பவள சங்கரி
இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர்.
ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன்.
தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது; கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே.
அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும்.
மேகத்தின் மீது அமரும் வாய்ப்பு அமைந்தால், ஒரு நாட்டிற்கும், மற்றொரு நாட்டிற்கும் உள்ள எல்லைக்கோட்டையோ அன்றி வயலுக்கும், மற்றுமொரு வயலுக்குமிடையேயுள்ள எல்லைக் கல்லையோ காண இயலாது உம்மால். ஓர் மேகத்தின் மீது அமர முடியாது உம்மால் என்பதும் பரிதாபம்.
ஏழு நூற்றாண்டுகளுக்கும் முன்னர் ஆழமானதோர் பள்ளத்தாக்கிலிருந்து வெண்பனி மலை உச்சிக்குப் பறந்து கொண்டிருந்தது ஏழு வெண் புறாக்கள். அந்தப் பறத்தலைக் கண்ட ஏழு மனிதர்களில் ஒருவன், “அந்த ஏழாவது புறாவின் சிறகிலோர் கரும் புள்ளியைக் காண்கிறேன் யான” என்றான்.
இன்று அந்தப் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள் பனி மலையின் உச்சிக்குப் பறந்த அந்த ஏழு கரும் புறாக்களைப் பற்றிப் பேசுகின்றனர்.
இலையுதிர் காலத்தில் எம் அனைத்து சோகங்களையும் சேகரித்து எம் தோட்டத்திற்குள் புதைத்து வைத்தேன் யான். மேலும், ஏபரல் மாதத்துடன் இனிய வசந்தமும் பூமியை மணமுடிக்க திரும்பி வந்தபோழ்து, எம் தோட்டத்தில் மற்ற மலர்களைப் போன்றதல்லாத கவின்மிகு மலர்களாய் பூத்துக் குலுங்கியது அவைகள்.,
மேலும் அம்மலர்களைக் காண வந்த அண்டை அயலார் அனைவரும் எம்மிடம், “விதைக்கும் காலத்தில் மீண்டும் வருமிந்த இலையுதிர் காலத்தில் யாமும் எம் தோட்டத்தில் பயிரிடும் வகையில் இம்மலர்களின் விதைகளை எமக்கும் அளிக்க மாட்டீரா?” என்றனர்.
உண்மையிலேயே மனிதர்களிடத்தே ஓர் வெற்றுக் கரத்தை விரித்து ஏதும் பெறாமல் போவது துயரம்; ஆயினும் நிறைவானதோர் கரத்தை யான் விரித்தும் அதைப் பெறும் எவரையும் காணாது போவதென்பது அதைவிட நம்பிக்கையற்றதோர் நிலையே.
எழுதப்படாத எம் கவிதைகளையும் வரையப்படாத எம் ஓவியங்களையும் சந்திக்க இயலும் என்பதால் நித்தியத்திற்காக ஏங்குகிறேன் யான்.
கலை என்பது இயற்கையிலிருந்து முடிவிலியை நோக்கிச் செல்லுமோர் படி.
கலை வேலைப்பாடு என்பது, உருவமாகச் செதுக்கப்பட்டதோர் உறைபனி
வேலையற்றுக்கிடக்கும் கரங்களைக் காட்டிலும் முட்கிரீடம் தயாரிக்கும் கரங்கள்கூட சிறந்ததுதான்..
மிகப் புனிதமானதான நம் கண்ணீர் ஒருபோழ்தும் நம் கண்களை நாடாது.
ஒவ்வொரு நிதத்துருவும் (மனிதனும்), இதுவரை வாழ்ந்திருந்த ஏதோவொரு அரசன் மற்றும் செடகனின் (அடிமை) சந்ததியாகத்தான் இருப்பான்.
ஒரு வேளை கிறித்துவின் கொள்ளுத் தாத்தாவே அவருக்குள் தாம் புதைந்திருப்பதை அறிந்திருந்தால் பயபக்தியில் உறைந்து நின்றிருக்க மாட்டாரோ?
இயேசு கிறித்துவின் அன்னை மேரி தம் மகன் மீது கொண்ட அன்பைக்காட்டிலும் யூதனின் அன்னை கொண்ட அன்பு குறைந்ததா என்ன?
