Posts

Showing posts from August 2, 2015

அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!

Image
பவள சங்கரி ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு. பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!

Image
பவள சங்கரி சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!

இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?

முறமா - சல்லடையா - எது சிறந்தது?

Image
அந்தத் தாய்க்கு தம் இரண்டு பெண் குழந்தைகள் மீதும் சம அளவிலான பாசம் என்றாலும், மூத்தவளுக்கு, எப்பொழுதும் தம் அன்னை  தமக்குப் பின்னால் பிறந்த இளையவளையே பாராட்டிப் பேசுகிறார்களே என்ற பொறாமை இருந்துகொண்டே இருந்தது. எதற்கெடுத்தாலும் அவளை உதாரணம் காட்டுவது மூத்தவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் எப்போதும் சண்டை போட்டவாறு இருந்தாள். அன்று பொங்கல் திருநாள். தம் மகள்களுக்கு பரிசு கொடுக்க விரும்பிய தாய், அதில் சின்ன சோதனை வைக்க எண்ணி, ஒரு அறையில் இரண்டு பொருட்களை வைத்துவிட்டு, அதில் யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்குத் தகுந்த பரிசுதான் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினார். முதலில் மூத்தவளை அந்த அறைக்குள் அழைத்தார். அவள் வந்து பார்த்தபோது ஒரு புறம் மூங்கில் செதில்களால் உருவாக்கப்பட்ட முறமும், மற்றொரு புறம் பளபளவென மின்னும் பித்தளை சல்லடையும் இருந்தது. பார்வைக்கு பளபளவெனத் தெரிந்த அந்த பித்தளைச் சல்லடையை சற்றும் யோசிக்காமல் எடுத்து வந்தாள் மூத்தவள். சரி என்று சொல்லி அனுப்பிவிட்டு இளையவளைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னார் அந்தத் தாய். அவள் சற்று நேரம் சிந்தித்தவள், மெல்லச் சென்று முறத்த…

உயிரிறகு

Image
பவள சங்கரி நட்பு என்பது இனிமையான பொறுப்பேயன்றி
அருமையான வாய்ப்பன்று! – கலீல் கிப்ரான் நாடிச்சென்று
நயந்துகட்டும் வாய்ப்பின்றி
அமைந்துவிடுகிறது
சிறுவிதயங்களைப்
பிணைக்குமந்த
நட்பெனும்
பொற்சரடுகள்
கடந்ததை உணர்ந்ததாக
வரப்போவதில் நம்பிக்கையாய்
அன்றைய நிலையை
அவ்வண்ணமே
ஏற்றுக்கொள்ளல்.