Saturday, October 9, 2010

முதுமையின் மழலை.............


என் மழலைக் குறும்புகளை
உன் தாய்மை பறைசாற்றி மகிழ்ந்தது


உன் முதுமைக் குறும்புகளை
என் ஆணவம் மூடி மறைக்கிறது.


என் மழலை அழிச்சாட்டியத்திற்கு நீ கொடுத்த பரிசு
வண்ண வண்ண இனிப்புகள், தாலாட்டுக்கள்.


உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது
வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.


என் மழலையின் பரிணாமம் வாலிபம்
உன் முதுமையின் பரிணாமம் மறுபிறவியா?


அடுத்த பிறவியிலும் உன் கர்பக்கிரகத்தில்
என் உயிர்க்கருவை அனுமதிப்பாயா?

17 comments:

  1. நல்ல உணர்வுள்ள கவிதை..

    ReplyDelete
  2. எத்தனிக்கும் போதெல்லாம் புப்புதுகவிதைகளை மனம் நிறைய தரும் உங்களுக்கு, இப்பிறவியில் கிடைத்தே அதே கருவறை மீண்டும் கிடைக்க வேண்டும் என வேண்டிகொள்கிறேன் தமிழன்னையிடம்!

    ReplyDelete
  3. எத்தனிக்கும் போதெல்லாம் புப்புதுகவிதைகளை மனம் நிறைய தரும் உங்களுக்கு, இப்பிறவியில் கிடைத்தே அதே கருவறை மீண்டும் கிடைக்க வேண்டும் என வேண்டிகொள்கிறேன் தமிழன்னையிடம்!

    ReplyDelete
  4. நன்றிங்க தமிழமிழ்தம்.....

    ReplyDelete
  5. பெத்த மனம் பித்து பிள்ளைமனம் கல்லுன்னு சொல்லுவாங்க. ஆனா, கடைசிவரிகளில் தெரியுது கல்லுக்குள் நிறைந்திருக்கும் ஈரம்.

    அருமையான கவிதைங்க.

    ReplyDelete
  6. //உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது
    வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.//

    நல்ல கற்பனை வரிகள்

    ஏதோ நம்மலால அவங்கள நிம்மதியா தூங்க வைக்கிறதுக்கு நம்மாளானது ...

    ReplyDelete
  7. ஆழமான ஒப்பீட்டுடன் அமைந்த அருமையான கவிதை.

    ReplyDelete
  8. நன்றிங்க சுந்தரா.

    ReplyDelete
  9. நன்றிங்க வானம்பாடிகள் சார்.

    ReplyDelete
  10. நன்றிங்க ராமலஷ்மி மேடம்.

    ReplyDelete
  11. மனம் தொடும் சிந்தனை வரிகள். பெற்ற தாயை காப்பகத்தில் விடும் இந்த தலைமுறை தமிழ் பண்பாட்டை அழித்து விட்டு அடுத்தவன் கலாச்சாரம் உயர்ந்தது என தன் முகத்தில் தானே காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இது போன்ற பதிவு தேவைதான்.

    ReplyDelete
  12. நன்றிங்க நண்டு நொரண்டு சார்.

    ReplyDelete
  13. நன்றிங்க தமிழ்க் காதலரே!

    ReplyDelete