Posts

Showing posts from 2017

புத்தாண்டின் புதுவரவு!

Image
புத்தாண்டைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ள வரமாய் அமையும் என் அடுத்த நூல். வழக்கம்போல் பழனியப்பா பதிப்பகத்தாரின் பேராதரவுடன், ஐயா முத்துக்குமாரசாமி அவர்களின் ஆசிகளுடன், தமிழறிஞர் வி.ஐ.டி. கல்லூரியின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பர்களின் வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறது என் கிறுக்கல்கள்! 

எண்ணக்குவியல்களின் சிதறல்கள்  வண்ணக்கோலங்களாய் வான்முட்ட திண்ணக்குயில்களின் இசைப்பாட்டும் சிகரம்தொட்ட சிறுபொழுதுகள்!

தமிழ் இசைக் கல்வெட்டு

Image
கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!
ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர…

தட்டைப்பயறு பொங்கல்

Image
வெயிட் குறைக்க அருமையான சத்துணவு

அரிசி / குதிரைவாலி / சாமை / கம்பு / சோளம்  இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கப் எடுத்தால், கால் கப் தட்டைப்பயறு எடுத்துக்கொள்ளலாம். முதலில் அரிசி அல்லது மற்ற சிறுதானியங்களில் ஏதும் ஒன்றோ அல்லது கலந்தோ எடுத்து தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கலாம். தட்டைப் பயிறை நன்கு சிவக்க வறுத்து அதை குக்கரில் 4 /5 சத்தம் வரவிட்டு நன்கு வேக வைத்துக்கொள்ளவும். 
வெங்காயம், 2 பச்சை மிளகாய், 2 தக்காள், சுரைக்காய் விரும்பு அளவு எடுத்து அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.  மிளகு 1 தே.க., சீரகம் 1 தே.க. , பூண்டு 7/8 பல். நான் நாட்டு பூண்டு பயன்படுத்துவதால் 8/10 போடுவேன். சைனா பூண்டு என்றால் அளவை குறைத்துக்கொள்ளலாம். வரமிளகாய் 6, கருவேப்பிலை 1 கொத்து அனைத்தையும் மிக்சியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.
பின் ஒரு வானலியில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, பொடித்த பொடியும் போட்டு, வெங்காயம், தக்காளி, சுரைக்காய் அனைத்தும் போட்டு நன்கு வதக்கி வெந்த தட்டைப் பயிறில் கொட்டி, அதில் ஊறிய தானியத்தையோ, அரிசியையோ போட்டு, தேவையான அளவு உப்பு, மூ…

பல தானிய சத்துணவு இட்லி

Image
குதிரைவாலி - 1 கப் தினை - 1 கப் சாமை - 1 கப் பாசிப்பருப்பு - 1/2 கப் துவரம்பருப்பு - 1/4 கப் கடலை பருப்பு - 1/4 கப் கொள்ளு - 1/4 கப் கு.உளுந்து - 1/2 கப் இட்லி அரிசி - 1/4 கப் பச்சரிசி - 1/4 கப் வெந்தயம் - 1 டே. ஸ்பூன்


செய்முறை:
மேற்கண்ட அனைத்து தானியங்களையும் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து அத்துடன், இஞ்சி, பூண்டு, சோம்பு, வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். மசால் வாடை பிடிக்காதவர்கள் பெருங்காயம், சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். மாவு 5 அல்லது 6 மணி நேரம் புளிக்க வைத்து, அதில் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, முருங்கைக் கொழுந்து இலைகள், தாளித்து இட்லி வார்க்கலாம். சுவையான மெது மெது குஷ்பூ இட்லி தயார்!

கதை நேரம் 1

Image

அந்தாதி - தமிழின் இனிமை!

முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியும் அந்தாதி இலக்கியம் தோன்றியிருக்கலாம். தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும். குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:
(1) முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார் (2) இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் (3) மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார் (4) சடகோபர் அந்தாதி - கம்பர் (5) திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப் பெருமாளையங்கார் (6) கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் (7) திருவருணை அந்தாதி - எல்லப்ப நாவலர் (8) அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர் (9) திருக்குறள் அந்தாதி - இராசைக் கவிஞர்
11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள் (1) அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார் (2) சிவபெருமான் திருவந்தாதி - கபிலதேவ நாயனார், (3) சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார் (4) கயிலைபாதி காளத்தி  பாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார் (5) திருவேகம்பமுடையார் திருஅந்தாதி - பட்டினத்தடிகள் (6) திருத்தொண்டர் திருஅந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள் (7) ஆளுடை…

உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி  சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

Quotation

அன்றைய பொழுதை உன் அறுவடையைக் கணக்கில்வைத்து மதிப்பிடாதே நீ விதைக்கும் விதைகளைக்கொண்டே மதிப்பிடு!!
ராபர்ட் லூயிசு இசுடீவென்சன்


ஓரக்கண்ணால் பார்க்கும் கோடியைவிட நேராகக் காணும் வாரத்திற்கொரு பவுண்டு என்பதே மேல்.
பெர்னார்ட் ஷா

LIFE

உயிருள்ள மீனின் உணவு புழு. உயிரற்ற மீன் புழுவின் உணவு! #life
கலைஞனுக்குள் வாழும் மனிதம் மனிதனுக்குள் மனிதம் விதைக்கிறது! #life
ஒரு புன்னகை நட்பை இணைக்க அனுமதிக்கலாம்! ஒரு நட்பு புன்னகையைப் பறிக்க அனுமதிக்காதே!! #life
பறக்க மறந்த சிறகுகளை உயர்த்திப்பிடிக்கும் அக்கைகள் நட்பெனும் தேவதையினுடையது! #life
உள்வலி இரணங்கள் என ஏதும் உணராமல் கதாநாயக மேல்பூச்சில் மயங்கி முன்னுதாரணமாக்குவதால் வாழ்வே பாழ்! #life
வாய்ப்புகள் வரமாகலாம் - கதவு தட்டும் தேவதைகள் சுமந்து வருவது பியாண்டோ கனியாகவும் இருக்கலாம்! நம்பிக்கையோடு விழித்தெழுங்கள்!! #life
பி.கு. பியாண்டோ கனி - Beondo - 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கனியக்கூடிய ஒரு பீச் வகைக்கனி. ‘சாம்குக் யுசா’ எனும் சீன தொன்மக் கதையில் பேசப்படும் அதிசயக்கனி!

