Posts

Showing posts from 2018

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 17

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 16

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 15

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 14

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 13

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 12

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 11

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 10

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்!9

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 8

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்!7

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்!6

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 5

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 4

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 3

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 2

Image

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 1

Image

அழகு!

Image
கீச்சிடும் புள்ளின் தேனோசையின் அதிர்வு
துயில் கலைத்ததும் கனவின் சொச்சமும்
விழியில் காட்சியாகி விரியும் கணமும்
பனியில் பூத்த சிறுமொட்டின் அழகியலும்

துள்ளித் திரியும் சிறுமுயலின் பரவசமும்
வஞ்சமும் காழ்ப்பும் வசவுமில்லா நேசமும்
தஞ்சமென சிறுவங்கும் மாடமாளிகை போகமும்
அன்றையப் பொழுதை இதமாய் தன்வசமாக்கி 

என்றனையும் ஆட்கொண்டு ஆழ்மன தியானமாக்கி
அல்லல் யாவையும் அசட்டையாய் நீக்கி
தொல்லைகள் இல்லா புவியை உருவாக்கி
அழகில் தியானம் அறிவில் தெளிவு மனதில் உறுதி!

மங்கும் மாலையிலும் மயக்கமில்லை மனதுக்கு
 என்றுமில்லை நிரந்தரத் துயில் சூரியனுக்கு
இன்றுபோய் உதயமாகி வருவாய் நாளை
 பணிந்திருந்து பக்குவமாய் இயங்குவாய்  ஆக்கப்பூர்வமாய்!


-----------------------------------------

கொரிய அரசி தமிழ் நாட்டு இளவரசியா? (2)

Image

கொரிய அரசி தமிழ் நாட்டு இளவரசியா?

Image

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Image

தேளின் குணம் .....

நல்லவராய் வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை விளக்கும் புத்தத் தத்துவக் கதைகளில் ஒன்று. தேளின் குணம் கொட்டுவது என்று தெரிந்தும் தேளையும் அரவணைக்க நினைப்பது நல்லவனின் விதி! 
ஒரு முறை ஆற்றைக்கடக்க யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்று போவோர் வருவோரிடமெல்லாம் வேண்டி நிற்கிறது ஒரு தேள். தேளின் குணமறிந்து பல உயிரினிங்களும் அதை மறுத்து, தப்பித்தால் போதுமென்று கடந்து செல்லும்போது, ஆற்றைக் கடக்க முனையும் ஒரு ஆமை மட்டும் இந்தத் தேளின் மீது பரிதாபம் கொண்டு தன் மீது ஏற்றிக்கொண்டு செல்கிறது. சிறிது தூரம் அமைதியாக வந்த தேள் சும்மா இருக்கமாட்டாமல் ஆமையின் ஓட்டின் மீது மெல்ல கொட்டிப்பார்க்கிறது. ஆமைக்கு ஓடு என்பதால் உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும் கொட்டிப் பார்த்துவிட்டு, “என்னடா இந்த ஆமையிடம் ஒரு அசைவும் இல்லையே ... 4 முறைகள் கொட்டியும் எந்த அசைவும் இல்லையே என்ற ஆச்சரியத்தில், பொறுக்க முடியாமல் அந்த ஆமையிடமே கேட்டு விடுகிறது. அதற்கு ஆமையும், ஓ நீ என்னைக் கொட்டியதே எனக்குத் தெரியாதே ...  என் ஓட்டின் மீது கொட்டினால் எனக்கு வலிக்காதே ..” என்றது அப்பாவியாய். அதற்கு அந…

தமிழியக்கத் தீர்மானங்கள்

Image

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

Image
கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? - ADHD (Attention deficit hyperactivity disorder) 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்த…

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம்

Image

அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!

Image
அன்பு நண்பர்களுக்கு,


வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ் சங்கத்தில் என்னுடைய “தமிழ் புத்தமும் கிழக்காசிய வணிகமும்” என்ற நூலின் அறிமுகமும் அவ்வமயம் என் கருத்துரைகளை வழங்கும் அற்புதமானதொரு வாய்ப்பும் அமையப் பெற்றதற்கு மிகவும் மகிழ்கிறேன். இத்தகைய அரிய வாய்ப்பை அமைத்துக்கொடுத்திருக்கும், தமிழறிஞர்களான நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். சந்திக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.

வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை!

Image
நன்றி மேகலா.

எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் நிர்வாக ஆசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராற்றல்கொண்ட திருமதி பவளசங்கரி அவர்கள் சனிக்கிழமை (ஜூன் 2, 2018) இரவு 8:30 மணியளவில் (அமெரிக்கக் கிழக்கு நேரம், EST), வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) வினாடி வினாக்குழு ஏற்பாடு செய்திருக்கும் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார். அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருக வருக என வரவேற்கின்றோம்! 🙏 — with Pavala Sankari.

சித்தார்த்தா பள்ளி நிகழ்ச்சி!

