Thursday, November 22, 2012

SAND AND FOAM (Khalil Gibran) - மணலும், நுரையும்! (4)






பவள சங்கரி


செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு.
நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு.
நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ?
நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான உம் சுயம் நோக்கியும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறீர் நீவிர்.


பார்வையினாலேயே பருகிக் கொண்டிருக்குமொருவரும்  அந்த மதுவின் காரணமாகவே தமக்கிந்த மயக்க நிலை (போதை) என்றே கருதுவார்.

உம்மை போதைக்குள்ளாக்குகிற மதுவைப் பருகுகிறீர் நீவிர்; அந்த மற்றுமொரு மது மயக்கத்திலிருந்து எம்மைத் தெளிவாக்கும் பொருட்டு யாம் அதைப் பருகுகிறோம்.

எம் கோப்பை காலியாகும்போது, எம்மையே அதன் வெறுமையிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறேன் யான்.

அடுத்தொரு நிதத்துருவின் (மனிதரின்) நிதார்த்தம் (உண்மை) என்பது அவர் உம்மிடம் பகிரும் உண்மையில் இல்லை, ஆயினும் எதை அவரால் உம்மிடம் பகிர இயலவில்லையோ அதிலேயே உள்ளது.
அதாவது, அவரை நீவிர் உணர்ந்து கொள்வீராயின், அவர் உரைப்பதைக் கவனிப்பதைக் காட்டிலும் அவர் உரைக்காத அந்த ஒன்றின் மீது  கவனம் கொள்வீராக..

யான் உரைப்பதில் பாதி அர்த்தமற்றதாக இருக்கிறது; ஆயினும் அந்த மற்றொரு பகுதி உம்மைச் சேர வேண்டும் என்பதற்காகவே யாம் உமக்கதை உரைக்கிறோம்.

நகைச்சுவை உணர்வென்பது, சரிவிகித உணர்வு.

மக்கள் எம் உரையாடலின் தவறுகளைப் பாராட்டிய அத்தருணமும் மற்றும் எம் அமைதியான நல்லொழுக்கங்களைக் குறை கூறிய அத்தருணம்திலுமே எம் தனிமை பிறந்தது.
வாழ்க்கை, தம்முடைய இதயத்தைப் பாடுமோர் பாடகனைக் கண்டெடுக்க இயலாதபோது அவள் தம் மனதிடம் பேசுமோர் தத்துவ ஞானியை உருவாக்குகிறாளவள்.

ஓர் வாய்மை எக்கணமும் அறிந்திருக்க வேண்டியதாயினும், சில நேரங்களில் மட்டுமே உச்சரிக்க வேண்டியது.
ந்ம்முள் உரைந்திருக்கும் அந்த உண்மை அமைதியாக இருக்கிறது; முயன்று பெற்ற அந்தொன்றுதான் வாயாடியாகவும் உள்ளது.

எம்முள் இருக்கும் வாழ்வின் குரல் உம்முள் இருக்கும் வாழ்வின் செவிகளுக்கு எட்டாது; ஆயினும் நாம் தனிமையை உணராமல் இருப்பதற்காகப் பேசுவோமே.

புனையிழைகள் (மகளிர்) இருவர் உரையாடும்போது அவர்கள் ஏதும் கூறமாட்டார்கள்; ஒரு பெண் மட்டுமே உரையாடினால் வாழ்க்கை முழுவதையும் வெளிப்படுத்திவிடுவாள் அவள்.

தவளைகள் எருதை விடவும் பலமாக முக்காரமிடலாம், ஆயினும் அவைகளால் வயலில் ஏர் உழவோ அன்றி மதுச் செக்கின் சக்கரத்தை சுழற்றவோ இயலாது. மற்றும் அதனுடைய தோல்களால் நீவிர் பாதணிகளைத் தயாரிக்கவும் இயலாது.

நுலையிலி (ஊமை) மட்டுமே வாயாடியைக் கண்டு அவ்வியம் (பொறாமை) கொள்வான்.

