பவள சங்கரி
கற்றல்மட்டுமே என்றும் மார்கண்டேயனாக்குகிறது
காற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வதும் கற்றல்தான்!
அறுசுவையையும் அடிச்சுவடியாய் ஆக்கிவிடுகிறது
மறுபதிவையும் பதமாய் ஆக்கி்த்தந்து ஆச்சரியமூட்டுகிறது!
படரக்கற்பதும் சுடராய் ஒளிவீசவும் பக்குவமாய் பாட்டெழுதவும்
தனலும் தகிக்காமல் நந்தலாலாவாய் தீண்டுமின்பம் பெறச்செய்கிறது!
எச்சத்தின் ஆழத்தில் விழுதுபரப்பிய மரமானாலும் ஆணவமலத்தின்
மிச்சத்தையும் பட்டறிவின் சொச்சத்தையும் பக்குவமாய் விலக்கிவிட்டது!
துரோணாச்சாரியர்களும், ஏகலைவர்களும் போதித்த பாடங்களின்
சாரங்களை சமத்தாய் உள்வாங்க சாந்தமும் சத்தாயானது!
சேர்ந்த மண்ணின் தன்மையை தன்னலமாக்கிய தரம்
தானின்றி அமையாது உலகு என்ற தனித்தன்மையின் தன்னடக்கம்!
சூதையும் வாதையும் சுனாமியாய் வீறுகொண்டு அழித்தாலும்
பேதையாய் வாழும் மாந்தருக்கு நிதானத்தையும் போதிக்கிறது!
காட்சிகளற்ற பார்வையின் வீரியமும் மாசற்ற சோதியாய்
பறவையாய் பாசத்துடன் நேசமும் ஏற்கும் நம்பிக்கையாய்!
சரசரத்து வழிகாட்டும் சருகுகள்கூட தீயாய் அழிக்கும் தீமைகளை
பரபரப்பாய் இயங்கும் வாழ்க்கைக்குக்கூட பாதையமைக்கும் மாயம்!
படத்திற்கு நன்றி:
http://www.google.co.in/imgres?imgurl=http://www.littlenaturalcottage.com/wp-content/uploads/2011/07/521993Little-Girl-Learning-Her-Abc-s-Posters.jpg&imgrefurl=http://www.littlenaturalcottage.com/should-a-girl-go-to-college/&h=450&w=338&sz=31&tbnid=0yz6TcfOG5P0PM:&tbnh=84&tbnw=63&zoom=1&usg=__3Eb1bLuXAMemE00qmCWn76qUsTk=&docid=RkAV1RpH2wGT0M&sa=X&ei=JZI2Uoq4J8e4rAeUooFg&ved=0CDAQ9QEwAQ&dur=4777
//கற்றல்மட்டுமே என்றும் மார்கண்டேயனாக்குகிறது
ReplyDeleteகாற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வதும் கற்றல்தான்!//
கற்றல் என்னும் சுடரொளி அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.