Sunday, December 5, 2021

வளி(ழி)யில் வீழாத வாழ்க்கைப்படகு!

 


கூட்டுப்புழுவாய் ஒடுங்கி

குலைநடுங்கி கிடந்தாலும்

காட்டுத்தீ கழிவிரக்கமின்றி

ஊரெல்லாம் உசுப்பிவிட்டு

கட்டுக்கடங்காத கயமையுடன்

தொழிலையும் பணியையும்

முடக்கிப்போட்டு முடிவிலியாகி

அலைஅலையாய்

அதிர்வூட்டி அச்சுறுத்தினாலும்

குடிசையில் குடும்பமாய்

தொழிலாற்றி

காலத்தின் தேவையாம்

முகக்கவசமும்

கையுறை நாப்கினும்

தயாரித்து இன்று

நகரங்களுக்கும் நாடுகளுக்கும்

நன்மையளித்து

தாமுயர்ந்து தரணியாளும்

குடிசைத்தொழில்

காலத்தின் கட்டாயம்

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...