பவள சங்கரி
குழந்தைகளை ஆட்டிப்படைக்கும், ‘ஆட்டிசம்’ என்ற கொடிய நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நானும் ஏற்கனவே இதுபற்றி இங்கேயும் விவாதித்திருக்கிறேன். இன்றும் சொல்லுமளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அதிகமான பாதிப்பே உள்ளது. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் குறித்த விரிவான என் கட்டுரை இதோ இங்கே ..http://coralsri.blogspot.com/2012/08/blog-post_27.html
இங்கு அமெரிக்காவில் அதிகமான ஆட்டிசம் குழந்தைகளைக் காண முடிகிறது. இளம் வயதில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம் என்பதால் அப்படி ஒரு விசயமே இங்கு இல்லை. அதனால், இளம் வயதிலேயே வழி தவறிய பெண்கள் குழந்தையைப் பெற்று அனாதை ஆசிரமங்களில் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்களாம்.
இங்கு குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டிற்குரியது. குழந்தைகளுக்கான அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி என பெருமளவில் செலவிட்டு அமைக்கிறார்கள். குறிப்பாக எல்லா இடங்களிலும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தனிப்பட்ட முறையில் பல விளையாட்டுகளும், அரங்குகளும் அமைக்கிறார்கள். அவர்களுக்காக விசேசமான பள்ளிப் பேருந்துகளும் கூட இருக்கிறது. நம் அரசாங்கமும் ஓரளவிற்காக இது போன்று ஆட்டிசம் குழந்தைகளுக்காக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.
கனடா நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் நம் தமிழ்நாட்டு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், கனடா நாட்டில் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும், முழுமையாக இலவச மருத்துவ உதவி அரசாங்கம் மூலம் பெறலாம் என்றார். ஆனால் அமெரிக்காவில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் இறுதியில் சொந்த வீட்டைக்கூட விற்றுத்தான் மருத்துவச் செலவு செய்ய முடியும். அந்த அளவிற்கு மிக அதிகமாக செலவு ஆகிறது. இன்சூரன்சு இருந்தால் ஓரளவிற்கு சமாளிக்கலாம். இல்லையென்றால் அதோ கதிதான்
No comments:
Post a Comment