Tuesday, November 22, 2016

உறுமீன்



உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை...  நன்றி.


ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி)





அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் 
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு .
மூதுரை - ஔவையார்

 பொறுமை அடக்கம் ஆகிய உயரிய பண்புகளைக் கடைபிடித்து இருப்பவர்களெல்லாம் அறிவிலிகள் அல்லர். கண்ணெதிரில் நீந்திச் செல்லும் சிறிய மீன்களைக்கண்டபோதும் அவற்றைக் கொத்தாமல் பொறுமையாக பெரிய மீனுக்காக  ஒற்றைக் காலில் தவமிருந்து உறுமீனாகிய பெரிய மீன் வரும்போது படக்கென்று கொத்திக்கொண்டு பறந்துவிடுமாம். அடக்கமும், பொறுமையும் அறிவில் தெளிவைத் தரக்கூடியனவாம்!



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
காலமறிதல் குறள் எண்:490

கொக்கும், மீன்கொத்தியும் குணத்தில் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் தெரிகிறது.

 கொக்குப்போல் அமைதியாய் சமயம் வரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அது தன் அலகால் சரியாகக் குத்தும் செயல் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டுமாம்.

பொதுவாக, வல்லூறு, கழுகு, போன்று புறாவையும், கோழிக்குஞ்சுகளையும் விரட்டிப்பிடித்து வதைத்துக்கொல்லும் வழமையுடையதன்று இந்த கொக்கு. தன் உணவை அமைதியாக பொறுமையாகக் காத்திருந்து, அந்த மீனிற்கே தான் மடியப்போவது அறியாதவாறு சமயம் பார்த்து படக்கென்று கௌவ்வி சடுதியில் உண்டு முடித்துவிடுமாம்... 

No comments:

Post a Comment