Posts

Showing posts from October 21, 2012

நவராத்திரி கொழுக்கட்டை

Image
அன்பு நட்புக்களே,

நவராத்திரி எல்லோரும் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள்.. ஆயுத பூஜைக்கு நம் ஊரில் பொறி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவுள், நாட்டுச் சக்கரை என அனைத்தும் போட்டு கலந்து வைத்து படையல் போட்டு அதை அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். எப்படியும் நிறைய மீந்து போகும். இனிப்பு இருப்பதால் அதனை வறுத்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்த முடியாது. விரைவில் நமத்தும் போய்விடும். இந்த முறை என் சிறு மூளையைக் கசக்கி ஒரு திட்டம் போட்டேன்.. ஒரு புது ரெசிப்பி ரெடி. அதான் நவராத்திரி கொழுக்கட்டை. செய்வதும் மிகவும் எளிது.

பொறி, அவுள், பொட்டுக்கடலை, நிலக்கடலை, நாட்டுச்சக்கரை அனைத்தும் கலந்த கலவையை மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு போதவில்லையென்றால் மேலும் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். இந்தக் கலவையுடன் ,தேங்காய் பல்லு, பல்லாக நறுக்கி அதனை சிறிது நெய்விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் அதனை பொறி கலவையில் கொட்டி நன்கு பிசையவும். தேவையானால் கொஞ்சம் தேங்காய் தண்ணீர் அல்லது தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வ…

நீதானா அந்த பொன்வண்டு ?

சிலந்தி பின்னிய வலையாய்
சிக்குண்டுக் கிடந்த
 பொன்வண்டு;

கட்டழகாய்
காலநேரமில்லாமல்
மின்னும் அழகு காட்டியபடி!

ஆசை வண்டின்
கானமும் மினுமினுப்பும்
கரிசனமாய் அரவணைக்கும்!

மென்சிறகின் தழுவல்
இங்கிதமாய் சிறைப்பிடிக்க
சங்கீதமாய் மனம் மயங்கும்!

மெய்சிலிர்க்கும் ஆனந்தம்
அளப்பரிய குதூகலம்
சுவாசமெல்லாம் சுகந்தம்!

எனக்கான பொன்வண்டு
எனக்காக ரீங்காரமிட்டு
கனவிலும் கட்டித்தழுவுகிறது!

வண்டு தரும் உறவால்
கொண்டு வரும் புத்துணர்வால்
இரவும், பகலும் தொலைகிறது!

சிறகுவிரித்து சுற்றிவரும்வேளை
இதழ்விரித்து கிறங்கிக்கிடக்கும்
தேன்நிறைந்த மலரும் நானே!

தூர இருந்து துடிக்கச்செய்து,
தூக்கம் கவர்ந்து துவளச்செய்து,
மணம் கவரும் மாயமான
நீதானா அந்த பொன்வண்டு?!?

நன்றி : மணியோசை இதழ் வெளியீடு

http://www.maniyosai.com/cms/literature/poem/neethaana-antha-ponvandu


நித்திலம் - கலீல் ஜிப்ரான்

Image
நித்திலம்


சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..
மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.
அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு ஒன்று தம்முள் ஏதுமிருந்தும் இல்லாததனால் சுகமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாகக் கூறிய அச்சிப்பியை நோக்கி, “ ஆம், நீவிர் சுகமாகவும், நிறைவாகவும் இருப்பினும் உம் அண்மையிலிருப்பவர் சுமப்பதோ சுகமான சுமையானதொரு பேரழகான நித்திலமன்றோ  “ என்றது.
ஆம், வலியையும் வேதனையையும் சுமந்தாலும், சுமப்பது முத்தல்லவோ ?

2 காதல் கீதம் .
ஒரு முறை கவிஞனொருவன் காதல் கவியொன்று புனைந்து வைத்தான். அதிரம்மியமாக அமைந்துவிட்ட, கீதமதனைப் பிரதிகள் பலவாக உருவாக்கியவன்,  ஆடவர், மகளிர் என இரு பாலரான நண்பர்கள் மற்றும்  அறிந்தவர்களென அனைவருக்…