Wednesday, October 31, 2012

மணலும், நுரையும் - கலீல் ஜிப்ரான்SAND AND FOAM - KHALIL GIBRAN (1926)


    "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you."மணலும், நுரையும்


அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே,
நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான்
உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும்,
மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும்.
ஆயினும் அந்தக் கடலும், கரையும் என்றும் நிரந்தரமாய் இருக்கும்.


ஒருகால் யான் எம் கரத்தை மூடுபனியால் நிறைத்திருந்தேன்.
பின்னர் திறந்து பார்த்தேனதை, அந்தப் பனிக்கட்டி ஒரு புழுவானது.
மீண்டும் எம் கரத்தை மூடித் திறந்தேன் யான், மேலும் இதோ அங்கோர் புள்ளிருந்தது.
மீண்டும் யான் எம் கரத்தை மூடிவிட்டு, பின்பு அதைத் திறந்தபோது அதன் துளையினுள் நின்றிருந்தான் மேல்நோக்கிய மானிடனொருவன் தம் சோகமான முகத்துடன்.
மேலும், யான் எம் கரத்தை மூடி மீண்டுமதைத் திறந்தபோது, அங்கு ஏதுமின்றி, மூடுபனி மட்டுமே இருந்தது.
ஆயினும் யான் அற்புதமானதோர் சுவைநயமிக்க ஓர் கீதமதைக் கேட்டேன்.

ஆயினும், நேற்றும்கூட வாழ்க்கைக் கோளத்தில் சந்தமில்லாமல் சுழலுமொரு உடைந்த சில்  என்றே எம்மை யான் எண்ணியிருந்தேன்.
தற்போது, வாழ்வு முழுமையும் ஓசை நயமுள்ள அந்த உடைந்த சில்லுகள்  எம்முள் சுழன்றுத் திரியும் அந்தக் கோளமும் நானேதான் என்பதை அறிகிறேன்,

அவர்கள் தமது விழித்தலில் எம்மிடம், “நீவிரும் மற்றும் நீர் வாழுமந்த புவியும் எல்லையற்ற சாகரத்தினுடைய, எல்லையற்ற கரையின் மீதான ஓர் சிறு மணற்துணுக்கு.” என்றார்கள்.
மேலும் யான் எம் கனவில் அவர்களிடம், “யானே எல்லையற்ற சாகரம், மற்றும் அனைத்துலகும் எம் கரையின் மீதான மணற்துகள்கள்” என்றேன்.

எம்மையொருவன், “யார் நீ?” என்று வினவிய அத்தருணத்தின் ஒரு முறை மட்டுமே யான் முடக்கப்பட்டேன்.
இறைவனின் அந்த முதல் எண்ணம் ஒரு தேவதையாக இருந்தது. இறைவனின் முதற்சொல்லோ ஒரு மானிடனாகவே இருந்தது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வனத்தினுள்ள் அருணவமும், (கடல்) மற்றுமந்த வளியும் (காற்று) வழங்கிய வார்த்தைகளுடன் ஏங்கி, அலைந்து திரிந்து, படபடப்பாய் சிறகடித்துக் கொண்டிருந்த உயிரினங்களாய் இருந்தோம் நாம்.
 நேற்றைய நம்முடைய ஒலிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, நம்முள் இருக்கும் அந்த பண்டைய நாட்களை தற்போது எங்கனம் வெளிக்கொணர இயலும் நம்மால்?

அந்தப் புதிரான உருவம் ( sphinx என்கிற எகிப்திய பெண் தலையும், சிங்க உடலும் கொண்ட உருவம்) ஒரே ஒருமுறையே பேசியது. மேலும் அந்த அதிசய உருவம், ”மணலின் ஓர் துணுக்கு ஒரு பாலைவனம்,  மற்றும்  பாலைவனம் என்பது மணலின் ஓர் துணுக்கே; மேலும் மீண்டும் நாமனைவரும் இப்போது மௌனமாகலாம்” என்றது.
அந்தப் புதிரான உருவத்தின் பேச்சைக் கேட்க முடிந்த நான் அதை விளங்கிக் கொள்ளவில்லை..

