எம் ஆழ்மனப் புதையல்!
பவள சங்கரி
புள்ளொன்று விண்ணேகியது எம் ஆழ்மனதிலிருந்து.
உயர உயரப் பறப்பினுமது பரந்து,பரந்து வளர்ந்தது.
முதன்முதலில் தூக்கணாங்குருவி போன்றிருந்த அது
பின் ஓர் வானம்பாடியாகவும், அதன்பின்னோர்
கழுகாகவும், வசந்த மேகமுமாக ஆனதோடு
விண்மீன்களின் சுவர்கத்தையும் நிறைத்தது.
விண்ணோக்கிப் பறந்ததோர் பறவை
எம் இதயக்கூட்டிலிருந்து.
பறக்கும் தருணமதில் பெரிதாக மழித்தெடுப்பினும்
விலகவில்லையது, எம் இதயத்திலிருந்து.
ஓ எம் விசுவாசமே, எம் மூர்க்க ஞானமே,
உம் உயரத்தை அடைந்து
உம்மோடு இணைந்து நிதத்துருவின் மீப்பெரும்
சுயவானமதின் மீது தள்ளிப் போடக்கூடுவது யாங்ஙனம்?
எம்முள் இருக்கும் இச்சாகரத்தை உறைபனியாக மாற்றக்கூடுவது
யாங்ஙனம்?
கணிக்கவொண்ணா அவ்விண்வெளியில் உம்மோடு சேர்ந்து செல்லல்
சாத்தியமாவது யாங்ஙனம்?
ஆலயத்தினுள்ளிருக்குமோர் சிறைக்கைதி அத்தங்கக் கவிகை மாடங்களைக்
கண்ணுற இயலுதல் யாங்ஙனம்?
ஓர் கனியின் அவ்விதயம் அக்கனிக்கும் உறையிடுமளவு விரிவது
சாத்தியமாவது யாங்ஙனம்?
ஓ எம் விசுவாசமே, இக்கம்பிகளின் பின்புறம் வெள்ளியாலும்,
கருங்காலி மரத்தினாலுமான
சங்கிலிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் உம்மோடு பறக்க இயலாது
எம்மால்.
ஆயினும் எம் இதயத்திலிருந்து
விண்ணோக்கி எழும்புகிறீர் நீவிர்,
மேலும் உம்மைத் தாங்கிப்பிடிப்பது எம் இதயமென்பதால் மனநிறைவடையக்கூடும்
யாம்.
- --oOo-- -
Out of my Deeper Heart - Khalil Gibran
Out of my deeper heart a bird
rose and flew skywards.
Higher and higher did it rise,
yet larger and larger did it grow.
At first it was but like a
swallow, then a lark, then an eagle, then as vast as a spring cloud, and then
it filled the starry heavens.
Out of my heart a bird flew
skywards. And it waxed larger as it flew. Yet it left not my heart.
O my faith, my untamed knowledge,
how shall I fly to your height and see with you man's larger self pencilled
upon the sky?
How shall I turn this sea within
me into mist, and move with you in space immeasurable?
How can a prisoner within the
temple behold its golden domes?
How shall the heart of a fruit be
stretched to envelop the fruit also?
O my faith, I am in chains behind
these bars of silver and ebony, and I cannot fly with you.
Yet out of my heart you rise
skyward, and it is my heart that holds you, and I shall be content.
- --oOo--
நன்றி: திண்ணை
No comments:
Post a Comment