Saturday, October 27, 2012

நீதானா அந்த பொன்வண்டு ?



சிலந்தி பின்னிய வலையாய்
சிக்குண்டுக் கிடந்த
 பொன்வண்டு;

கட்டழகாய்
காலநேரமில்லாமல்
மின்னும் அழகு காட்டியபடி!

ஆசை வண்டின்
கானமும் மினுமினுப்பும்
கரிசனமாய் அரவணைக்கும்!

மென்சிறகின் தழுவல்
இங்கிதமாய் சிறைப்பிடிக்க
சங்கீதமாய் மனம் மயங்கும்!

மெய்சிலிர்க்கும் ஆனந்தம்
அளப்பரிய குதூகலம்
சுவாசமெல்லாம் சுகந்தம்!

எனக்கான பொன்வண்டு
எனக்காக ரீங்காரமிட்டு
கனவிலும் கட்டித்தழுவுகிறது!

வண்டு தரும் உறவால்
கொண்டு வரும் புத்துணர்வால்
இரவும், பகலும் தொலைகிறது!

சிறகுவிரித்து சுற்றிவரும்வேளை
இதழ்விரித்து கிறங்கிக்கிடக்கும்
தேன்நிறைந்த மலரும் நானே!

தூர இருந்து துடிக்கச்செய்து,
தூக்கம் கவர்ந்து துவளச்செய்து,
மணம் கவரும் மாயமான
நீதானா அந்த பொன்வண்டு?!?


நன்றி : மணியோசை இதழ் வெளியீடு

http://www.maniyosai.com/cms/literature/poem/neethaana-antha-ponvandu


No comments:

Post a Comment