பவள சங்கரி
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே
ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன்.
“ஏண்ணா.. ஏண்ணா, நான் கத்தறது காதில் விழலையா.. அதுசரி இவ்ளோ சத்தமா பாட்டை வச்சிண்டிருந்தா எப்படி அடுத்தவா பேசறது காதுல விழும்” லேப்டாப்பில் கனெக்ட் செய்து வைத்திருந்த ஸ்பீக்கரின் ஒலி அளவைக் குறைத்த மறுகணம், கனவுலகிலிருந்து மீண்டவராக சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவர்,