Image
நேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள்! சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற்பொழிவை மழலையாக்கத் தேவையில்லை என்று உணரச் செய்யும் இக்காலக் குழந்தைகளின் அறிவாற்றலும், புரிந்து கொள்ளும் தன்மையும் மன நிறைவை ஏற்படுத்துகிறது! மாற்றுச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது!
வல்லமை தாராயோ - என்ற தலைப்பில் குழந்தைகள் மிக அழகாக கவிதை வாசித்தார்கள். நம் வல்லமை இதழ் சார்பாக குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் (விளக்கவுரையுடன்) பரிசாக வழங்கினோம்.

மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்

Image
பொலிகையூர் ரேகா அவர்களை முதன் முதலில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் (சென்னை - 2017) சந்தித்தபோது பெயர் அறிமுகமின்றியே அவர்தம் எழுத்தின் வாயிலாகவேக் கவரப்பட்டேன். மிக யதார்த்தமான எழுத்து நடையுடன், இலங்கையின் கருமையான நாட்களையும், மக்களின் அவல நிலையையும், தற்கால முன்னேற்றத்தின் அகண்ட பாதைகளின்  சுவடுகளையும் மிகவும் யதார்த்தமாக, துளியும் மிகைப்படாமல் எடுத்துரைத்த விதம் சிறப்பாக அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அவர்தம் கருத்தரங்க உரை அனைவரையும் கவர்ந்திருந்தது.

”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே பல கதைகளை உருவாக்கக்கூடியது. ஆசிரியர் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையின் பாத்திரப் படைப்பையும் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதோடு கதை மாந்தர்களின் பெயர் சூட்டுவதிலும் ஒரு அழகியலைக் கடைபிடித்திருக்கிறார். சிற்பிகா, சங்கழகிப் பாட்டி, தமிழினி , இலக்கியா, இசையரசி, இனியா, அறிவழகன், தமிழேந்தி என்பன போன்ற மிக அழகான தமிழ் பெயர்கள் இவர்தம் படைப்புகளுக்கு அணிகலன் ஆகியுள்ளன.

இத்தொகுப்பின்முதற்படைப்பான,“மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற கதை முத்தான முத…

4,500 ஆண்டுகள் பழமையான தமிழ்!

செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது போன்று சமசுகிருத்தத்தில் இல்லையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கி.மு. முதலாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிற்குச் சென்று அந்நாட்டையே உருவாக்கியவள் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கும் இந்த ஆய்வு ஆதாரமாக இருக்கின்றது!

கவிக்கொலை?

அரசே கழுமரத்தில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. 
ஏன் .. என்ன ஆச்சு இன்று மட்டும்
அரசே நீங்கள்தானே கவிதை தினம் என்று சொல்லிச்சொல்லி கவிதைங்கற பேரில் கண்டதையும், காணாததையும் கொட்டிவிட்டுப் போகும் அத்தனை அலப்பறைகளையும் கழுவில் ஏற்றச்சொல்லி உத்தரவிட்டீர்கள். 
ஓ..  அப்படியா. கொலைக்குற்றவாளிகளின் தண்டனைகளை கொஞ்சம் தள்ளிப்போட்டு முதலில் தமிழையும், கவிதையையும் கொலை செய்யும் இந்த கவிக்குற்றவாளிகளை கழுவில் ஏற்றுங்கள். மன்னா புதிதாக இன்னும் பல கழுமரங்கள் தேவை ..

அப்படியே ஆகட்டும், அரசின் கஜானாவே காலியானலும் பரவாயில்லை..  

கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக் கவிதைகள் - தமிழாக்கம்

Image
கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக் கவிதைகள் - தமிழாக்கம் - பவள சங்கரி , நூல் வெளியீடு மார்ச் 10, 2018 அன்று தமிழக அரசின் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  அவர்களால் வெளியிடப்பட்டது. முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் முதற்படியைப் பெற்றார். கொரிய குடியரசுத் தூதர் திரு.ஹியூங் டே கிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 87 அகவை நிரம்பிய, கொரிய தாகூர் சங்கம் மற்றும் இந்தியக் கலைக்காட்சியகம் நிறுவனர், சியோல், தென் கொரியா, முனைவர் கிம் யாங்-ஷிக் அவர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களின் அற்புதமான உரை இது.
குறிவைத்து தாக்க நினைத்தாலும் குரல்கொடுத்து காக்கச்செய்பவள்  தமிழன்னை!
https://youtu.be/sHzKft9tnU4 

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!

Image
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்…

தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் - புத்தக வெளியீடு

Image
தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும்  அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்…

நூல்கள் வெளியீட்டு அழைப்பிதழ்!

Image
இறையருளால் என் அடுத்த இரண்டு நூல்கள் கல்விக்கோ.முனைவர். கோ.விசுவநாதன், விஐடி பல்கலைகழக வேந்தர் தலைமையில், தமிழறிஞர்கள் வாழ்த்துகளுடன் வெளிவருவதில் பேருவகை கொள்கிறேன் நண்பர்களே. வாய்ப்பிருக்கும் அன்புள்ளங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.