Wednesday, May 25, 2016

நிறமிலி!




நிறைபொருளாய் இருக்கும் அனைத்தும் நீலமாகிறது
நிறைகடல் நித்தமும் நீலவாடை சூடுகிறது
வெட்டவெளி ஆகாய நீலமேனி மதிமயக்குகிறது
விண்ணிலும் மண்ணிலும் நீலமெங்கும் பூத்திருக்கிறது
எல்லாம் நீலமயமாய் ஆனாலும் கானல்நீராகிறது
வர்ணமேதும் இல்லாத நிறமிலிதான் அனைத்தும்! 
நிறமிலிகள் நிதம் வண்ணச்சூட்டில் வடிவமைப்பினும்
நிசமெனும் நீச்சம் நிறைவானில் வடிகாலாகிறது!


No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...