பவள சங்கரி
சிப்பிக்குள் இருக்கும் துளிநீரும் முத்தாகிறது நிசப்தமாய்
ஆயிரம் தத்துவங்கள் சொல்லும் மலர்கள்கூட நிசப்தமாய்
மொட்டவிழும் இனிய தருணம்கூட நித்சலமாய், நிசப்தமாய்
சாரி சாரியாய் வரிசைகட்டி மாரிக்காக சேமிக்கும் நிசப்தமாய்
பாரி வள்ளலென வாரி வழங்கும் தேனமுதையும் நிசப்தமாய்
பரவசமாய் பகட்டாய் உடுத்தி மகிழ உயிர்விடும் நிசப்தமாய்
ஊணொளி உருக்கி உள்ளொலி பெருக்கி உவப்பிலா ஆனந்தம் நிசப்தமாய்
உணர்ந்துணர்ந் துணர்விழந்து உள்ளொளிபெருக் கியூய்ந்து நிசப்தமாய்
தணிந்துதணிந்து தாழ்வதே தகுநெறியென்று ஒடுங்கி நிசப்தமாய்
பணிந்து பணிந்து நாளும் பரமனைப்போற்றிட நிசப்தமாய்
இன்னுயிரின் இருளகன்று மண்ணுயிரனைத்தும் வளம்பெற நிசப்தமாய்
இயற்கையாய், இறையாய், இமயமாய், தியானத்தில் நானும் நிசப்தமாய்!
படத்திற்கு நன்றி:
http://silent-nona-light.deviantart.com/art/Nature-Smiles-139473848
நிசப்தமாய் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநானும் இதை நிசப்தமாய்ப்படித்து எனக்குள் நிசப்தமாய் மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.
ReplyDelete