பவள சங்கரி
சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை. இளகிய மனம் படைத்தவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இப்படியும் நடக்குமா? உண்மையாக இருக்குமா? அல்லது வணிக நோக்கில் இப்படி ஒரு தந்திரமோ என்ற எண்ணம் கூட தோன்றலாம்.. இல்லைங்க.. இது சத்தியமாக நடந்த ஒரு சம்பவம். நடக்கக்கூடிய சம்பவம்தான்.. படிப்பினை ஊட்டும் சம்பவம்தான்.. வாசித்துப் பாருங்கள் புரியும்!
“என்னங்க,
உங்க அம்மாகிட்ட இருந்து இன்னைக்கும் தபால்
வந்திருக்கு. இந்த வாரத்தில் மட்டும்
இது இரண்டாவது தபால். பாவங்க
அத்தை, அவுங்களுக்கு ஒரு பதில் தபால்கூட
போட முடியாதா உங்களுக்கு? நாம
பதில் போடாட்டியும், அவங்க தவறாம வாரம்
இரண்டு தபால் போட்டுக்கிட்டு இருக்காங்க.
இந்த தடவை ரொம்ப விசனமா
எழுதியிருக்காங்க. அந்த டேபிள் மேலதான்
இருக்கு, எடுத்துப்பாருங்க. ஒரு நாலு வரி
பதில் கடுதாசியாவது எழுதிப் போடுங்க”
“போடலாம்.
என்னத்த எழுதறது. நாம எழுதப்போற எதுவும்
அவங்கள சந்தோசப்படுத்தப் போறதில்ல.. அதுக்கு சும்மாவே இருக்கலாம்னு
தோணுது சந்திரா.”