நொடிப் பொழுதின் உன்னத நினைவலைகள்
பரந்த பசுமையான வயல் வெளிகள்
காட்சிக்குத் தப்பிய இயற்கை வனங்கள்
இலவசமான மன ஆறுதல்கள்...........
குளிர்ந்த இளங்காலைப் பொழுது, ஆதவனின் பொன்னொளிக் கிரணங்கள்
நீல வானம், வெள்ளி நிலவு, மின் மினியாய் நட்சத்திரக் கூட்டங்கள்
கடலலைகளின் ஆர்ப்பரிப்பு, நெடிதுயர்ந்த பசுமை மலை முகடு
சுழன்று வீசும் காற்று, கறுத்த வான் மேகம்,
சோ......வென கொட்டும் வெண்பஞ்சுப் பொதியென அருவி
அன்றையப் பொழுதை இனிமையாக்கும் சிறிய விடயங்கள்
சீறி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தின் இளைப்பாற்றும் நிழற் குடைகள்!
ஓடையின் ஓரங்களில் நட்புக்கரம் நீட்டும் நெடிதுயர்ந்த மரங்கள்
வெட்கித் தலைகுனியும் இலைகள், மலரத் துடிக்கும் வண்ண மொட்டுக்கள்
கோடைக்கால மழையில் நனைந்த மணம் வீசும் மலர்கள்
இதயத்தைக் குளிரச் செய்யும் குறிஞ்சிப் பூக்கள்.
எளிதாகப் பகிர்ந்துக் கொள்ளப்படும் ஆசிகள்!
தம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அன்னைக்கு,
நாம் செய்யும் கைம்மாறு கபடமற்ற புன்னகை.............
இயற்கை அன்னையை பற்றிய நல்லதொரு படைப்பு.
ReplyDeleteநன்றிங்க எல். கே.
ReplyDeleteஇயற்கையை ரசித்து எழுத எழுத என்றும் சலிப்பு தோன்றுவதேயில்லை நல்லாயிருக்குங்க....
ReplyDeleteநன்றிங்க தமிழரசி.
ReplyDeleteகாட்சிகள் அழகாய் கண் முன் விரிகிறது. சூப்பர் மேடம்.
ReplyDeleteஇயற்கை அழகு - உங்கள் கவிதையும் அழகு!
ReplyDeleteஅழகு..
ReplyDeleteazhagaana varnanai..kalakal..
ReplyDeleteநன்றிம்மா வித்யா.
ReplyDeleteநன்றிங்க சித்ரா.
ReplyDeleteநன்றிம்மா ப்ரியா.....அழகே சொன்ன அழகு....
ReplyDeleteநன்றிங்க காயத்ரி.
ReplyDeleteஉண்மையில் வற்றாத ஊற்றுதானுங்க...அழகு...
ReplyDeleteநன்றிங்க பாலாசி.
ReplyDeleteநல்லாருக்கு..
ReplyDelete//அன்றையப் பொழுதை இனிமையாக்கும் சிறிய விடயங்கள்
ReplyDeleteசீறி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தின் இளைப்பாற்றும் நிழற் குடைகள்!//
மிகச் சரி. நல்ல பதிவு.
நல்லா வந்திருக்குங்க. :)
ReplyDeleteநன்றிங்க உழவன்.
ReplyDeleteராமலஷ்மி நன்றிங்க........
ReplyDelete// இதயத்தைக் குளிரச் செய்யும் குறிஞ்சிப் பூக்கள்.//
ReplyDeleteஅருமையோ அருமை உங்கள் கவிதை....!!
வானம்பாடிகள் சார்..........ரொம்ப நன்றிங்க சார்.
ReplyDeleteநன்றிங்க அப்துல் காதர்.
ReplyDeleteஇயற்கை ரசிக்க ரசிக்க எழுத எழுத ஊற்றுப்போல சொற்கள் ஊற்றாய் வரும் !
ReplyDeleteஇயற்கையை ரசிக்கும் உங்களுக்கு அந்த இயற்கை அன்னை நல்லதொரு வரத்தை தான் அளித்திருக்கிறார்.
ReplyDeleteமன நிறைவாக இருக்கிறது உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது.
தமிழில் மலரத் துடிக்கும் வண்ண மொட்டுகள் உங்கள் படைப்பை கண்டு வளர துடிக்க வேண்டும் என விரும்புகிறேன்!
நன்றி
நன்றி தமிழமிழ்தம் அவர்களே!
ReplyDelete