உடல் பருமன்:
அதிக பருமனாக இருப்பது, எப்பொழுதும் ஆபத்தானது என்று பயப்படத் தேவையில்லை. சில நேரங்களில் உடல் வாகு மற்றும் பரம்பரை வழி, இப்படி சிலக் காரணங்களினால் கூட உடல் பருமன் வரலாம். ஒடிசலான தேகம் உடையவர்களுக்கு நோயே வராது என்ற உத்திரவாதமும் கிடையாது.... கட்டுப்பாடான உடல் எடை உடையவர்கள் ஓரளவிற்கு, ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும், என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நாம் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவிற்கு சாப்பிடும் முறையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வயதிற்கு தகுந்த உடற்பயிற்சி அவசியம் தேவை. குறைந்தபட்சம், 45 நிமிட நடைப்பயிற்சியாவது, அன்றாடமோ, வாரம் மூன்று முறையாவதோ கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
உடல் பருமன் அளவைக் குறிக்க பிரபலமான முறை, BMI என்பது. இது, ஒருவரின், மொத்த உடல் எடையின், அளவை [கிலோ கிராமில்] அவர்களுடைய, உயரத்தை [மீட்டரில்] அந்த எடையில்,சதுரித்து, வகுத்து கணக்கிடப்படுகிறது. அதாவது, சாதாரணமாக 5.5 அடி உயரமுள்ள ஒருவர்,[ 1.65 மீ] 132 பவுண்ட் அல்லது 60 கிலோ எடை இருந்தால், அவருடைய, BMI , 22 ஆகும். BMI, 25ம் அதற்கு அதிகமாகவும் இருந்தால் அது அதிக உடல் எடை என்றும், 30 க்கும் அதிகமானால், அதிக உடற் பருமன் [Obesity ] என்பதாகும். இது பொதுவான அளவாகும். சக்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் இருதய நோய் போன்றவைகள் இருப்பவர்களுக்கு, இது வேறுபடும்.
பி.கு: உங்கள் சரியான BMI அளவை கண்டுபிடிக்க , www.healthizen.com, சென்று பாருங்கள்.
குறைந்த கலோரி உணவு வகைகளை உட்கொள்ளும் போது, உடலில் அதிக எடை கூடுவதைக் கட்டுப் படுத்தலாம்.
மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான சோயாவில் குறைந்த கலோரி ரெசிபியைப் பார்க்கலாம்.
சோயா உருண்டைகள்: [soya Nuggets]
4 பேருக்குத் தேவையானவை.
ஒருவருக்கான கலோரி அளவு - 75.
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 80 கி.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காய விழுது - 2 டே.ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டே.ஸ்பூன்.
தக்காளி விழுது - 4 டே.ஸ்பூன்.
[ தக்காளியை வேகவைத்து, தோலுரித்து அரைத்துக் கொள்ளலாம்].
தண்ணீர் - 1/2 கப்.
தயிர் [ கொழுப்பில்லாத்து] - 1 டீஸ்பூன்.
மசாலாக்கள்:
சீரகம் - 1/2 டீஸ்பூன்.
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன்.
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத் தூள், தேவைக்கேற்ப. பச்சை கொத்தமல்லி அலங்கரிக்க.
செய் முறை:
சோயா உருண்டைகளை மிதமான வெண்ணீரில் 15 - 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதை பிழிந்து எடுத்து, 2, 3 முறை நன்கு கழுவவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மிளகு தூள் அனைத்தும் போட்டு, 1 1/2 நிமிடம் வதக்கவும்.
வெங்காய விழுது, தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, அனைத்தையும் சேர்த்து, 3 -4 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
சோயா உருண்டைகளை நன்கு பிழிந்தெடுத்து, அத்துடன், தயிர், 1/2 கப் தண்ணீர் அனைத்தும் மசாலாவுடன் கலந்து, 3 -4 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். தேவையானால், இன்னும் 2 - 3 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சாதம், ரொட்டி, பரோட்டா ஆகியவற்றிற்கு நல்ல மேட்ச்............
மீண்டும் ஒரு அருமையான பதிவு. சத்தான உணவு
ReplyDeleteநன்றிங்க எல்.கே.
ReplyDeleteஅருமையான குறிப்பு.
ReplyDeleteம்ம்ம்.....2 பிளேட் soya nuggets பார்சல்...........
ReplyDeleteபடம் அருமை. உண்ணும் ஆவலை தூண்டுகின்றன. இன்னைக்கே விண்ணப்பம் போட்டு வைக்கிறேன்.
கலக்கல்ஸ்:)
ReplyDeleteஆசியா வாங்க.......நன்றிங்க.
ReplyDeleteஆரூர் parcel delivered..........சுவைத்துவிட்டு கூறவும்.........ம்ம்ம்ம்ம்
ReplyDeleteநன்றிம்மா வித்யா, செய்து சாப்பிட்டுவிட்டு கூறவும்.
ReplyDeleteசோயா உருண்டைகள் நான் அடிக்கடி உபயோகிப்பதுண்டு. இந்தக் குறிப்புக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteதந்திருக்கும் தகவல்கள் நல்ல பகிர்வு.
நிததிலம் சிறந்த குறிப்பு!கலக்குங்க!
ReplyDeleteநன்றிங்க ராமலஷ்மி. நான் சில நேரங்களில் காலை உணவிற்கு, சோயாவும், பப்பாளி ஒரு துண்டும் கூட எடுத்துக் கொள்வேன்.
ReplyDeleteநன்றிங்க தேவன் மாயம் சார்.
ReplyDeleteபார்சல் சர்வீஸ் இல்லீங்களா?
ReplyDeleteநல்ல பயனுள்ள குறிப்பு!!
ReplyDeleteபதிவு சிறப்பா இருக்கு... சோயா பார்க்கவே நல்லாருக்கே...
ReplyDeleteவிஜிக்கு கண்டிப்பாக விருந்தே உண்டு, காரண்ம் என் தங்கையின் பெயரை நீங்களும் வைத்திருப்பதால்.......
ReplyDeleteநன்றிங்க அப்துல் காதர்.
ReplyDeleteநன்றிம்மா ப்ரியா. சாப்பிடவும் நன்றாக இருக்கும் ப்ரியா, முயற்சிக்கலாமே?
ReplyDeleteநன்றிங்க T.V.R. சார்.
ReplyDeletesuper rombha ubhayogamaana pagirvu niraya ezhudhunga
ReplyDeleteவாங்க, வாங்க காயத்ரி, ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteநித்திலம்..இதே முறைப்படி நானும் சமைப்பதுண்டு.பிடித்த கறியும்கூட.
ReplyDeleteஓ, அப்படியா. பரவாயில்லையே, ஒரே டேஸ்ட்.......நன்றிங்க ஹேமா.
ReplyDeleteபயனுள்ள் தகவலுக்கு நன்றி
ReplyDeleteவாங்க நிலாமதி, நன்றிங்க.
ReplyDelete