Thursday, April 17, 2014

'இலைகள் பழுக்காத உலகம்’


பவள சங்கரி

'இலைகள் பழுக்காத உலகம்  - புத்தக மதிப்புரை

ராமலஷ்மி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு இது. ஆழ்ந்த அனுபவத்தின் சாயலை ஏற்படுத்தும் தலைப்பு. இலைகள் பழுக்காத உலகம் என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் அது பலவிதமான எண்ண ஓட்டங்களுக்கு வழி வகுக்கின்றன. பழையன கழிந்தால் தானே புதியன பிறக்க முடியும்? பூமியில் புதியன வாழ இடம் வேண்டுமேவாழ்ந்து முடித்து ஆண்டு அனுபவித்த ஒன்று விலகி வழிவிட்டால்தானே புதிதாகப் பூத்து மணம் வீசும் ஒன்று வாழ வழி கிடைக்கும். இப்படியான எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே வேறு பல வண்ணங்களும் காணக் கிடைத்ததில் நின்றது எது, வென்றது எது என மீண்டும் சிந்தனை ஆற்றில் நீந்தியபடி வெளிவருவோம்..  ராமலஷ்மியின்  வார்த்தைகளின் எளிமையில் கருத்துகளின் கனமும் சுகமான சுமையாகத்தான் ஆகிவிடுகிறது!

Monday, April 14, 2014

வெற்றி தரும் புத்தாண்டே வருகவே!

பவள சங்கரி






கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும்  கோபதியே
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன் 
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன்  தினம்! தினம்!
சித்திரை மகளவள் தருவாள் ஜெயம்! ஜெயம்!


Sunday, April 13, 2014

தமிழ் புத்தாண்டு மலர்ந்தது!


பவள சங்கரி



சித்திரை மகள் ஜனித்தாள்!
ஜெயமாய் முகம் மலர்ந்தாள்!!!

நித்தம் நிலவின் ஒளியில்
சித்தம் மலரும் சிரிப்பில்
முத்தம் சிதறும் புவியில்
கன்னம் சிவக்க கலந்தால்
முன்னம் இருந்த நிலையில்
இன்னம் இருக்க வள்ளல்
அருளும் அளித்து சொல்லல்
சுவையும் கரும்பும் தேனும்
பாலும் பழமும் கற்கண்டும்
சந்தம் பலவும் சரமாரியாய்
வெடிக்கும் உலகும் பிரகாசமாய்
படிக்கும் பாடமும் உள்ளுருக்குவதாய்
நொடிக்கும் பொழுதும் இன்னமுதாய்
வாழ்க! வாழ்கவே!! வளமாய் வாழ்கவே!!