பவள சங்கரி
வெற்றியின் முதல்படியைத் தொட்டேன்
தெற்றுப்பல் தெரியச் சிரித்தேன்.
இரண்டாம் முறை நடந்தபோது
தடுமாறி நிமிர்ந்து நின்றேன்.
அடுத்தமுறை வீழாமல் இருக்க
விவரமாய் இருக்கக் கற்றேன்.
வீழ்வதும் எழுவதும் வாடிக்கையாய் ஆகிப்போக
தாழ்வை எண்ணாமல் வாழ்வைமட்டும் ஏற்றேன்.
கதவுமூடி புழுங்கித் தவித்தபோது
சன்னல் திறந்து தென்றலில் குளிர்ந்தேன்.
காட்சியெல்லாம் கறுமையாய் ஆனாலும்
வெறுமையை வீசிஎறிந்து வெண்மைக்கு வித்திட்டேன்.
இலக்கிலே விலக்கம் என்ற சுணக்கம் கண்டபோது
சிந்தைவேர் துளிர்க்க சீராக முதல்முளைவிட்டது.
கற்றலும், கேட்டலும் கருதுபயன் என்போரிடம்
சுறுசுறுப்புத் தொற்றலில் சலசலப்பு நீச்சமானது.
சாவின் விளிம்பு வாழ்வின் எழுச்சி
உயிர்த்துடிப்பின் மலர்ச்சி!
எழுமின்! விழுமின்! வாழ்மின்!
படத்திற்கு நன்றி:
http://www.google.co.in/imgres?imgurl=http://fc00.deviantart.net/fs70/f/2011/099/f/9/motivational_poster__failure_by_the_shadowwolf-d3dljyo.jpg&imgrefurl=http://www.deviantart.com/morelikethis/artists/313180909?view_mode%3D2&h=600&w=750&sz=116&tbnid=naoI5qi-QoN-cM:&tbnh=85&tbnw=106&zoom=1&usg=__vXlCuWc3GLS-9zQKoFAlGp8id98=&docid=7VN7D3cPanCKIM&sa=X&ei=EuU7Uq-aCsqErgei-YGwDQ&ved=0CE0Q9QEwCg&dur=244
/// காட்சியெல்லாம் கறுமையாய் ஆனாலும்
ReplyDeleteவெறுமையை வீசிஎறிந்து வெண்மைக்கு வித்திட்டேன்... ///
அருமை அருமை... வாழ்த்துக்கள்...
//வீழ்வதும் எழுவதும் வாடிக்கையாய் ஆகிப்போக, தாழ்வை எண்ணாமல் வாழ்வைமட்டும் ஏற்றேன்.//
ReplyDeleteஅருமையான தன்னம்பிக்கை தரும் பதிவு. பராட்டுக்கள்.