Posts

Showing posts from October 27, 2013

அருளுடை அன்னை சாரதா தேவியார்

Image
பவள சங்கரி கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை. இந்த ஆன்மீக எண்ணங்களுக்கு அடிகோலுகிற, தூய்மை, பொறுமை, பக்தி, ஒழுக்கநெறி, தன்னலமற்ற அன்பு ஆகிய குண நலன்கள் பிறவியிலேயே வாய்க்கப் பெறுகிறார்கள் பெண்கள். உண்மையிலேயே நம் இந்திய வரலாற்றின் முக்கியமான பக்கங்களை நிரப்புவது இதுபோன்ற ஆத்மாக்களின் சரிதங்களையே. குறைபாடுகளைக் களைந்து தனி மனித ஒழுக்க நெறியை பின்பற்றி, அகத்தூய்மை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோர், வாழ்வோர் எண்ணற்றவர். நாகரீகம் வளர, வளர நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவு மாற்றங்கள் வந்திருப்பினும், அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே சத்தியம். சாதாரண மானிடராய் இருப்பவருக்கே இந்நிலை எனும்போது, ஒரு மகானாக அவதரித்த, தெய்வப் பிறவியான அவருக்கு வாழ்க்கைப்படும் ஒரு பெண்மணி எப்படியிருப்பார் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!

Image
பவள சங்கரி நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

Image
வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அனைவரும் நலமா? ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஆனால் கூடவே மாற்றங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டு இல்லை. அடுத்த ஆண்டு எப்படியிருக்குமோ தெரியாது. இன்று மகிழ்ச்சியாக உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு கொண்டாடிவிட்டுப்போகலாமே, இல்லையா? நாளைபற்றி யார் அறிவார்? அரசியலில் ஆரம்பித்து, சமுதாயம், குடும்பம், தனிப்பட்ட முறையில் என எத்தனை, எத்தனை மாற்றங்கள். இளம் வயதில் அப்பா, அம்மாவிடம் பட்டாசும், புதுத் துணியும் சண்டை போட்டு வாங்கியதில் இருந்த மகிழ்ச்சி இன்று நம் விருப்பம்போல வாங்கிக் கொண்டாடுவதில் இல்லை. அன்று என் சகோதரிகளுடன் சண்டை போடுவேன் அப்பா மொத்தமாக வாங்கிப் போடும் துணியில் நான் தான் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வேன் என்று! அதில் எத்தனை தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்வோம். நாம் விரும்பிய உடையும் பட்டாசு பங்கில் ஒரு மத்தாப்பு பெட்டி அதிகம் கிடைத்துவிட்டாலோ ஏதோ உலகமே நம் காலடியில் கிடப்பதுபோல அப்படி ஒரு பெருமை. தலை நிமிர்ந்து நடந்து செல்வோம். இன்று அப்படி சண்டை போடவும் ஆளில்லை

அம்பலவாணா... அம்பலவாணா..

பவள சங்கரி அம்பலவாணா.. அம்பலவாணா அருளாளா ஆனந்தவாணா பொருளியலில் உழன்றுய்ந்தேனே பொற்பாதம் சேரவரம் அருளாயோ காலமெலாம் காத்துக்கிடந்தேனே காதலிலுருகி உளம்நொந்தேனே அம்பலவாணா.. அம்பலவாணா அருளாளா ஆனந்தவாணா!

சித்தன்னவாசல்

பவள சங்கரி  ‘ குயிலின் கீதமும் , கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன ..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட   பாரமாகி   சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது . அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே . அது குயிலாக இருந்தால் என்ன , இல்லை மயிலாக இருந்தால் என்ன , அழகு எங்கிருந்தாலும் அது ஆபத்துதான் .. என்ன இது என் நினைப்பில் இவ்வளவு விரக்தி , இது தப்பாச்சே . தைரியத்தை விடக்கூடாது ’... சரசு தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அது உள்ளத்தின் ஆழத்தில்   இருந்ததுதான் . இல்லாவிட்டால் இந்த 35 வயதில் 300 முறை செத்திருக்க வேண்டும் . அப்படிப்பட்ட ஒரு ஒசத்தியான வாழ்க்கையல்லாவா கிடைத்திருக்கிறது .  முதல் அடி விழுந்த அந்த மோசமான நாளை இன்னைக்கும் மறக்க முடியுமா ...