பவள
சங்கரி
தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்
ஆன்மீக
நாடான நம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான
கோவில்களும், வழிபாடுகளும் இருந்தாலும், குல தெய்வ வழிபாடு
என்பது அந்தந்த குடும்பங்களில் உள்ள
நபர்களுக்கான தனிப்பட்டதொரு தெய்வம் என்பதால் மிகவும்
சக்திவாய்ந்த தெய்வமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.குலம்' என்றால் "குடும்ப
பாரம்பரியம்' என்று பொருள். நமது
குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை
நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர்
நன்றாக இருக்க வேண்டும் என்பதே
குல தெய்வ வழிபாட்டின் முக்கியக்
குறிக்கோள். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,
குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’
என்று வழிவழியாக வழங்கப்படும் பழமொழியே இதற்குச் சான்றாகும். அதாவது ஒருவரது
குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமெனில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும்
அவசியமான ஒன்று. அந்த வகையில்
தமிழ் நாட்டில் குல தெய்வ வழிபாடு
என்பது நாகரிக மாந்தர்கள் மத்தியில்
அருகி வந்தாலும் சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்கள், பாரம்பரியக் குடும்பங்கள்
போன்ற இடங்களில் இன்றளவிலும் தவறாமல் ஐதீக முறைப்படி
வழிபாடுகள் நடைபெறுவதைக் காணமுடிகிறது. சிலர் குல தெய்வ
வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு
என்று புறந்தள்ளுபவர்களையும் காண முடிகிறது.