Friday, August 8, 2014
Thursday, August 7, 2014
சுருதி லயம்
பவள சங்கரி
”நன்னா
யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி.
உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா.
நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன
ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே.
நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி
பண்றேன். ஆனா என்னமோ தெரியல,
இந்த மனசு ஒரு நிலைக்கு
வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான்
நினைக்கிறேன். ஆனா என்னோட தொழில்
என்னை அப்படி இருக்க உடமாட்டீங்குதுடி.
புரிஞ்சிக்கோம்மா.. இனிமேல் சத்தியமா குடிச்சுட்டு
வரமாட்டேன் .. இந்த ஒரு தரம்
மட்டும் மன்னிச்சுடுடி.. என் செல்லம் இல்லியோ
நீ.. “
"ரகு, என்னை
விரட்டி, விரட்டி காதலிச்ச அந்த
ரகுதானா நீன்னு எனக்கு அடிக்கடி
சந்தேகமே வந்துடுதுடா.. நான்
மட்டும்தான் உன் உலகம், உயிர் அப்படீன்னு சொன்னதெல்லாம்
வெறும் பிதற்றல்தான் இல்லியா.. இப்பல்லாம்
உனக்கு அந்த மதுவில மட்டும்தான்
போதை .. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குங்கறதை
கூட மறக்க வக்கிற இந்த
குடிபோதை உனக்கு தேவையா இருக்கு.. என்னோட
குடிகார அப்பன்கிட்ட உன் மொத்த சேமிப்பு, இருபத்தஞ்சாயிரத்தையும்
கொடுத்துதானே என்னை வாங்கிட்டு வந்தே.. இப்ப
அதே மாதிரி உன்
பொண்ணுங்களையும் எவனாவது
வந்து வாங்கிட்டுப் போவானுங்கன்னு கோட்டை கட்டி வச்சிருந்தா
அத இப்பயே இடிச்சுப்புடு.. ஆமா
சொல்லிப்புட்டேன்.. அப்புடி ஒரு நினப்பு
உனக்கு இருக்குதுன்னு தெரிஞ்சா உன்னை வெட்டி பொலி
போட்டுடுவேன் ஆமா.. உன்னோட
திருநீரு பட்டையையும், சாந்தமான மூஞ்சியையும் பார்த்து நான் ஏமாந்தது போதுமடா
சாமி...
Sunday, August 3, 2014
சிம்ம சொப்பனம்
பவள சங்கரி
தீரன் சின்னமலை
நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு. தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.
18-ஆம் நூற்றாண்டு இறுதியில் கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.
Subscribe to:
Posts (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...