இதுவரை புனித நூலில் பதிவிடப்படாத நம் சகோதரர் கிறித்துவின் மூன்று அற்புதங்கள் உள்ளன;
முதலாவது, உம்மைப் போன்றும் எம்மைப் போன்றும் அவரும் ஒரு மனிதனாகத்தான் இருந்தார்; இரண்டாவது, அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார்; மற்றும் மூன்றாவதாக தாமொரு வெற்றியின் மூலமான வெற்றிவீரன்தான் என்பதைத் தாமே அறிந்தவர் என்பது.
சிலுவையில் அறையப்பட்ட ஒன்று, எமது இருதயத்தின் மீது சித்திரவதை செய்தீர் நீவிர்; மற்றும் உமது கரங்களைத் துளைக்கும், அந்த ஆணிகளே எமது இருதயச் சுவரையும் துளைக்கின்றன..
மேலும் மறுநாள் இந்த இடுகாட்டின் புறமோர் புதியவன் கடந்து செல்லும்போது இருவர் இங்கு இரத்தம் சொறிந்ததை அறியமாட்டான்.
அதனை ஒருவரின் குருதி எனவே எண்ணியிருப்பான் அவன்.
ஆசிர்வதிக்கப்பட்ட குன்றினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும் நீவிர்.
இப்புவியின் தலைசிறந்த குன்றுதான் அது.
அம்மலை முகட்டை அடையுங்கால், நீவிரும் கீழிறங்கி, ஆழ்ந்த பள்ளத்தாக்கில் வசிக்கின்றவருடன் வாழுமோர் விருப்பு மட்டுமே கொண்டிருப்பீர்.
அதன் காரணமாகவே அது ஆசிர்வதிக்கப்பட்ட மலை என்று அழைக்கப்படுகிறது.
வெளிப்பாட்டினுள் சிறை வைத்துள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் எம் செயல்கள் மூலமாகவே விடுவிக்க வேண்டும் யான்.
முற்றும்
If you would rise but a cubit above race and country and self you would indeed become godlike.
If I were you I would not find fault with the sea at low tide.
It is a good ship and our Captain is able; it is only your stomach that is in disorder.
Should you sit upon a cloud you would not see the boundary line between one country and another, nor the boundary stone between a farm and a farm.
It is a pity you cannot sit upon a cloud.
Seven centuries ago seven white doves rose from a deep valley flying to the snow-white summit of the mountain. One of the seven men who watched the flight said, "I see a black spot on the wing of the seventh dove."
Today the people in that valley tell of seven black doves who flew to the summit of the snowy mountain.
In the autumn I gathered all my sorrows and buried them in my garden.
And when April returned and spring came to wed the earth, there grew in my garden beautiful flowers unlike all other flowers.
And my neighbors came to behold them, and they all said to me, "When autumn comes again, at seeding time, will you not give us of the seeds of these flowers that we may have them in our gardens?"
It is indeed misery if I stretch an empty hand to men and receive nothing; but it is hopelessness if I stretch a full hand and find none to receive.
I long for eternity because there I shall meet my unwritten poems and my unpainted pictures.
Art is a step from nature toward the Infinite.
A work of art is a mist carved into an image.
Even the hands that make crowns of thorns are better than idle hands.
Our most sacred tears never seek our eyes.
Every man is the descendant of every king and every slave that ever lived.
If the great-grandfather of Jesus had known what was hidden within him, would he not have stood in awe of himself?
Was the love of Judas' mother of her son less than the love of Mary for Jesus?
There are three miracles of our Brother Jesus not yet recorded in the Book: the first that He was a man like you and me, the second that He had a sense of humour, and the third that He knew He was a conqueror though conquered.
Crucified One, you are crucified upon my heart; and the nails that pierce your hands pierce the walls of my heart.
And tomorrow when a stranger passes by this Golgotha he will not know that two bled here.
He will deem it the blood of one man.
You may have heard of the Blessed Mountain.
It is the highest mountain in our world.
Should you reach the summit you would have only one desire, and that to descend and be with those who dwell in the deepest valley.
That is why it is called the Blessed Mountain.
Every thought I have imprisoned in expression I must free by my deeds.
End.
நன்றி ; திண்ணை
No comments:
Post a Comment