வேதனைகளை வாங்குவதற்கு கொடுக்கும் விலை: அல்லவைகளையே அனுதினமும் சுமப்பவரிடம் நல்லவைகளைத் தேடித்திரிவதும் நல்லவைகளை மட்டுமே கருதியிருப்போரிடம் அல்லவைகளைத் தேடிக்காண முயல்வதும்தான்! #life

சுயநலக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டதன்று அன்பான உறவுகளின் இனியபொழுதுகள்! #life
தன் நலம் பேணவும் அடுத்தவரை பாதிக்காத தன…

ஆன்மா அழிவதில்லை!

இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை. பிரபஞ்சத்திற்கு மீண்டும் வருகின்றது, என்ற ஆச்சரியமான தகவலை அமெரிக்க இயற்பியலாளர்கள் இருவர் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இதைத்தானே நம் இந்து மதமும், சித்தர்களும் தொன்றுதொட்டு சொல்லி வருகிறார்கள். மிகவும் தாமதமான கண்டுபிடிப்பு! மனித மூளை ஒரு "உயிரியல் கணினி" போலவே செயல்படுவது போல, மனித உணர்வு மூளையில் ஒரு குவியக்கொள்கை கணினி மூலம் இயங்கும் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். நுண்ணிய குழாய்களில் மூளை செல்களால் ஆன்மா பராமரிக்கப்படுகிறதாம்."மருத்துவ ரீதியாக இறந்தவர்கள்" என கருதப்படும்போது மூளையில் உள்ள நுண்ணுயிரிகள் தங்கள் குவாண்டம் நிலைமையை இழந்துவிடுகின்றன, ஆனாலும் பதிவான தகவல்கள் அழிவதில்லை. அவை அப்படியே பிரபஞ்சத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு சிதைகிறது. உயிர் போனவுடன் இதயம் அழுகிப்போகும், இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் என்று சொல்லலாம்; நோயாளி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், புத்துயிர் பெற்றால்,நுண்ணுயிரிகளில் இந்த குவாண்டம் தகவல் மீண்டும் செல்லும்போது ' மரணத்தை அருகில் பார்த்த அனுபவம் உண்டு' என்று கூறுவார். நோயாளி இறந்துவிட்…

சிட்டுவின் வலசை வரலாறு!

Image
உல்லாசமாய் உலகளந்திருந்த 
சிட்டுக்குருவி
வெள்ளோட்டமாய் மனுசனூரில் 
மதியிறக்கி
தள்ளாட்டமாய் தத்தளிக்கும் 
கூட்டத்தினூடே
பரவசமாய் கூர்ந்துநோக்கி 
வண்ணமயமான
வஞ்சகமெனும் புதிதாயொரு 
வரைவிலக்கணமும்
நெஞ்சகத்தை ஆட்கொள்ள 
அள்ளியெடுத்ததை
பத்திரமாய் பையகப்படுத்திப் 
பறந்தது
வகைவகையாய் பிறன்பொருள் 
களவாடலும்
காழ்ப்பும், கோபதாபமும், 
புறம்பேசுதலும்
தீயசொல்லும் விதண்டாவாதமும் 
விரசமும்
அனைத்தும் அள்ளிஅள்ளி 
பையகப்படுத்தி
சுமந்தசுமை மூச்சழுத்தி 
எழும்பவிடாமல்
விழிபிதுங்கி மூலையில் 
முடங்கச்செய்ய 
வாட்டமுற்று வாடிக்கிடந்ததை 
வழிப்போக்கன்
நாய்நண்பன் பரிவோடு 
நலம்விசாரிக்க
தன்வினை தானறியாது 
தலைகவிழ்ந்திருக்க
பைரவனும் ஏற்றிவைத்த 
துர்பாரங்களை
 ஒவ்வொன்றாய் சுமையிறக்கி 
சுகமளிக்க
கூனாய் குவிந்ததெலாம் 
சிதறியோட
குதித்தோடி குதூகலமாய்  
சிறகுவிரித்த
சிட்டுக்குருவி தவறியும் 
மனிதப்பதரின்புறம்
சிரம்சாய்க்காமல் வான்வழியே  
வலசைபோனது! 

நன்றி : வல்லமை - http://www.vallamai.com/?p=81248

நவகண்டம் - அரிகண்டம்

Image
நவகண்டம் - அரிகண்டம்
பவளசங்கரிநவகண்டம்என்பதன்பொருள்நவம் - ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒருவீரர்தம்உடலை 9 துண்டங்களாகத்தாமேவெட்டிக்கொண்டுஉயிர்துறப்பது. ‘அரிகண்டம்என்றால்ஒருவீரன்தம்மைத்தாமேவாளால்கழுத்தைஅறுத்துக்கொண்டுஉயிர்தியாகம்செய்வது. தலையைஒருகையால்பிடித்துக்கொண்டோ, தலையைஓரிடத்தில்இழுத்துக்கட்டியோமறுகையால்வாள்