ஒருமுறை மங்கையொருத்தியின் முகத்தைக் கண்டேன் யான், மேலும் இதுவரை பிறக்காத அவளுடைய அனைத்து குழந்தைச் செல்வங்களையும் கண்டேன். மேலும் ஓர் மங்கை எம் முகத்தை அண்ணாந்து நோக்கியவள், மற்றும் அவள் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன எம் அனைத்து முன்னோர்களையும் அறிந்திருந்தாள்.

தற்போது யான் தன்னிறைவு அடைவேனோ. ஆயினும் அறிவார்ந்த வாழ்க்கையை வாழும் ஓர் கிரகமாக யானே ஆனாலேயொழிய, எங்கனம் சாத்தியம் அது?
ஒவ்வொரு மானுடனின் குறிக்கோளே இதுதான் இல்லையா?

ஒரு முத்து என்பது, ஒரு மணற்துகளைச் சுற்றி வேதனையுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆலயம்.
எந்த ஏக்கம் நம் உடலைக் கட்டமைத்தது மற்றும் எந்தத் துணுக்குகளைச் சுற்றிக்கட்டமைக்கப்பட்டது?

இறைவன் எம்மீது வீசிய ஓர் கூழாங்கல், அதிஅற்புதமான இந்த ஏரியினதன் அமைதியான மேற்பரப்பை எண்ணற்ற வட்டங்களால் சிரமத்திற்குள்ளாக்கினேன்.
ஆயினும் அந்த ஆழங்களை எட்டியபோதோ அசைவற்றுப் போனேன் யான்.

எமக்கு அமைதியைக் கொடுத்தால் அந்த இரவை ஆற்றலோடு எதிர்த்து நிற்பேன் யான்.

எம் ஆன்மாவும், சரீரமும் ஒன்றையொன்று காதலித்து மணமுடித்தபோது எமக்குக் கிடைத்தது இரண்டாம் பிறவி.

ஒரு காலத்தில், நுண்மையாகக் கேட்கும் திறமிருந்தும், நுலையிலியான (ஊமை) ஒருவனை அறிந்திருந்தேன் யான். அவன் தன்னுடைய நாவை ஒரு போரில் இழந்திருந்தான்.
ஆழ்ந்த அமைதி வருவதற்கு முன்பாக எந்தப் போரில் அவன் சண்டையிட்டானோ அதை அறிவேன் யான் இப்போது. அவனுடைய இறப்பு எமக்கு மகிழ்ச்சியே..
இவ்வுலகம் நம் இருவருக்கும் போதுமான அளவிற்கு அத்துனை பெரிதானதாக இல்லை.

தொடரும்


Sand and Foam by Kahlil GibranI AM FOREVER walking upon these shores,
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever.

Once I filled my hand with mist.
Then I opened it and lo, the mist was a worm.
And I closed and opened my hand again, and behold there was a bird.
And again I closed and opened my hand, and in its hollow stood a man with a sad face, turned upward.
And again I closed my hand, and when I opened it there was naught but mist.
But I heard a song of exceeding sweetness.

It was but yesterday I thought myself a fragment quivering without rhythm in the sphere of life.
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within me.

They say to me in their awakening, "You and the world you live in are but a grain of sand upon the infinite shore of an infinite sea."
And in my dream I say to them, "I am the infinite sea, and all worlds are but grains of sand upon my shore."

Only once have I been made mute. It was when a man asked me, "Who are you?"

The first thought of God was an angel.
The first word of God was a man.

We were fluttering, wandering, longing creatures a thousand thousand years before the sea and the wind in the forest gave us words.
Now how can we express the ancient of days in us with only the sounds of our yesterdays?

The Sphinx spoke only once, and the Sphinx said, "A grain of sand is a desert, and a desert is a grain of sand; and now let us all be silent again."
I heard the Sphinx, but I did not understand.

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment