நீ என்கூடவே மலேசியாவுக்கு வந்துடும்மா. உன் பேரன் கூட
இருக்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா..?”