Posts

Showing posts from October 3, 2010

முதுமையின் மழலை.............

Image
என் மழலைக் குறும்புகளை உன் தாய்மை பறைசாற்றி மகிழ்ந்தது

உன் முதுமைக் குறும்புகளை என் ஆணவம் மூடி மறைக்கிறது.

என் மழலை அழிச்சாட்டியத்திற்கு நீ கொடுத்த பரிசு வண்ண வண்ண இனிப்புகள், தாலாட்டுக்கள்.

உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.

என் மழலையின் பரிணாமம் வாலிபம் உன் முதுமையின் பரிணாமம் மறுபிறவியா?

அடுத்த பிறவியிலும் உன் கர்பக்கிரகத்தில் என் உயிர்க்கருவை அனுமதிப்பாயா?

மௌனம் பேசியதே !

நிலாவே வா.........செல்லாதே வா....... எனை நீதான் பிரிந்தாலும்....நினைவாலே அணைப்பேனே...............கவிஞர் வாலி அவர்களின், நம் நெஞ்சுக் குழியைத் தீண்டிய பாடல் அது......
இன்றைய அதிவேக பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதற்கான ஏராளமான வாய்ப்புக்களும் குவிந்துக் கிடக்கிறது......திருமணம், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கும் போது....... இன்றைய திருமண பந்தம் என்ற கட்டமைப்பின் ஆணி வேரே ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது....... சகிப்புத் தன்மை, சரியான புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இதற்கெல்லாம் சிலர் வாழ்க்கையில் அர்த்தமற்றுப் போகிறது.........
என் தோழி மேகலா, ஒரு தனியார் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர். பொறுப்பான பதவியில் இருக்கும் இவர் உண்மையான உழைப்பாளி. தன்னுடைய 35 வயதில் கம்பெனியில் தன் திறமையை நிரூபித்து, பதவி உயர்வு, பல போட்டிகளுக்கிடையே பெற்று, அந்த உன்னதமான தருணத்தை கணவருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற பேராவலுடன் வீடு தேடி ஓடி வருகிறார். வேலை முடித்து வீட்டில் ஓய்வாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் கணவ…

இயற்கை அன்னையின் இன்ப ஊற்று........

Image
நொடிப் பொழுதின் உன்னத நினைவலைகள் பரந்த பசுமையான வயல் வெளிகள் காட்சிக்குத் தப்பிய இயற்கை வனங்கள் இலவசமான மன ஆறுதல்கள்...........
குளிர்ந்த இளங்காலைப் பொழுது, ஆதவனின் பொன்னொளிக் கிரணங்கள் நீல வானம், வெள்ளி நிலவு, மின் மினியாய் நட்சத்திரக் கூட்டங்கள் கடலலைகளின் ஆர்ப்பரிப்பு, நெடிதுயர்ந்த பசுமை மலை முகடு சுழன்று வீசும் காற்று, கறுத்த வான் மேகம், சோ......வென கொட்டும் வெண்பஞ்சுப் பொதியென அருவி
அன்றையப் பொழுதை இனிமையாக்கும் சிறிய விடயங்கள் சீறி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தின் இளைப்பாற்றும் நிழற் குடைகள்!
ஓடையின் ஓரங்களில் நட்புக்கரம் நீட்டும் நெடிதுயர்ந்த மரங்கள் வெட்கித் தலைகுனியும் இலைகள், மலரத் துடிக்கும் வண்ண மொட்டுக்கள் கோடைக்கால மழையில் நனைந்த மணம் வீசும் மலர்கள் இதயத்தைக் குளிரச் செய்யும் குறிஞ்சிப் பூக்கள்.
எளிதாகப் பகிர்ந்துக் கொள்ளப்படும் ஆசிகள்! தம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அன்னைக்கு, நாம் செய்யும் கைம்மாறு கபடமற்ற புன்னகை.............

அதிர்ச்சி வைத்தியம்.......

ஷோபனா, அமெரிக்கா கிளம்புவதற்கு பேக்கிங் பண்ண ஆரம்பித்து விட்டாள். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. முப்பது நாட்கள் ஓடிவிட்டது.........
ஒரு வருடம் முழுவதும் அடக்கி வைத்திருந்த பாசம், மடை திறந்த வெள்ளம் போல, பொங்கிவர, முப்பது நாட்களும் முப்பது நொடியென சிட்டாய்ப் பறந்து விட்டது. மனம் மட்டும், பரபரப்பாக, செய்வதொன்றும் அறியாது, பரிதவித்துப் போகிறது. மகளையும், குழந்தைகளையும் பிரிய வேண்டுமே என்று நினைக்கும் போதே, அடிவயிற்றில் சிலீரென ஒரு உணர்வு. ஆனாலும் வேறு வழியில்லையே...... அதற்கு மேல் விடுமுறை இல்லை, விசா பிரச்சனை, குடியுரிமை..........இப்படி ஏதேதோ காரணங்கள் மட்டும், பதிலாகக் கிடைக்கும்.
" அம்மா, இதென்ன எல்லா சாமான்களையும் பேக்கிங் பெட்டியோடயே வைக்கிறீங்க? அதுவே பாதி இடத்தை அடைச்சிக்கும். அது மட்டுமில்லாம இருபது கிலோ வெயிட்தான் அலௌட், தெரியுமில்ல. எல்லா பேக்கிங்கையும் பிரிச்சு வையுங்கம்மா.....", என்றாள்.
" ஷோபி, என்னம்மா குழந்தையோட விளையாட்டுச் சாமானையெல்லாம் வெளியே எடுத்து வைக்கிறே?".
" என்னம்மா, பெட்டி முழுக்க …

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் -3.

Image
உடல் பருமன்:
அதிக பருமனாக இருப்பது, எப்பொழுதும் ஆபத்தானது என்று பயப்படத் தேவையில்லை. சில நேரங்களில் உடல் வாகு மற்றும் பரம்பரை வழி, இப்படி சிலக் காரணங்களினால் கூட உடல் பருமன் வரலாம். ஒடிசலான தேகம் உடையவர்களுக்கு நோயே வராது என்ற உத்திரவாதமும் கிடையாது.... கட்டுப்பாடான உடல் எடை உடையவர்கள் ஓரளவிற்கு, ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும், என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நாம் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவிற்கு சாப்பிடும் முறையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வயதிற்கு தகுந்த உடற்பயிற்சி அவசியம் தேவை. குறைந்தபட்சம், 45 நிமிட நடைப்பயிற்சியாவது, அன்றாடமோ, வாரம் மூன்று முறையாவதோ கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
உடல் பருமன் அளவைக் குறிக்க பிரபலமான முறை, BMI என்பது. இது, ஒருவரின், மொத்த உடல் எடையின், அளவை [கிலோ கிராமில்] அவர்களுடைய, உயரத்தை [மீட்டரில்] அந்த எடையில்,சதுரித்து, வகுத்து கணக்கிடப்படுகிறது. அதாவது, சாதாரணமாக 5.5 அடி உயரமுள்ள ஒருவர்,[ 1.65 மீ] 132 பவுண்ட் அல்லது 60 கிலோ எடை இருந்தால், அவருடைய, BMI , 22 ஆகும். BMI, 25ம் அதற்கு அதிகமா…