இன்று பனிப்பெண் முதன் முதலில் மெல்லத்தன் அழகு முகம் காட்டி மறைந்தாள். ஏதோ சொல்லத்தான் வந்திருப்பாள் போல.. சொல்லாமலே சென்றுவிட்டாள். விரைவில் மீண்டும் அவள் வரவிற்காக ஒரு பாடலுடன் காத்திருக்கிறேன்.. பாடல் பிடித்திருந்தால் ஒருவேளை உடன் வருவாளோ... சரி கீழ்கண்ட இந்த என் பாடலை, ‘மே மாதம்’ படத்தில் வரும் என் மேல் விழுந்த மழைத் துளியே என்ற கவிஞர் திரு வைரமுத்து அவர்களின் பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்.. பிடித்திருந்தால்...
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்
கல்லை உருக்கிய கவிமழையே
கனவில் நிறைந்த கற்கண்டே
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்
வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்
கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்
உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
குழலோசையாய் அது இசைத்திடுமோ
பனியும் காற்றும் உரசுகையில்
மெல்லிய கீதம் இசைத்திடுமோ
மலையும் நதியும் உரசுகையில்
எந்த மொழியில் குலவிடுமோ
நினைவெல்லாம் பார்வையானால்
மொழியெலாம் ஊமை ஆகிடுமோ
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
என்னை உருக்கிய கவிமழையே
எங்கே போனாய் இத்தனை காலமாய்
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்