Posts

Showing posts from September 30, 2012

நம்பிக்கை ஒளி! (1)

பவள சங்கரி
”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா... அம்மா.. அம்மா...”
“அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.”
“இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. அம்மா எழுப்பச் சொல்லிச்சுதானே.. “
“அப்பிடியா.. சரி எனக்குந்தான் பசிக்குது . சரி வா இரண்டு பேரும் சேந்து எழுப்பலாம். அப்பதான் அம்மா சீக்கிரமா எந்திரிக்கும்.. இல்லியா.. அப்பா வந்தா வேற திட்டுமில்ல. அம்மா ஏன் சோறாகலன்னு.. சீக்கிரமா எழுப்பலாம்..”

நித்தியப் புன்னகை

-வெகு எளிதாக
வயிறு புடைக்கச் செய்கிறாய்
உன் சொப்புவாய் குவித்து! அது தள்ளாடுகிறது
காற்றடைத்தொரு பையாக. அதன் பின்னாலேயே ஓடுகிறாய்
குப்பைமேடு, கோபுர வாசல்,
கட்டாந்தரை, கற்குவியல்,
சொகுசு வாகனம், சொக்கும் மலர்வனம்,
துர்நாற்றம் வீசும் சாக்கடைநீர்,
பிச்சைக்காரனின் வளைந்த தட்டு
பாரபட்சமில்லாத பயணம்! பறந்தும் மிதந்தும்
போக்குக் காட்டுமதை
விரட்டிச் செல்கிறாய்,
உன் உலகமே அதுவாய் ஆனதோவென்று!
அது வெடிக்கையில்
என் இதயமும் சிதற
கலகலவென சிரித்தபடி
காற்றடைக்கத் தொடங்குகிறாய்
கவலையின்றி மீண்டும் உதடுகுவித்து
மற்றுமொரு வளிக்கூட்டின்
வயிறு புடைக்கச் செய்கிறாய்!காந்தி கண்ட ராமராச்சியம்

Image
பவள சங்கரி

1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் அண்ணலை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டம்தான். குஜராத் மாநிலத்தில் கரம்சந்த காந்தி மற்றும் புத்லிபாய் என்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு தம் 13ம் வயதிலேயே அன்னை கஸ்தூரிபாயுடன் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் தம் வழக்குரைஞர் (பாரிஸ்டர்) படிப்பை முடித்து, மும்பையில் சில காலம் பணியாற்றினார். பிறகு ராஜ்காட்டில் சிலகாலம் ப்ணிபுரிந்து, அங்கிருந்து 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் நிகழ்வுகளே இவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சியினால், இனப்பாகுபாடும், மதவெறியும் மக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்தவர், போராட்டத்தில் ஈடுபடத்துவங்கினார்.

ஒருமுறை பிரிட்டோரியா நகருக்குச் செல்லும் பொருட்டு, தொடருந்தில், முதல் வக…

சிங்கமடங்கல் - கலீல் ஜிப்ரான்