Saturday, May 28, 2016

பிரெஞ்சு மொழி மாற்றுக் கதை – கோல்டிலாக்சு மற்றும் மூன்று கரடிகள்



பவள சங்கரி
images (1)

முன்னொரு காலத்தில், அம்மா, அப்பா, குட்டி என்று மூன்று கரடிகள் இருந்தது. அவை மூன்றும் ஒரு பெரிய காட்டின் நடுவே ஒரு மஞ்சள் வீட்டில் வாழ்ந்து வந்தது.

எச்சரிக்கை!



நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் என் தோழி ஒருவரை சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், அவள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. இணையம் குழந்தைகளுக்கு இன்று பரந்துபட்ட ஞானத்தை, நன்றும், தீதும் என அனைத்தையும் குறைவின்றி வழங்குகிறது. பல பெற்றோர் அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, பல நேரங்களில் ஒழுக்கம் போன்ற விசயங்களைக் கவனிக்காமல் கோட்டைவிடும்போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.

பொது நலம்!




பௌதீக உலகின் முடிசூடா மன்னன் சர்.சி.வி.இராமன் தமது அரிய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் நம் பாரதத்தின் பெருமையை உயரச்செய்தவர். முதலில் வங்காள மாநிலத்தின் உதவி கணக்காய்வுத் தலைவராக [Accontant General] ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர். பகல் நேரங்களில் அலுவலகப் பணியை கவனித்துவிட்டு  ஓய்வு நேரத்தில், பௌதிகத்தின் மீது தான் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக,  கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சென்று தமது பௌதிக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய நேர்மையான பணித்திறத்தினால் அலுவலகத்தில் இவருக்கு மேலும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது. 

Wednesday, May 25, 2016

நிறமிலி!




நிறைபொருளாய் இருக்கும் அனைத்தும் நீலமாகிறது
நிறைகடல் நித்தமும் நீலவாடை சூடுகிறது
வெட்டவெளி ஆகாய நீலமேனி மதிமயக்குகிறது
விண்ணிலும் மண்ணிலும் நீலமெங்கும் பூத்திருக்கிறது
எல்லாம் நீலமயமாய் ஆனாலும் கானல்நீராகிறது
வர்ணமேதும் இல்லாத நிறமிலிதான் அனைத்தும்! 
நிறமிலிகள் நிதம் வண்ணச்சூட்டில் வடிவமைப்பினும்
நிசமெனும் நீச்சம் நிறைவானில் வடிகாலாகிறது!


Life