Tuesday, June 9, 2020

தாஜ்மகால் - கொரிய கவிதை


நவீன கொரியக் கவிதைகளில், ஹான் யொங் யூன் போன்று தாஜ்மஹாலின்

அழகு மற்றும் மாட்சிமையைப் பற்றிப் புனைந்துள்ள கொரியாவின்

முன்னணி கவிஞர் மோ யூன்-சுக் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிடலாம்:

 

In the milk-white mausoleum

Hides a flower

It is the place where the breeze kisses the ripple of water

And clouds gather.

 

பால் வெள்ளைக் கல்லறையினுள்

மறைந்திருக்கிறது ஒரு மலர்

தென்றல் நீரலைகளை முத்தமிடும் இவ்விடத்தில்தான்

மேகங்களும் திரள்கின்றன.

(தமிழாக்கம் : பவள சங்கரி)

 


சிண்டலாய்கோட் - கொரிய கவிதை


பிரபலமான நவீன கொரிய கவிஞர்களில் ஒருவரான கிம் ஸோ வோ அவர்களின்

 பிரபலமான கவிதைகளில் ஒன்றான சிண்டலாய்கோட் அல்லது

 


அஸலேஸில். உண்மையான காதலின் அடிப்படை மன்னிப்பு. அக்காலகட்டத்தில் மனிதாபிமானத்தின் உச்சம் தொட்ட, உலக அமைதிக்கு வித்திட்ட புனைவாகக் காணப்பட்டுள்ள கவிதை இது.

 

When you go away

Sick of seeing me,

I shall let you go gently, no words.

 

From Mount Yak in Yongbyon

An armful of azaleas

I shall gather and scatter on your path.

 

Step by step away

On the flowers lying before you,

Tread softly, deeply, and go.

 

When you go away,

Sick of seeing me,

Though I die, No, I shall not shed a tear.

 

என்னை பார்க்கப் பிடிக்காமல்

நீ விலகிச் சென்றால்

உன்னை அமைதியாக அனுப்பிவிடுவேன், பேச ஏதுமில்லை.

 

யாங்பியோனின் யாக் குன்றிலிருந்து

 கைநிறைய அஸேலியாஸ் மலர்களை

அள்ளிக்குவித்து உன் பாதையெலாம் பரவச்செய்வேன்.

 

உன் முன்னால் சிதறிக்கிடக்கும் அம்மலர்களின்மீது

அடிமேல் அடி வைத்து மெதுவாக

மென்மையாகக் கால்களை ஊன்றிச் செல்.

 

என்னை பார்க்கப் பிடிக்காமல்

நீ விலகிச் சென்றால்

நான் இறந்தே போவதானாலும், இல்லை, ஒருதுளிக்கண்ணீரும் சிந்தமாட்டேன்.

 


Sunday, June 7, 2020

தூக்கிவெச்சான் பாறை



பெருங்கற்படைகள் என்பது உயிரற்ற உடல் புதைக்கப்பட்ட இடங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள். கல்லால் ஆன பெட்டி வடிவ கல்லறை, வரையறுக்கப்பட்ட கருவூலங்களைக் கொண்ட கல் வட்டங்கள் ஆகிய கட்டமைப்புகள் இவற்றுள் அடங்கும். மனித உயிர்க்காப்பின் நினைவுச்சின்னங்களான இவைகள் பழங்கால கலாச்சாரம் என்று அறியப்பட்ட இயல்பான குணநலன்களை இன்றைய மக்களுக்கு எளிதாகப் புரியச்செய்பவை. மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைக் குறிக்கும் இடைக்கற்காலத்திலிருந்து ஆரம்பகால வரலாற்று காலத்திற்கு (கி.மு.2500 முதல் கி.பி. 200 வரை) இட்டுச் செல்லும் வழமை உலகம் முழுவதிலும் நீடித்தன. இந்தியாவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கற்காலத்தின் (கி.மு. 1500 முதல் கி.மு. 500 முதல் 1500 வரை) பெருங்கற்படைகள் நினைவுச் சின்னங்களை பெருமளவில் கண்டுபிடித்துள்ளனர்.




பெருங்கற்படைக்கால மக்கள் தங்கள் சமூகத்தின் பிரபலமான மக்களுக்கும், படைத்தளபதிகள், சிற்றரசர்கள், சமூக நலனிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் போன்றோருக்காக நினைவுச்சின்னத்துடன் கூடிய புதைகுழிகளை நிறுவியுள்ளனர். கற்பதுக்கை சங்க காலம் என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டுவரை எனத் தொல்லியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ள. சங்க காலத்தில் தமிழகத்தில் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அக்கால இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். அப்போர்களில் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களைப் புதைத்த இடங்கள் ‘பதுக்கை’ எனப்பட்டன. இதைப் பெருங்கற்காலப் பண்பாடு என்றும் கூறுவர்.
பதுக்கையில் கல் நடல் அல்லது அந்தப் பதுக்கைகள் மீது கல்நட்டு அதில் அவர்கள் உருவத்தைச் செதுக்கி, அவற்றில் அவ்வீரர்களின் பெருமைகளையும், பெயரையும் பொறித்து வைத்தனர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் அது நடுகல் எனப்பட்டது.
இதுபோன்ற ஒரு பெருங்கற்கால சின்னம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேம்மாண்டம்பாளையத்தை அடுத்து உள்ள மங்கரசுவளையபாளையத்தில் காணப்படுகிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் முடியரசு தலைமையில் சேவூர் தனிப்பிரிவுக் காவலர் வெள்ளியங்கிரி மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்துள்ள இதைத் தூக்கிவெச்சான் பாறை என்று கூறுகின்றனர்.