எம் இதயத்தினுள் வசந்தம் உள்ளதுஎன்று குளிர்காலம் கூறுமானால்  அந்தக் குளிரை நம்புவோர் எவர்?

ஒவ்வொரு விதையும் ஏதோ ஒரு ஏக்கத்துடன்தான் உள்ளது.

உண்மையிலேயே நீவிர் உம் கண்களைத் திறந்து நோக்குங்கால், அங்கு அனைத்து படிமங்களினுள்ளும் உம் படிமத்தையேக் காணக்கூடும்.
மேலும் நீவிர் உம் செவிகளைத் தீட்டிக்கொண்டு கவனிப்பீராயின், அனைத்துக் குரல்களினுள்ளும் உம் சொந்தக் குரலையே நீவிர் கேட்கக்கூடும்.
ஓர் சத்தியத்தைக கண்டறிய, நம்மில்  ஒருவர் அதனை வெளியிடவும் மற்றுமொருவர் அதனை விளங்கிக்கொள்ளவும் என இருவர் தேவைப்படுகிறது.
அந்த வார்த்தைகளின் அலைகள் என்றென்றும் நம்மீது இருப்பினும்; நம் ஆழ்மனது நித்திய அமைதியில்தான் இருக்கிறது.

கோட்பாடுகளில் பல, சாளரக் கண்ணாடி போன்றே உள்ளது. அதன் மூலம் உண்மையைக் காண முடிந்தாலும் சத்தியத்திலிருந்து நம்மை அது பிரித்துவிடுகிறது.

இப்போது நாம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம். எம் இதயத்தினுள் நீர் ஒளிந்து கொள்வீரேயானால் உம்மைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இராது. ஆனால் உம் சொந்தக் கூட்டின் பின்புறம் நீர் ஒளிந்து கொள்வீராயின், பின் எவரும் உம்மைத் தேடுவது பயனற்றதாகிவிடக்கூடும்.

தொடரும்


Give me an ear and I will give you a voice.

Our mind is a sponge; our heart is a stream.
Is it not strange that most of us choose sucking rather than running?

When you long for blessings that you may not name, and when you grieve knowing not the cause, then indeed you are growing with all things that grow, and rising toward your greater self.

When one is drunk with a vision, he deems his faint expression of it the very wine.

You drink wine that you may be intoxicated; and I drink that it may sober me from that other wine.

When my cup is empty I resign myself to its emptiness; but when it is half full I resent its half-fulness.

The reality of the other person is not in what he reveals to you, but in what he cannot reveal to you.
Therefore, if you would understand him, listen not to what he says but rather to what he does not say.

Half of what I say is meaningless; but I say it so that the other half may reach you.

A sense of humour is a sense of proportion.

My loneliness was born when men praised my talkative faults and blamed my silent virtues.

When Life does not find a singer to sing her heart she produces a philosopher to speak her mind.

A truth is to be known always, to be uttered sometimes.

The real in us is silent; the acquired is talkative.

The voice of life in me cannot reach the ear of life in you; but let us talk that we may not feel lonely.

When two women talk they say nothing; when one woman speaks she reveals all of life.

Frogs may bellow louder than bulls, but they cannot drag the plough in the field not turn the wheel of the winepress, and of their skins you cannot make shoes.

Only the dumb envy the talkative.

If winter should say, "Spring is in my heart," who would believe winter?

Every seed is a longing.

Should you really open your eyes and see, you would behold your image in all images.
And should you open your ears and listen, you would hear your own voice in all voices.

It takes two of us to discover truth: one to utter it and one to understand it.

Though the wave of words is forever upon us, yet our depth is forever silent.

Many a doctrine is like a window pane. We see truth through it but it divides us from truth.

Now let us play hide and seek. Should you hide in my heart it would not be difficult to find you. But should you hide behind your own shell, then it would be useless for anyone to seek you.

To be cond..

நன்றி :  திண்ணை

No comments:

Post a Comment