Saturday, November 5, 2016

நெருஞ்சி முள்


கணிப்பொறியில் சிக்குண்ட 
கனிசமான பொழுதுகளில் 
அம்மாவிடமும் இயந்திரத்தனமான 
உரையாடல்கள்.

இடப்புற ஊக்கு வலப்புறமும்
வலப்புற வளையம் இடப்புறமும்
இடமாறியிருந்த அம்மாவின் 
இரவிக்கையை முதலுங்கடைசியுமாய்
கண்டது இறுதிக் குளிப்பாட்டலில்தான்.
பிடிமானம் அற்றுப்போன இயந்திரத்தனம்
காலமெலாம் நெஞ்சின் நெருஞ்சியாய் .....

Thursday, November 3, 2016

நீளும் பயணம்!



உம் இதய இச்சையின் உச்சம்
நோக்கிய உயர்வில் இன்னொருவர்
நீ கொள்ளையடித்த பணப்பையைக்
களவாடி அதன்மீது மெழுகுக்
கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
இரக்கம் காட்டுங்கள்! பாவம்
அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!

கலீல் கிப்ரான் / மொழிபெயர்ப்பு