Wednesday, October 3, 2012

நித்தியப் புன்னகை



-



வெகு எளிதாக
வயிறு புடைக்கச் செய்கிறாய்
உன் சொப்புவாய் குவித்து!
அது தள்ளாடுகிறது
காற்றடைத்தொரு பையாக.
அதன் பின்னாலேயே ஓடுகிறாய்
குப்பைமேடு, கோபுர வாசல்,
கட்டாந்தரை, கற்குவியல்,
சொகுசு வாகனம், சொக்கும் மலர்வனம்,
துர்நாற்றம் வீசும் சாக்கடைநீர்,
பிச்சைக்காரனின் வளைந்த தட்டு
பாரபட்சமில்லாத பயணம்!
பறந்தும் மிதந்தும்
போக்குக் காட்டுமதை
விரட்டிச் செல்கிறாய்,
உன் உலகமே அதுவாய் ஆனதோவென்று!
அது வெடிக்கையில்
என் இதயமும் சிதற
கலகலவென சிரித்தபடி
காற்றடைக்கத் தொடங்குகிறாய்
கவலையின்றி மீண்டும் உதடுகுவித்து
மற்றுமொரு வளிக்கூட்டின்
வயிறு புடைக்கச் செய்கிறாய்!








No comments:

Post a Comment