Sunday, October 10, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 4.


ஆரோக்கியமான அழகு என்பது, மேல்பூச்சு இல்லாத இயற்கையான பளபளப்பான தோற்றம்தான்..ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவு மூலமாகதான் பாதுகாக்கப் படுகிறது, ஆகவே நாம் உண்ணும் உணவில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

உலகம் முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு சில காய் வகைகளில், கத்தரிக்காயும் ஒன்று. ஆங்கிலத்தில் மட்டும் இதற்கு ஆறு வித்தியாசமான
பெயர்கள் இருக்கிறது. இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய்க்கு மிக முக்கிய பங்குண்டு. கொழுப்புச் சத்து இல்லாத, குறைந்த கலோரி உணவு என்பதும் இதன் தனிச் சிறப்பு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை என்பது இந்த காய்க்குச் சுத்தமாக இல்லாததால், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களின் கனவு என்றே இதைக் கூறலாம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாகச் சமைத்தாலும் நம்ம ஊர் காரசாரமான சமையல் முன்னே, வேறு எதுவும்
நிற்க முடியாதுங்க.........பலவிதமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருக்கும் கத்தரிக்காய்,சுவையில்
மற்ற காய்கறிகளிலிருந்து தனிப்பட்ட ஒன்றாகும். 100 கி. கத்தரிக்காயின் ஊட்டச் சத்தின் அளவு:
கலோரிகள் - 24.K
நீர்க்கசிவு- 92.7 கி
புரோட்டீன் - 1.4 கி
சோடியம் - 3 மி.கி
கார்போஹைடிரேட் - 4 கி.
பொட்டாசியம் - 200 மி.கி.
கொழுப்பு - 0.3 கி
வைட்டமின் C - 12 மி.கி.
வைட்டமின் A - 124 LU

1. குஜராத்தி பகாரா பைங்கன்.
நம்ம ஊர் கத்தரிக்காய் காரக் குழம்புதான். கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

4 பேருக்குத் தேவையான அளவு:

நல்லெண்ணெய் -30 மி.லி
450 கி. கத்தரிக்காய், 4 துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
15 கி தனியா
5 கி. சிகப்பு மிளகாய்.
225 கி. வெங்காயம்.
115 கி. துறுவிய தேங்காய்.
5 கி.பூண்டு.
5 கி. எள்ளு.
115 கி புளி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
5. கி. பச்சை மிளகாய்.
1/2 டீ.பூன் - மஞ்சள் தூள்.
150 மி.லி. தண்ணீர்.
5 கி. வெல்லம்.
உப்பு தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு, கடுகு, கருவேப்பிலை.

கடாயில், எண்ணெய் விட்டு, கத்தரிக்காயை அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். மேல் தோல் லேசாக பொன்னிறமாக ஆக வேண்டும். தீயில் இருந்து வெளியே எடுத்து, தனியே வைக்கவும். அந்த எண்ணெயிலேயே, தனியா , சிகப்பு மிளகாய் மற்றும் வெங்காயம் இவற்றை வதக்கிக் கொள்ளவும். அதனை எடுத்து தேங்காய் மற்றும் பூண்டுடன் அரைத்துக் கொள்ளவும்.

எள்ளைத் தனியாக வேறு கடாயில் எண்ணெய் இல்லாமல், வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீரை அரைத்த மசாலுடன் சேர்க்கவும்.

மீதமிருக்கும் எண்ணெயில், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் போட்டு, அரைத்த மசாலுடன், எள்ளுப் பொடி, மற்றும் தண்ணீரும், தேவையான உப்பும் சேர்த்து மூடிவைத்து கொதிக்க விடவும். சிறிது கெட்டியானவுடன், வெல்லம் சேர்த்து, தகுந்த அளவு கெட்டியானவுடன், கீழே இறக்கி வைத்து விடவும்.

தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகும் கருவேப்பிலையும் தாளித்து குழம்பில் ஊற்றவும்.


2. ஒரு எளிமையான, கத்தரிக்காய் கொத்சு:

கத்தரிக்காயை அப்படியே முழுதாக மைக்ரோவேவ் அடுப்பிலோ அல்லது ஆவியிலோ வேகவைத்து, தோலை நீக்கிவிட்டு, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். அதில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கருவேப்பிலையும் போட்டு நன்கு வதக்கி, அத்துடன், கத்தரிக்காயும், சிறிது புளித்தண்ணீரும் சேர்த்து லேசாகக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை போடவும்.

மேற்கண்ட முறையிலேயே கத்தரிக்காயை வேகவைத்து, பிசைந்துக் கொண்டு, அத்துடன், தக்காளி பொடியாக நறுக்கிப் போட்டு சிறிது வெங்காயமும், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் தேவையான உப்பும் சேர்த்து கலக்கவும். ரொட்டி அல்லது சப்பாத்திக்கு நல்ல மேட்ச்.

26 comments:

 1. நன்றாக உள்ளது .. தொடர்ந்து சத்தான உணவு வகைகளை பற்றி எழுதுங்கள்

  ReplyDelete
 2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்- ஒவ்வொரு பகுதியும் ரசிக்கும் படியும், உடனே உண்ண வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாய் ஊற வைக்கும் கத்தரிக்காய் காரக் குழம்பு படம். கவர்ச்சியான வயலட் கத்தரிக்காய் படங்கள்...

  ReplyDelete
 4. கண்டிப்பாக எழுதுகிறேன் எல்.கே. நன்றிங்க.

  ReplyDelete
 5. ஸ்ரீராம் முயற்சி செய்து பாருங்கள், சுவையும் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 6. முயற்சிக்கிறேன்..காலையில் வாயூரச் செய்திட்டீங்க..

  ReplyDelete
 7. லிஸ்ட்ல சேர்த்துக்கிறேன்.

  ReplyDelete
 8. கத்திரிக்காயில் இத்தனை பயனா? தகவல்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 9. சித்ரா இன்னும் ரொம்ப பிசியாவே இருப்பது போல தெரிகிறது.......நன்றிங்க.

  ReplyDelete
 10. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு மேடம்.. ஆனா எனக்குத்தான் கத்தரிக்காய் ஒத்துக்க மாட்டேங்குது. அரிப்பு அலர்ஜி...

  ReplyDelete
 12. my mom cooks this dish often. good one. thanks for sharing to everyone.

  ReplyDelete
 13. நன்றிங்க பாலாசி. அடடா,அலர்ஜின்னா கொஞ்சம் சிரமம் தான். அதை விட்டா வேற காயா இல்லை நமக்கு, கவலையை விடுங்க. அடுத்தது சூப்பரா உங்களுக்கு ஒத்துக்கற ரெசிபியா போட்டுடலாம்......

  ReplyDelete
 14. நன்றிங்க தமிழமிழ்தம். your mom is also a good cook like me.....thats really great...

  ReplyDelete
 15. நல்ல குறிப்புகள். நன்றி.

  ReplyDelete
 16. கத்தரிக்காய் பற்றிய தகவல்களும் சமையல் குறிப்புகளும் அருமை!
  கத்தரிக்காய்களின் புகைப்படம் மிக அழகு!!

  ReplyDelete

அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...