அக்கக்கூ.......


அக்கக்கூ… அக்கக்கூ….. அக்கக்கூ…..


களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னு
கசிந்துருகி காதலனின் வரவிற்காய்
தவமிருக்க, திசைமாறிய புள்ளது
பேசிய மொழிகள் பலவும்
சிந்தையை நிறைத்து பேதலித்த
புத்தியும் நொந்த மனமும்
கொண்ட பேதை அவள்
நட்ட கல்லாய் நலிந்து நிற்க
ஆம்பி பூத்த வரப்பதனில்
ஆனந்தமாய் காகலூகம் ஒன்னு
கருத்தாய் கதைபாடி சேதிசொல்ல
ஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்
மானுடக் காதலது விட்டவுடன்
தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!
புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்
துணைவேறு நாடாமல் கொண்டவனின்
வரவுக்காய் காலமெல்லாம் காத்துக்கிடக்கும்!
மண்ணில் உய்ர்ந்த புள்ளின் இனமது!
கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!
அக்கக்கூ… அக்கக்கூ… அக்கக்கூ…..
படங்களுக்கு நன்றி :

நன்றி : வல்லமை

Comments

 1. /மண்ணில் உய்ர்ந்த புள்ளின் இனமது!
  கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!/

  ஆம் பவளா. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. காலப்போக்கில் எம் குழந்தைகளுக்கு குருவிப் படங்களைத்தான் காட்டவேண்டி வரப்போகுது.கவனமாய்ப் படங்களையாவது
  சேகரிப்போம்.உலகக் குருவிகள் தினமாம்.அழித்துக்கொண்டே வாழ்த்துச் சொல்லும் உலகமிது !

  ReplyDelete
 3. கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!
  அக்கக்கூ… அக்கக்கூ… அக்கக்கூ…..//

  உண்மைதான்.அருமையான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஸாதிகா,

   வாருங்கள் என் இனிய தோழியே. தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

   அன்புடன்

   பவள சங்கரி.

   Delete
 4. அன்பின் ஹேமா,

  இனி ஒரு விதி செய்வோம்!
  எந்த நாளும் அதை காப்போம்!
  அழிந்து கொண்டிருக்கும் குருவி இனம் காப்போம்!
  என உறுதி எடுப்போம் தோழி.....

  அன்புடன்

  பவள சங்கரி.

  ReplyDelete
 5. சிந்தையை நிறைத்து சிறப்பான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. அன்பின் இராஜராஜேஸ்வரி,

  மிக்க நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'