Posts

Showing posts from March 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(31)

Image
நண்பர்கள் சேர்ந்து விட்டால் அங்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சமேது… குடும்பத்தினர்கள், அவரவர்களும் தங்கள் சொந்த கதையையும் சோகக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அடிக்கும் லூட்டிகள் பெற்றோருக்கு வேண்டுமானால் சமாளிப்பது சிரமமாகலாம். ஆனால் அவர்கள் படும்பாட்டை கேட்பவர்களுக்கு சுவாரசியத்தில் குறைவிருக்காது. குழந்தைகள் எளிதாக தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளைப் பார்த்து சகல பழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தயங்குவதும் இல்லை. நாகரீகத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் போல நடந்து கொள்ளும் போது அவர்களுக்கு அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.சந்திரு, தம் 8 வயது மகனை, ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டேயிருக்கிறாய். வேறு பிழைப்பே கிடையாதா என்று கேட்கப்போக, அவன் அதை துளியும் சட்டை செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருந்திருக்கிறான். பல முறை கேட்டும் பதில் இல்லாதலால், கோபம் தலைக்கேற, முதுகில் ஒரு தட்டு தட்டி விட்…

அக்கக்கூ.......

Image
அக்கக்கூ… அக்கக்கூ….. அக்கக்கூ…..

களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னு
கசிந்துருகி காதலனின் வரவிற்காய்
தவமிருக்க, திசைமாறிய புள்ளது
பேசிய மொழிகள் பலவும்
சிந்தையை நிறைத்து பேதலித்த
புத்தியும் நொந்த மனமும்
கொண்ட பேதை அவள்
நட்ட கல்லாய் நலிந்து நிற்க
ஆம்பி பூத்த வரப்பதனில்
ஆனந்தமாய் காகலூகம் ஒன்னு
கருத்தாய் கதைபாடி சேதிசொல்ல
ஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்
மானுடக் காதலது விட்டவுடன்
தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!
புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்
துணைவேறு நாடாமல் கொண்டவனின்
வரவுக்காய் காலமெல்லாம் காத்துக்கிடக்கும்!

அரிநெல் - கவிதை நூல் - எம் பார்வையில்

Image
அரிநெல் - பிச்சினிக்காடு இளங்கோ


ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இந்த உத்தியை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி தம் கவித்துவத்தை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
‘அரிநெல்’ என்ற கவின்மிகு தலைப்பின் தோன்றலின் கூற்றையும் அச்சொல்லின் பொருள் அளிப்பதன் மூலம் ஆரம்பித்திருக்கிறார்.

தொன்மைக்கும் தொன்றுதொட்டுத் தொடரும் வேளாண்மைக்கும் உரிய சொல். என்ற பொருளும்,
அரிநெல் கசக்கி நெல்லெடுத்துச் சேமித்து, பின் விற்றுக் காசு பார்ப்பது சின்ன வயதில் ஒரு கொண்டாட்டம்.
விளைந்தவைதான் ஆனாலும் விளைச்சலுக்குரியவை காரணம் விதைப்பதற்குரியவை... என்ற தன்னிலை விளக்கத்தையும் மிகத் தெள…