Wednesday, October 13, 2010

நவீன தேசிய கீதம்............?

" வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்" என்று சொல்வார்கள். சும்மா சிரிப்பதற்காக மட்டுமே இந்தப் பாடல். நேற்று என் தோழிஅவர் வீட்டு கொலுவிற்குஎன்னை அழைத்திருந்தார். அந்த கொலு விழாவில் ஒரு குழந்தை இந்தப் பாடலை காமெடிக்காகப் பாடியது..........மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். இதை நம் தேசிய கீதப் பாடல் ராகத்தோடேயே பாடிப்பாருங்கள்.

ஜனங்களின் மனங்களில் பசிபிணி பஞ்சம்
பாருங்கள் இதுதான் இந்தியா

பஞ்சாப் பறக்குது பாரும் புரோட்டா
தாளிக்கத் தக்காளி குறுமா
வெந்தயக் குழம்பாம் வெங்காய வடையாம்
ஊத்தப்பம் இருந்தால் சரிதான்
இட்லி சட்னி மீது ஆசை
தோசைவடை மசால்வடை ஜாங்கிரி
ஜாங்கிரி இருந்தால் சரிதான்

ஜனங்களின் மனங்களின் பசிபிணி பஞ்சம்
பாருங்கள் இதுதான் இந்தியா

இட்லி சட்னி சாம்பார்
சுடசுடச் சுடக் காபி......

எப்புடீ....................?

16 comments:

  1. நவீன தேசிய கீதத்துல பஞ்சமும் ஜாங்கிரியும் சேர்ந்தே வருதே.... ....... ம்ம்ம்ம்.......

    ReplyDelete
  2. நன்றி,சித்ரா. அதுசரி இப்ப உங்களுக்கு என்ன டைம்? லேட் நைட் இல்லையா?

    ReplyDelete
  3. பசியின் ​கொடு​மையில் இருப்பவன் வ​​கை வ​கையான உண​வை நி​னைத்துப் பாடுவானா என்ன?

    என்ன ​கொடு​மை சார் இது.......

    ReplyDelete
  4. சும்மா..........நன்றிங்க அழகி.....வாங்க.....வணக்கம்.

    ReplyDelete
  5. சிரிப்பதா சிந்திப்பதா?

    ReplyDelete
  6. haha nalla irukku...pasangalavadhu nimmathiya irukattum

    ReplyDelete
  7. அந்த குழந்தைக்கு அது எந்த பாடல் என்று புரிய வைத்து இருக்கலாம்

    ReplyDelete
  8. நன்றிம்மா காயத்ரி.

    ReplyDelete
  9. சௌந்தர், அந்தக் குழந்தைக்குப் புரிய வைத்துவிட்டுத்தான் வந்தேன். ஆனால் இளங்கன்றல்லவா?

    ReplyDelete
  10. இப்பத்திய குழந்தைகள் செம வாலுங்க :-)))

    அந்தக்கடைசி வரியில் சுடச்சுடச்சுட சுக்காப்பி என்று முடியும். சரிதானா :-)))))

    ReplyDelete
  11. ஓ அப்படிங்களா அது, அமைதிச்சாரல்......

    ReplyDelete
  12. இது 80களில் ஒரு வார இதழில் வெளியாகியது... அந்த வார இதழ் பெயர் எனக்கு மறந்து விட்டது, (அப்போது வீட்டில் நிறைய வார இதழ் வாங்குவோம்) தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...