தனிமனிதத்துதி பாடியே தன் தலையில் தீமூட்டிக்கொள்வோர் தினத்திற்கு வாழ்த்துகள்! :-)
காரியத்திற்காய் பொய்யாய் அன்பு காட்டுவதும்கூட கருணைக்கொலை தான்!
வேண்டும்போது அணைப்பதற்கும் விலக்கும்போது விலகுவதற்கும் விலைமாதரல்ல மரணம்!
ஒவ்வொரு மூச்சிலும் தன்னைப்போல் பிறரையும் நேசித்து சுவாசித்தல் இனிது!
மீனுக்காக வலை விரிப்பவனுக்காகவும் காத்திருக்கிறது ஒரு திமிங்கலம்!
படைத்தவனின் கணக்கை மாற்றியமைக்க எந்த சாணக்கியத்தனமும் துணை நிற்காது!
ஆக்கத்தைவிட அழிவிற்காகத்தான் அதிகமாக மெனக்கெடவேண்டும் என தெரிந்தும் .. ஏன்?
தன்மானம் காக்கும் தழும்புகளை மறைக்கத் தேவையில்லை!
வெளியேற எண்ணும்முன் உள்வந்த
காரணத்தை கருத்தில் கொள்!
ஆகச்சிறந்த அடுத்த தலைமையை உருவாக்குபவரே நல்ல தலைவர், தலையாட்டும் தொண்டர்களை உருவாக்குபவர் அல்ல!
இழப்பை எண்ணி வருந்துவதை விட்டு
வரவை எண்ணி வாழ்ந்து பார்!
நீ வடிவமைக்காத உன் வாழ்வை இன்னொருவர்
எட்டு கோணலாக்கி விடக்கூடும்!
அசந்தால் அச்சம் ஆளைத் தீர்த்துவிடும்
துணிந்தால் எதுவும் துச்சம்தான்!
அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப்பறித்து தாம் வாழ எண்ணுபவன்
கெடுப்பார் இலானும் கெடுவான்.
No comments:
Post a Comment